இலக்கணம் என்பது ஒரு மொழியை பிழையின்றி பேசவும், எழுதவும் துணை புரிவது ஆகும். இலக்கணம் ஐந்து வகைப்படும். அவையாவன
- யாப்பிலக்கணம்
- எழுத்து இலக்கணம்
- சொல்லிலக்கணம்
- பொருள் இலக்கணம்
- அணி இலக்கணம்
எழுத்திலக்கணத்தின் கூறுகளாக குறிப்பிடப்படும் 12 கூறுகளில் ஒன்றான எண் இரண்டு உட்பிரிவுகளாகப் பிரித்து இரண்டு வகைப்படும்.
- முதல் எழுத்து
- சார்பெழுத்து
சார்பெழுத்துக்களின் ஒன்றின் உட்பிரிவுகளின் உப எழுத்தான முற்றியலுகரம் காணப்படுகின்றது.
Table of Contents
முற்றியலுகரம் என்றால் என்ன
முழுமை பெற்ற உகரம் முற்றியலுகரமாகும். தன் இயல்பான ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரமாகும்.
தனிக்குறில் அடுத்து சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய் மேல் ஊர்ந்து வரும் உகரமும், பொதுவாக சொற்களின் இறுதியில் மெல்லின மெய்யின் மேல் ஊர்ந்து வரும் உகரமும், இடையின மெய்யின் மேல் ஊர்ந்து வரும் உகரமும் ஆகிய மூன்றும் முற்றியலுகரம் எனப்படும்.
எடுத்துக்காட்டு :
மெல்லின மெய்யின்மேல் ஏறிய முற்றியலுகரம் – தும்மு, நண்ணு
இடையின மெய்யின்மேல் ஏறிய முற்றியலுகரம் – கதவு, வாயு
வல்லின மெய்யின்மேல் ஏறித் தனிக்குறிலையடுத்து வந்த முற்றியலுகரம் – பசு, தடு
தனிக்குறிலை அடுத்து சொல்லின் இறுதியில் வரும் வல்லின உகரம் (கு, சு, டு, து, பு, று) தன் இயல்பான மாத்திரை அளவிலேயே ஒலிக்கும்.
எடுத்துக்காட்டு – எடு, பசு, அது, பெறு, மறு
பொதுவாக சொல்லின் இறுதியில் வரும் மெல்லின உகரமும், இடையின உகரமும் தன் இயல்பான ஒரு மாத்திரை அளவிலேயே ஒலிக்கும்.
எடுத்துக்காட்டு – உண்ணும், தள்ளு, கதவு, அணு,
முற்றியலுகரம் பிரிக்கும் முறை
முற்று + இயல் + உகரம் = முற்றியலுகரம்.
குற்றியலுகரம் – முற்றியலுகரம் வேறுபாடு
ஒலிக்கும் தன்மை
உகரம் குறுகி ஒலித்தால் அது குற்றியலுகரமாகும். உகரம் முழுமையாக ஒலித்தால் அது முற்றியலுகரமாகும்.
மாத்திரை
மாத்திரை அளவில் இருந்து குறைந்து அதாவது, 1/2 மாத்திரை அளவில் குறைந்து குற்றியலுகரம் ஒலிக்கும். ஆனால் முற்றியலுகரமானது மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும் (1 மாத்திரை)
நெடில் குறில்
குற்றியலுகரத்தில் தனிநொடில் அடுத்து வல்லின உகர எழுத்து வந்தால் அந்த வல்லின எழுத்து தனக்குரிய 1 மாத்திரை அளவில் குறைந்து 1/2 மாத்திரை அளவில் ஒலிக்கும். அதுவே நெடில் தொடர் குற்றியலுகரமாகும். இது குற்றியலுகர வகைகளில் ஒன்றாகும். தனி நெடில் எழுத்துக்களை அடுத்து வல்லின உகர எழுத்துக்களில் ( கு சு டு து பு று ) ஏதாவது ஒன்று வந்தால் அதை தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருக்கும்.
வல்லின உகரங்கள், மெல்லின உகரங்கள், இடையின உகரங்கள்
குற்றியலுகரத்தில் வல்லின உகரம் மட்டுமே வரும். ஏனெனில் சொல்லின் இறுதியில் வரும் போது தனக்குரிய மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிக்கும்.
இடையின உகரங்கள், மெல்லின உகரங்கள் குற்றியலுகரத்தில் வராது. ஆனால் வல்லின உகரங்கள், இடையின உகரங்கள், மெல்லின உகரங்கள் மூன்றுமே முற்றியலுகரத்தில் வரும்.
Read more: மாதுளை இலையின் பயன்கள்