வாய் துர்நாற்றம் நீங்க டிப்ஸ்

mouth smell solution in tamil

நம்மில் பலருக்கு பிரச்சனையாக உள்ள வாய் துர்நாற்றம் நீங்க டிப்ஸ் சிலவற்றையும் அதற்கான காரணிகளையும் பார்க்கலாம்.

வாய் நாற்றத்திற்கு வாயிலுள்ள நுண் கிருமிகள் தான் பெரும்பாலும் காரணமாக அமைகிறது. அதோடு வாய் துர்நாற்றம் வேறு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும்.

இந்த வாய் துர்நாற்றம் காரணமாக மற்றவர்களுடன் அருகில் நின்று பேசுவதற்கும் மற்றவர் அருகே நெருங்கி செல்வதற்கும் தயக்கமாக இருக்கும்.

இது எதனால் ஏற்படுகின்றது என்பதை புரிந்து கொண்டு அதற்கான சில தீர்வுகளை பின்பற்றும் போது அதிலிருந்து எளிதாக மீண்டு வரலாம்.

வாய் துர்நாற்றம் வர காரணம்

புகையிலை பாவனை

சிலர் புகையிலை பாவனை இருக்கும். இதுவும் வாய் துர்நாற்றத்திற்கான ஒரு காரணமாக இருக்கிறது.

புகையிலை ஈறுகளில் நோய் தொற்று ஏற்பட காரணமாக இருக்கிறது. இதனால் கெட்ட துர்நாற்றம் ஏற்பட வழி வகுக்கின்றது.

உணவுகள்

சில உணவுகளுக்கு துர்நாற்றத்தை ஏற்படுத்தும் குணங்கள் உண்டு. உதாரணமாக வெங்காயம் மற்றும் வெள்ளை பூண்டு.

இப்படியான உணவுகளை எடுத்துக்கொண்டால் நன்றாக வாயினை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

நோய்கள்

புற்றுநோய், கல்லீரல் சம்பந்தமான நோய்களும் வாய் துர்நாற்றத்திற்கான காரணமாக அமைகின்றது.

சரியாக பற்களை துலக்காமல் விடுதல்

தினமும் இரண்டு தடவைகள் பல் துலக்குதல் அவசியம். இதனை தவிர்த்தால் வாய் துர்நாற்றத்தை தவிர்க்க முடியாது.

செரிமான பிரச்சனை

உணவு செரிமான பிரச்சனை இருந்தாலும் வாய் துர்நாற்றத்திற்கு வழி வகுக்கும்.

உணவு செரிமான பிரச்சனை உள்ளவர்கள் அதற்கான தீர்வை பெற்றால் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

அசைவை உணவு

இந்த அசைவ உணவுகள் பற்களில் எளிதாக தங்கி விடுவதுடன் வாய் துர்நாற்றத்திற்கும் காரணமாக அமைகிறது.

அசைவ உணவு சாப்பிட்ட பின் வாய் சுத்தமாக இருக்க வேண்டும். உப்பு நீர் கொண்டு கொப்பளிக்கலாம் இல்லையேல் பற்பசை கொண்டு சுத்தம் செய்யலாம்.

இப்படி செய்தால் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.

வயிற்று புண் (அல்சர்)

வயிற்றில் புண் (அல்சர்) இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதற்கு சரியான மருந்தினை கொண்டுமாற்றுவது நல்லது.

வாய் துர்நாற்றம் நீங்க உணவுகள்

புதினா

இவை இலகுவாக கிடைக்க கூடிய ஒரு பொருளாகும். புதினா இலையை நன்றாக பல் ஈறுகளில் படும் படியாக மென்றால் வாய் துர்நாற்றம் குறையும்.

தினமும் ஒரு இரண்டு நிமிடங்கள் மென்றால் வாய் துர்நாற்றம் படிப்படியாக குறையும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றினை போதியளவு தண்ணீருடன் கலந்து தினமும் குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் படிப்படியாக குறையும்.

இந்த எலுமிச்சை சாற்றிற்கு வாய் துர்நாற்றத்தினை போக்கும் தன்மை உண்டு.

தண்ணீர்

தண்ணீர் குறைவாக குடிப்பதால் வாயில் வறட்சி ஏற்பட்டும் துர்நாற்றம் வீசும். இதனால் போதியளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் போதியளவு தண்ணீர் குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

காலையில் டீ அல்லது காப்பி குடிப்பதற்கு பதிலாக தண்ணீர் குடித்து வரலாம்.

காரட் ஜூஸ்

சுத்தமான காரட்டினை எடுத்து சாறு எடுத்து தினமும் அருந்தி வந்தால் வயிறில் புண் இருந்தால் ஆறி விடும்.

இதனால் வயிற்று புண்ணினால் வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

வாய் துர்நாற்றம் நீங்க சில டிப்ஸ்

  • அதிகமான தண்ணீர் குடியுங்கள்.
  • ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பின்பும் பற்களை துலக்கி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக தினமும் குறைந்தது இரண்டு தடவை பல் துலக்குங்கள்.
  • இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு முறையும் உங்கள் தூரிகையை (Brush) மாற்றிக்கொள்ளுங்கள்.
  • பல் பரிசோதனை மற்றும் பல் துப்பவரவு செய்தலை வழக்கமாகிக் கொள்ளுங்கள்.
  • வாய் தண்ணீர் சத்து இல்லாமல் வறண்டு போவதை தடுத்துக் கொள்ளுங்கள்.
  • பற்களுடன் சேர்த்து நாக்கினையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
  • கராம்பு மற்றும் ஏலக்காய் போன்றவற்றை வாயில் போட்டு மென்றால் வாய் துர்நாற்றம் குறையும்.
  • தேங்காய் எண்ணையில் வாயினை கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் குறையும்.

மேலும் பதிவுகளை இங்கே தொடர்ந்து படியுங்கள்..

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிடலாம்