பெண் குழந்தை பாதுகாப்பு கட்டுரை

Pen Kulanthai Pathukappu Katturai In Tamil

இந்த பதிவில் “பெண் குழந்தை பாதுகாப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

இன்று சமூகத்தில் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளும் ஒடுக்கு முறைகளும் ஓரளவு குறைந்து இருந்தாலும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

கல்வி எனும் ஆயுதம் பெண்களை இன்று சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற உதவியாக இருக்கிறது.

பெண் குழந்தை பாதுகாப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பெண் குழந்தைகள் வரம்
  3. சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு சீர்கேடுகள்
  4. இன்றைய சூழலில் பெண்களின் நிலை
  5. ஒரு வெற்றிகரமான சமுதாயம் என்பது
  6. பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்
  7. முடிவுரை

முன்னுரை

பெண் என்பவள் ஒரு சமூகத்தின் சிற்பி என்று கூறலாம். இவ்வுலகத்தில் பொறுமைக்கும் அன்புக்கும் இலக்கணமாக பெண்களை குறிப்பிட்டு கொள்ள முடியும்.

அன்பையும் அரவணைப்பையும் வழங்குவதில் தாய்க்கு நிகராக இங்கு யாருமே இல்லை. வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரு பெண் தனது பங்களிப்பை இந்த சமூகத்துக்கு செய்து கொண்டுதான் இருக்கிறாள்.

இந்த சமூகம் தோன்றவும் விருத்தியாகவும் ஒரு பெண் மூலகர்த்தாவாக விளங்குவதால் இங்கு பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

ஆனால் சமுதாயம் அவ்வாறில்லை பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மறுக்கப்படுகின்ற இந்த சூழலில் அவர்களது சவால்கள் பற்றியும் அவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பன தொடர்பாக இக்கட்டுரை நோக்குகிறது.

பெண் குழந்தைகள் வரம்

பெண்ணில்லா ஊரில் பிறந்தவர்கள் இரக்கம், அன்பு என்ற இயல்புகள் அற்றவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றார்கள்.

அதாவது பெண் குழந்தைகள் இருக்கின்ற வீடு மகிழ்ச்சியும் மங்களமும் நிறைந்ததாக இலக்கியங்களில் சித்தரிக்கப்படுகின்றது.

“மாதராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்” என்கிறார் ஒளவையார் வாழ்க்கையில் சகோதரிகளை மகள்களை பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்று சொல்லப்படுகிறது.

சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பு சீர்கேடுகள்

பொதுவாக நமது சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது.

பெண்களுக்கான பாதுகாப்பு, வாழ்க்கை செலவு தேவைகள் உயர்வாக கருதி பெண் குழந்தைகளை விரும்பாத ஒரு மரபு சமூகத்தில் காணப்பட்டது. இது பகுத்தறிவின்மையின் வெளிப்பாடாக இருந்தது.

இந்தியாவில் பிறந்த பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்ற செய்திகளும் இருக்கின்றன.

பெண் குழந்தைகள் விரும்பிய கல்வி கற்க முடியாது, விரும்பியவரோடு வாழ முடியாது, பாதுகாப்பாக சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாது, பிடித்த தொழில் துறையை தேர்ந்தெடுக்க முடியாது,

சிறுவயதில் திருமணம், சீதன கொடுமைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் என்று பல அடக்கு முறைகள் பெண்களுக்கு எதிராக நமது சமூகத்தால் கட்டமைக்கப்படுகிறது.

பெண்பிள்ளைகள் சுதந்திரமாக வாழவோ அவர்களது கனவுகளை சாத்தியப்படுத்தவோ பெரும் சவாலாக இருக்கிறது. ஆனால் இன்று கணிசமான அளவு இந்த நிலை மாறியுள்ளது.

இன்றைய சூழலில் பெண்களின் நிலை

இன்றைய சூழலில் பெண்கள் அதிகம் கல்வி, தொழில், துறைகள் எல்லாவற்றிலும் ஆண்களுக்கு இணையாக முன்னேறி வருகின்றனர்.

பெண் குழந்தைகள் யாருடைய திணிப்புக்களும் இன்றி சுதந்திரமாக வாழ கல்வி ஒரு ஆயுதமாக மாறியுள்ளது.

குடும்பங்களில் ஆண்களுக்கு நிகராக இன்று பெண்களும் சம்பாதிக்கின்றனர். எல்லா துறைகளிலும் பெண்கள் சாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இது ஆகச் சிறந்த மாற்றமாக பார்க்கப்படுகின்றது. முன்பு போல் அல்லாது வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் குரல் கொடுக்கின்றனர்.

பாரதியார் எதிர்பார்த்த பெண் சுதந்திரம் ஓரளவாயினும் இன்று கிடைத்துள்ளது. ஆனால் இவற்றை பயன்படுத்தி தவறான வழியில் செல்லும் ஒழுக்க பிறழ்வான பெண்கள் இன்று அதிகமாகி செல்வது வருத்தத்திற்குரியதாகும்.

ஒரு வெற்றிகரமான சமுதாயம் என்பது

பெண்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ கூடிய ஒரு சமூகம் வெற்றிகரமானது.

அநீதிகளற்ற பொறுப்பான பிரஜைகள், ஆக்கபூர்வமான சிந்தனை கொண்ட இளைஞர்கள், வன்முறைகளற்ற மதத்தின் பெயரால் அநீதிகள் இளைக்காத இயற்கையின் இருப்பை பாதுகாத்து செயற்படுகின்ற ஒரு சமூகம் வெற்றிகரமானதாக இருக்கும்.

இவ்வாறான எண்ணப்பாங்குடைய மக்களால் உருவாகின்ற தேசம் உலகத்தில் தலைசிறந்த தேசமாக இருக்கும்.

பெண்குழந்தை பாதுகாப்பு சட்டம்

இன்றளவில் பெண்கள் சமூகத்தில் பாதுகாகக்ப்பட வேண்டும் என்பதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம்

Devadasi System (Abolition) Act, Dowry Prohibition Act Prohibition Of Child Marriage Act, Production Of Children From Sexual Offences, Protection Of Women From Domestic Violence, The Sexual Harassment Of Women At work Place.

ஆகிய சட்ட ஏற்பாடுகள் பெண்களை பாதுகாக்கும் நோக்கில் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

முடிவுரை

இயற்கையின் விதி படி பெண்ணை காட்டிலும் ஆணை வலிமையாக கடவுள் படைக்க காரணம் பெண்களை ஆண்கள் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தான். எமது சகோதர உறவுகளை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.

இன்றைய சூழலில் பெண் குழந்தைகள் ஆபத்தானதொரு சூழலை எதிர்கொள்வது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது.

சட்ட ரீதியாகவும் உரியவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை இவ்வாறான இன்னல் தருகின்ற நிலை எமது சமுதாயத்திற்கு ஏற்புடையதல்ல ஆகவே இதற்கெதிராய் போராடுவதை தவிர நமது சமூகத்திற்கு வேறு வழியில்லை.

You May Also Like :

ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை

சமூக வலைத்தளங்கள் பற்றிய கட்டுரை