நாகரிகம் என்றால் என்ன

nagarigam enral enna

நாகரிகம் என்றால் என்ன

மிகப் பழமையான காலம் தொடக்கம் மனிதன் கிராமங்களில் வாழத் தொடங்கினான் விவசாயத்திலும் மந்தை வளர்ப்பிலும் ஈடுபட்டு முன்னேற ஆரம்பித்தனர்.

நல்ல விளைச்சல்களைப் பெற்றவர்கள் செல்வந்தர்களாகவும், போதிய விளைச்சல் கிடைக்காதவர்கள் ஏழைகளாகவும் மாறினர்.

இதன் காரணமாகவே ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு மனிதனுக்கு ஏற்பட தொடங்கியது. இதுவே நாகரிகம் தோன்ற அடிப்படையாக அமைந்தன.

செல்வந்தர்கள் தங்கள் உறவுகளுடன் கிராமங்களை விட்டு பிரிந்து நகரங்களில் வாழ தொடங்கினர். இதன் காரணமாக நகரப்புறங்களில் பல வகையான பண்புகள் காணப்பட்டன.

  • நகரங்கள் கிராமங்களை விட பெரிதாக காணப்பட்டது. பெரிய நகரங்களில் வாழ்ந்தவர்கள் எழுதுவதற்கும் கற்றுக் கொண்டனர்.
  • நகரை நிர்வாகம் செய்ய ஒரு பிரிவினர் இருந்தனர்.
  • மண் குடிசைகளுக்கு பதிலாகக் கல்வீடுகள் கட்டப்பட்டன.
  • நன்கு அமைக்கப்பட்ட பாதைகள், அகழிகள், வேலிகளுக்குப் பதிலாக மதில்களை அமைக்க தொடங்கினர்.
  • சமய வழிபாடுகளுக்கான வழிபாட்டுத்தலங்களை அமைத்துக் கொண்டனர்.

இவ்வாறு நகரங்களில் வாழ்ந்த மக்களை நகரவாசிகள் என அழைத்தனர். செல்வந்தர்களாக மாறிய பின்னர் இவர்கள் விவசாயம் செய்ய விரும்பவில்லை. அதற்கு பதிலாக தங்கள் நிலத்தில் கிராமப்புற ஏழைகளைக் கொண்டு வேலைகளைச் செய்வித்தனர்.

நாகரிகம் என்றால் என்ன

நாகரிகம் என்பது நகர மக்களின் திருந்திய வாழ்க்கை ஆகும்.

அதாவது நாகரிகம் என்பது நாடோடிகள், பழங்குடிகள் போல இல்லாமல் நகர வாழ்க்கையை மேற்கொண்டு விவசாயத்தைப் பயன்படுத்தும் நிலையையும், விளையும் பொருட்களை வணிகம், மற்றும் இதர தொழில்களிலும் ஈடுபடும் சமூக நிலையையும் குறிக்கும் சொல்லாகும்.

நாகரிகங்கள் முதல் தோன்றியது உழவுத் தொழில் சிறந்த மருத நிலத்திலாகும். உழவுத் தொழிலும், நிலையான குடியிருப்பும் நாகரிகம் தோன்ற உதவின.

உலகின் பழமையான நாகரிகங்கள்

உலகில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பல்வேறு காலப்பகுதியில் தமது நாகரிகங்களை அமைத்துக் கொண்டனர். உலகில் நான்கு புரதான நாகரிகங்கள் காணப்படுகின்றன.

அவையாவன மொசபதேமியா நாகரிகம், சிந்து நதி நாகரிகம், எகிப்திய நாகரிகம், குவாங்கோ நாகரிகம் போன்றவை ஆகும்.

இந்த பழமையான நான்கு நாகரிகங்களும் நதிக்கரையை அண்மித்தே தோற்றம் பெற்றன.

அந்தவகையில் மொசபதேமியா நாகரிகம் யூப்ரடீஸ் டைகிரீஸ் நதியை அடிப்படையாகக் கொண்டதாகவும், எகிப்திய நாகரிகம் நைல் நதியை அடிப்படையாகவும், குவாங்கோ நாகரிகம் குவாங்கோ நதியை அடிப்படையாகவும் கொண்டு தோற்றம் பெற்றன.

உலகின் புரதான நாகரிகங்களும் கண்டுபிடிப்புகளும்

உலகின் புரதான நாகரிகங்களில் பல்வேறு கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கால கண்டுபிடிப்புகள் இப்போதும் பயன்படக்கூடியதாக உள்ளன.

மொசப்பத்தேமியா கணிதவியலாளர்களால் வட்டத்திற்கு 360 பாகை உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மணித்தியாலத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன என்பதையும் இலக்கங்களை எண்ணுவதற்கான விளக்கங்களையும் கண்டுபிடித்தவர்களாக மொசப்பத்தேமியா கணிதவியலாளர்கள் காணப்படுகின்றனர்.

சீனாவால் அறிமுகப்படுத்தப்பட்டவையாக வெடிமருந்து, திசையறி கருவி, கடுதாசி, அச்சியந்திரம் போன்றவை காணப்படுகின்றன.

மாயர் நாகரிகம் மெக்ஸிகோ நாட்டை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்ற நாகரிகமாக காணப்படுகின்றது. மாயர்களே ரப்பர் பந்தை முதன் முதலில் பயன்படுத்தியவர்களாக காணப்படுகின்றனர்.

இத்தகைய பழமையான நாகரிகத்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல பொருட்கள் இன்றும் எமது வாழ்வில் முக்கியம் பெற்று விளங்குகின்றன.

சிந்து நதி நாகரிகம்

இந்தியாவின் வடமேற்கு திசையில் ஓடும் சிந்து நதியை மையமாகக் கொண்டு எழுச்சி பெற்றதே சிந்து நதி நாகரிகமாகும். தற்போது இந்தியாவின் வடமேற்கு பகுதி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பிரதேசங்களுக்குரியதாக உள்ளது.

இது கி.மு 2000 – கி.மு 1900 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலவியது. இன்றைக்கு 4500 ஆண்டுகளுக்குட்பட்ட நாகரிகமாக காணப்படுகிறது. சிந்து நதி நாகரிகத்தில் மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இரண்டு பிரதான நகரங்கள் காணப்பட்டன.

Read more: பண்பாடு என்றால் என்ன

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை