கலை வகைகளுல் பிரதானமான ஒன்றாக இவ் நுண்கலை காணப்படுகின்றது. இவ்வாறாக நுண்கலைகளின் வடிவமாக இன்று ஓவியம், சிற்பம் மற்றும் கட்டிடகலை போன்ற கலை வடிவங்களே காணப்படுகின்றன.
Table of Contents
நுண்கலை (fine art) என்றால் என்ன
நுண்கலை என்பது அழகின் வெளிப்பாடாக அமைந்த ஒரு கலை வடிவமே நுண்கலை எனப்படும். இன்று நம் நாட்டை பிரதிபலிப்பது நுண்கலைகளே ஆகும்.
அதாவது நுண்கலை பயன்பாட்டைக் குறித்துக் கவனம் கொள்ளாத ஓர் அறிவார்ந்த தூண்டலாகவும் அழகின் வெளிப்பாடாகவும் அமைந்த கலை வடிவமாகும்.
இசை மற்றும் இலக்கியம் பேன்றவையும் நுண்கலைகளுல் ஒன்றாக திகழ்கின்றன. அது மாத்திரம் அல்லாமல் நடனம், இலக்கியம், நாடகக் கலை போன்றவையும் நுண்கலைகளின் வடிவங்களுள் ஒன்றாகவே திகழ்கின்றன.
நுண்கலையின் பண்புகள்
ஒருவருடைய ஆளுமை பண்புகளை சிறந்த முறையில் வடிவமைத்து கொள்ள நுண்கலையானது துணை புரிகின்றது.
மேலும் எதிர்காலத்தை கணிக்கும் கலைகளின் திறனை பிரதிபலிக்க கூடியதாக காணப்படும். வாழ்வின் பல்வேறு நிலைகளில் அழகின் தன்மையை வெளிப்படுத்தக் கூடியதாக காணப்படுகின்றது. மேலும் கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாகவும் காணப்படும்.
கட்டிடக்கலை
வரலாற்று நாகரீகங்கள் பெரும்பாலானவை அவர்களின் கட்டிடக்கலை சாதனைகளின் ஊடாகவே அடையாளம் காணப்படுகின்றன. கட்டிடக்கலையானது ஒரு நினைவு சின்ன கலை வடிவமாகும்.
இந்த கட்டிடக்கலையானது கலாச்சார சின்னங்கள் மற்றும் கலைப் படைப்புக்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
கட்டிடக்கலையானது நினைவு சின்ன ஓவியம், சிற்பம், அலங்காரம் மற்றும் பிற கலை வடிவங்களுடன் இணைக்க கூடியதாக காணப்படுகின்றது.
சிற்பம்
கலை வடிவங்களுள் ஓர் சிறந்த கலையாக சிற்பம் காணப்படுகின்றது. சிற்பமானது கடினமான அல்லது நெகிழ்வு தன்மை கொண்ட பொருள்களுக்கு உருவம் கொடுப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றது.
மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சி கூறுகளையும் எடுத்துக் காட்டுகின்ற ஒன்றாக சிற்ப கலையானது திகழ்கின்றது. அதாவது கற்பனை உருவங்களை வடிவமைத்து செய்வது சிற்பம் எனப்படும்.
ஓவியம்
ஓவியமானது வரைதல் போன்ற அழகியல் சார்ந்த செயற்பாடுகளை உள்ளடக்கியதாக ஓவியக்கலை காணப்படும். இது கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு வகையாகவே காணப்படுகின்றது. வர்ணபூச்சுகளின் ஊடாக சிறந்த முறையில் ஒன்றை பற்றி அறிய ஓவியம் துணை புரிகின்றது.
நடனக்கலை
நுண்கலை வடிவங்களுள் நடனக்கலையும் ஒன்றாகவே காணப்படுகின்றது. இது ஒரு கலை வடிவமாகவே காணப்படுகின்றது. நடனமானது இசையோடு தொடர்புபட்டதொன்றாகவே உள்ளது. ஒரு இசையின் மூலமே நடனமானது உருவாகின்றது.
இலக்கியம்
இலக்கியமானது இன்று பல்வேறு சமூக நிகழ்வுகளை உள்ளடக்கியதாக வளர்ந்து வருகின்றது. இலக்கியமானது தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.
மேலும் சமுதாய மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களது இலட்சியம் இலக்கு போன்றவற்றை இலக்கியமானது படம்பிடித்து காட்டுகின்றது.
அதாவது மக்களது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் எடுத்து கூறுகின்றவையாக இலக்கியங்கள் காணப்படுகின்றன.
இசை
இசை என்பது நுண்கலை வடிவங்களில் ஒன்றாகும். இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட அழகு ஒலி முறையே இசையாகும்.
அதாவது மனிதன் மற்றும் ஏனைய உயிரினங்களை பணிய வைக்கின்ற ஓர் அருஞ் சாதனமாகவே இசை காணப்படுகின்றது. மேலும் செவிக்கு இன்பம் தரும் ஒலிகளை கொண்ட ஒரு கலையே ஆகும்.
இன்று படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரும் இசையை கேட்டுக் கொண்டே இருக்கின்றமை இசையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.
நுண்கலையானது இன்று பல வடிவங்களை பெற்று காணப்படுவதோடு ஒரு தனி மனிதன் மட்டுமல்லாது அனைவரும் தனது ஆளுமையை விருத்தி செய்து கொள்ள நுண்கலையானது துணை புரிகின்றது.
Read more: நாகரிகம் என்றால் என்ன