தனப்ராப்தி என்றால் என்ன

தனப்ராப்தி

“திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது முதுமொழி. இன்றைய வாழ்க்கை சூழலில் செல்வத்தினை சேர்க்கப் பலரும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அம்பானி, அதானி போல நாமும் எப்போது பணக்காரர்கள் ஆவோம் என்ற ஏக்கம் பலருக்கு உண்டு.

எனினும் சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே விளங்குகிறது. முறையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் போது தனப்ராப்தி கிடைக்கும்.

வீட்டில் செல்வ செழிப்புடன் இருக்க இந்து புராணங்கள் வலியுறுத்துபவை

1. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.

2. இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.

3. பசுவின் கோமியத்தை சிறிதளவு நீரில் கலந்து வீட்டில் தெளிக்கவும். இப்படி 45 நாட்கள் விடாமல் செய்திடத் தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

4. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதள வில்வத்தால் அர்ச்சித்து, வில்வ மாலை அணிவித்திடப் பணம் குவியும்.

5. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

6. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து, இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடச் செல்வம் சேரும். துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனைப் பூஜை செய்து வர தீமைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிப் பணப்பையில் வைக்கப் பணம் ஆகர்ஷணம் ஆகும்.

7. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திர சாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும். சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க அதிகமான பணம் கிடைக்கும்.

8. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் கல்கண்டு போட்டுத் தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

9. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கிப் பணப்பெட்டியில் வைக்கப் பணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.

10. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.

11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.

திடீர் தனப்பராப்தி

லாட்டரி, குதிரைப் பந்தயம், சீட்டாட்டம், சூது போன்றவற்றில் சம்பாதிக்கும் பணம் முறையற்றது.

லட்சக்கணக்கான மனிதர்கள் தங்களுடைய சம்பாத்யம், கடன், ஏமாற்றி அல்லது மறைத்துப் பெற்ற பணம், திருடிய தொகை, மனைவி குடும்பச் செலவிற்கு அளித்ததைத் தவறாகப் பயன்படுத்துதல், கோயிலுக்குரிய உண்டியல் பணம், பாத்திரச் சீட்டுப் பணம் இவ்வாறு விதவிதமான வழிகளில் வரும் தொகையே லாட்டரி டிக்கட் பரிசுத் தொகையாக மாறுகிறது.

அந்தப் பரிசுத் தொகை எத்தகைய சோகமான கர்மவினைகளைச் சுமந்து வரும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். லாட்டரி என்பது புதையல் யோகம், தனப்ராப்திதானே இதில் என்ன தவறு? என்ற வினாவும் எழும்.

லாட்டரி, குதிரை ரேஸ், சீட்டாட்டம் ஆகிய சூதாட்டங்களில் கிட்டுவது சம்பாத்யமோ அல்லது திடீர் தனப்ராப்தியோ ஆகாது. மேலும் திடீர் தனப்ராப்தியில் கூட நன்மைகளே ஏற்படும் என்று சொல்லவும் முடியாது. திடீர் தனப்ராப்தி ஏற்பட்டால் தக்க சற்குருவை நாடி அதனைப் பயன்படுத்தும் முறையை அறிதல் வேண்டும்.

Read more: சனி பகவான் வழிபடும் முறை

சித்திரை மாத சிறப்புகள்