துலாம் ராசியிலே பிறந்தவர்களுடைய குணங்கள் எவ்வாறாக அமைந்திருக்கும் என்பதை இக்கட்டுரையில் நாம் காண்போம்.
துலாம் ராசி குணங்கள்
பொதுவாக துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே தங்கள் அழகில் அதிக அக்கறை உடையவர்களாகவும் நடுத்தரமான உயரம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.
எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சியளிக்க கூடியவர்களாக இருப்பார்கள் இதனால் பிறரை ஈர்க்க கூடிய வசீகர தோற்றம் உடையவர்களாக விளங்குவர்.
பொதுவாகவே மனைவியின் மீது அதிக பிரியம் உடையவர்களாகவும் இருப்பார்கள் மற்றும் சிறப்பான கலைநயம் உடையவர்களாகவும் ஆடம்பரங்கள், கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் போன்றவற்றில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.
அதிகளவான மனிதர்களுடன் இவர்கள் பழகினாலும் நெருங்கிய நண்பர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுவார்கள்.
மேலும் இவர்கள் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசி விடுவார்கள் இதனால் உறவினர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் மனக்கசப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
பிறருக்கு எதிர்பார்ப்புக்கள் எதுவும் இன்றி உதவி செய்ய கூடிய நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.
பண விடயங்களில் தாராளமாக செலவு செய்ய கூடியவர்களாக இருப்பதனால் கடனாளிகள் ஆகவும் சந்தர்ப்பங்கள் உள்ளது.
இவர்கள் அதிகம் உணவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதனால் வயிறு சார்ந்த நோய்களுக்கு ஆளாவர்.
தொழில் துறைகளில் சட்டத்துறை வியாபாரத்துறை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். எந்த தொழிலை எடுத்து கொண்டாலும் அதில் நிபுணத்துவம் பெற்று விளங்க கூடியவர்களாக இருப்பார்கள்.
பொதுவாகவே இவர்கள் உயர்ந்த செல்வாக்குடைய மனிதர்களிடம் மிகவும் இலகுவாகவே பழகி விடுவதனால் அவர்களது நட்பின் மூலம் உயர்ந்த பல காரியங்களை இலகுவாக சாதித்து விடுவார்கள்.
இவர்கள் எவ்வளவு உயர்ந்த மனிதர்களாக இருந்தாலும் பிற மனிதர்களோடு அன்போடும் எளிமையாகவும் பேச கூடியவர்களாவர்.
சுக்கிரனின் ஆதிக்கத்துக்கு உள்ளானவர்கள் ஆதலால் நேர்மையே குறிக்கோளாக கொண்டவர்களாக விளங்குவார்கள். இவர்கள் நேர்மையாக இருப்பதனை போலவே மற்றவர்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.
ஒரு தராசு எவ்வாறு மற்றவர்களை எடை போடுகின்றதோ அதனை போல மற்றவர்களை இலகுவாக எடைபோட்டு வைத்திருப்பார்கள்.
இவர்கள் சிறப்பாக உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவார்கள்.
மிகவும் உறுதியான பேச்சாற்றலை கொண்ட இவர்கள் எல்லா சூழ்நிலையிலும் சந்தோசமாக இருக்க கூடியவர்கள். வாக்கு சாதுரியம் கொண்ட இவர்களிடம் பேசி வெற்றி பெறுவது கடினமாகும்.
எந்த கடினமான சூழலிலும் நிதானமாக சிந்தித்து நல்ல முடிவுகளை எடுக்கும் ஆற்றல் உடையவர்கள். தோல்விகள் வந்தாலும் துவண்டு போகாமல் முன்னேறி செல்லும் திறன் படைத்தவர்களாக விளங்குவார்கள்.
சுயநலம் இன்றி தமது கடமையை சரியாக செய்ய கூடியவர்கள் என்பதில் தனி சிறப்புடையவர்களாக விளங்குவார்கள்.
You May Also Like : |
---|
வில்வம் மருத்துவ பயன்கள் |
கன்னி ராசி குணங்கள் |