பெண்ணியம் என்றால் என்ன

penniyam enral enna

பெண்ணியம் என்றால் என்ன

உலகளாவிய நிலைப்பாட்டைக் கொண்ட பெண்ணியம் பெண்களின் சமத்துவத்தை வலியுறுத்துகின்றது.

1889 வரை “Womanism” என்ற சொல் பெண்களின் உரிமைப் பிரச்சினைகளையும் அதன் அடிப்படையிலான போராட்டத்தையும் உணர்த்தப் பயன்பட்ட நிலையில் 1980ஆம் ஆண்டு “Feminism” என்று மாற்றம் பெற்றது.

Feminism என்ற ஆங்கிலச் சொல்லானது “Femina” என்ற இலத்தீன் சொல்லிருந்து மருவி வந்ததாகும். 1894 ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் முதன்முதலில் இச் சொல் எழுதப்பட்டிருக்கின்றது.

பெண்ணியமானது பெண் தன் இருத்தலை உணர்ந்து தனக்கும் தன் இனத்துக்குமான போராட்டத்தைத் தொடங்கிய பெண்ணியம் இன்றைய நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சுய அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ள போராட முன்வர வேண்டும் என்று உணர்த்தி நிற்கின்றது.

பெண்ணியம் என்றால் என்ன

தொடக்க நிலையில் பெண்ணுரிமை என்றும் பெண் விடுதலை என்றும் எளிமையாகக் குறிப்பிடப்பட்டு 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெண்ணியம் அல்லது பெண்நிலைவாதம் என்ற பெயர்களுடன் ஆழமாக நிலைப்பட்டுப் போயிருக்கும் இச்சித்தாந்தம் குறித்த வரையறையை அறிவியல் துறைகளைப் போல ஓரிரு வரிகளுக்குள் அடக்கிக் கூறிவிட முடியாது.

பெண்ணியமானது ஒரு “சமூகத்தின் வரலாறு, பண்பாடு இவற்றைப் பற்றிய உணர்வு, நோக்கு, செயல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்” என்று சமூகவியல் துறை சார்ந்த முத்துச் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணியம் என்பதற்குப் பல விளக்கங்கள் தரப்பட்டு வருகின்ற நிலையில் அதில் பல வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படையில் பாலியல் சமத்துவம் என்ற பொருளையே தருகின்றது.

கார்டன் எனும் அறிஞர் “பெண்களின் தாழ்நிலையை ஆராய்ந்து அதை மாற்ற மேற்கொள்ளப்படும் வழிமுறைகளே பெண்ணியம்” என்று வரையறை செய்கின்றார்

ஜெயின் எனும் அறிஞர் “பெண்ணியம் என்பது பெண்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து ஒரு ஆற்றலை உருவாக்கி பெண்மை அதன் தன்மையில் ஆண்களோடு மாறுபட்டிருப்பினும், இது ஆண்மைக்கு நிகரானது என்பதனை ஏற்றுக் கொள்ள வைப்பது” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

எனவே பெண்ணியம் என்பது பெண்கள் தங்களை வடிவமைத்து கொள்வதை குறிப்பதாக கொள்ளலாம்.

தங்களுக்கான தேவைகளை தாங்களே வடிவமைப்பதையும் அதை அடைவதற்கான வழிமுறைகளை தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுதல் என்று பொருள் கொள்ளலாம்.

மேலும் பெண்களின் தேவைகளை நிறைவேற்ற அவர்கள் சார்பாக வாதாடுவது, போராடுவது என்றும் பொருள் கொள்ளலாம்.

பாரதியின் பெண்ணியம்

மனித இனச் சமன்பாட்டைப் பேணுவதே பெண்ணியத்தின் தலையாய கோட்பாடாகும்.

“பெண்ணடிமை தீரும் மட்டும்
பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பே”

என்று பாவேந்தர் பெண்கள் விழிப்புணர்வு பெற்று அடிமை நிலையிலிருந்து விடுபடும்வரை நாட்டில் மக்களை அடிமைப்படுத்தும் நிலையை மாற்ற இயலாது என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து நாம் பெண்தான் நாட்டின் உயர்நிலைக்கு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பாடுபடுகின்றாள் அவளைப் பேணுதல் சிறந்தது என்பதை உணர வழிவகை செய்கின்றார்.

பெண்கள் அறிவை வளர்த்தால் வையகம் “பேதமையற்றிடும் காணீர்” என்று அன்றே பெண்ணின் கல்வியைப் பற்றி யோசித்தவர் பாரதியாராவார்.

ஒரு தலைமுறை பெண்கள் நினைத்தால் ஒரு பெரிய சமுதாயமே உருவாக்க முடியும் என்று அன்று அவர் தொடங்கி வைத்ததுதான் இன்று வாகனம் ஓட்டுவதில் தொடங்கி ஓட்டுரிமை வரை பெண்கள் முதன்மையாக நிற்பதற்கு ஓர் ஆணித்தனமான காரணமாகும் எனலாம்.

Read more: பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை

பெண்களின் சிறப்பு கட்டுரை