தஞ்சை பெரிய கோவில் பற்றிய கட்டுரை

Thanjai Periya Kovil Katturai In Tamil

இந்த பதிவில் “தஞ்சை பெரிய கோவில் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

தமிழர்களாகிய நாம் தமிழின் பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் என்று எண்ணி பெருமிதம் கொள்வோம்.

தஞ்சை பெரிய கோவில் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தஞ்சை பெரிய கோவில் வரலாறு
  3. ராஜராஜ சோழன்
  4. கட்டடக் கலையின் பிரமாண்டம்
  5. பெருமைகள்
  6. உலகின் மரபுரிமை சொத்து
  7. முடிவுரை

முன்னுரை

தமிழர்களின் அடையாளம் கட்ட கலையின் பெருமிதம் பிரம்மாண்டத்தின் உச்சம் சோழ பேரரசன் இராஜராஜசோழனின் தனிப்பெரும் சின்னம் என்று பெருமைக்குரிய அடையாளங்களை கொண்டது தஞ்சை பெருவுடையார் கோவில்.

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட வேண்டிய இந்த கோவில் “UNESCO” இன் மரபுரிமை சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் இந்த கோயிலில் தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் என்பன பொதிந்து கிடக்கின்றன.

தமிழகத்தின் முதுபெரும் சாட்சியாக பெருவுடையார் கோவில் திகழ்கிறது. இக்கட்டுரையில் இதனை பற்றி காண்போம்.

தஞ்சை பெரிய கோவில் வரலாறு

தென்னிந்திய வரலாற்றில் சோழர் காலத்தில் உருவான அருண்மொழிவர்மன் என அழைக்கப்பட்ட இராஜராஜசோழன் எனும் மன்னனே இந்த கோவிலை கட்டியதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

புகழ்பெற்ற ஆலயங்கள் பலவும் கட்டப்பட்ட இந்த காலத்தில் தன் கனவில் நிகழ்ந்த நிகழ்வினை கொண்டே இந்த பிரமாண்டமான கோயிலை இராஜஇராஜ சோழன் ஆறே(06) ஆண்டுகளில் கட்டி முடித்தான் என்பது வரலாறு.

இராஜராஜ சோழன்

தமிழக வரலாற்றில் சோழர்காலம் பொற்காலம் என்று அறியப்படுகிறது. சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாக இராஜராஜ சோழன் பிறந்தார்.

போர்க் கலையின் திறம்பட செயற்பட்ட இராஜராஜசோழன் தெற்கே ஈழம் முதல் வடக்கே கலிங்கம் முதல் தனது வெற்றிக்கொடியை நாட்டினான்.

கப்பல் படை, யானைப் படை போன்ற பலமான படைகளை கொண்டு தென்கிழக்காசியா வரை இவனது ஆட்சி பரந்திருந்தது.

இதனால் கிடைத்த அதிகளவான பொருளாதாரம் இவரை பேரரசனாக உலகுக்கு காட்டியது கைப்பற்றிய இடங்களில் எல்லாம் சிவாலயங்களை உருவாக்கிய இவர்தான் பிரமாண்டமான செலவில் இந்த கோயிலையும் உருவாக்கினார்.

கட்டடக்கலையின் பிரம்மாண்டம்

உலகத்தில் பல ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. இருப்பினும் இந்த “பிருகதீசுவரம் (தஞ்சைப் பெருவுடையார் கோயில்)” ஏன் இவ்வளவு பெருமை உடையது?

ஆம் இந்த கோவில் “குஞ்சரமல்லன்”, “இராஜ ராஜ பெரும் தச்சன்” போன்ற பொறியிலாளர்களின் வழிகாட்டுதலில் இந்த பிரமாண்டமான கட்டக்கலை அதிசயம் உருவானது.

ஒரு லட்சத்து முப்பதாயிரம் டண் எடை கொண்ட தனி “கிறனைட்” கற்களால் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை அண்டி 60 மைல் சுற்றளவுக்கு கற்பாறைகளே இல்லை என்பது வியப்பு.

இந்த கோவில் கற்களை கொண்டுவர முப்பதாயிரத்துக்கும் அதிகமான யானைகள் பயன்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. 600 சிற்பிகள் மற்றும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் இந்த கோவிலை கட்டினர் எனவும் கூறப்படுகிறது.

216 அடி உயரமான பிரம்மாண்ட கோபுரம் அதன் மீது 81 டண் எடை கொண்ட ஒரே கல்லிலான வட்ட வடிவ பிரம்ம மந்திரக்கல் என்பன அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல கட்டடக்கலை சிறப்புக்களை இந்த கோயில் உடையது.

பெருமைகள்

தஞ்சை பெரிய கோவில் கோவில் பல பெருமைகளை உடையது. உலகிலேயே பெரிய சிவலிங்கம் இந்த கோவிலின் மூலமூர்த்தியாக அமைந்திருக்கின்றது.

இந்த சிவலிங்கம் தமிழின் மெய் எழுத்துக்கள் 18 என்பதனால் 18 அடி உயரத்திலும் உயிர் எழுத்துக்கள் 12 என்பதனால் இந்த லிங்கம் 12 அடி உயரம் உடையதாகவும் தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் 216 என்பதனால் கோபுரத்தின் உயரம் 216 அடி ஆகவும் தமிழ் பெருமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த கோவிலின் நிழல் நிலத்தில் விழாமலும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல பெருமைகளை தன்னகத்தே உடையது.

உலகின் மரபுரிமை சொத்து

இத்தனை ஆண்டுகள் கடந்தும் அசையாமல் நிற்கின்ற இந்த கோவிலை சர்வதேச மரபுரிமைகள் ஸ்தபானம் மரபுரிமை சொத்தாக இதனை அறிவித்துள்ளது.

இன்றைய தொழில்நுட்பங்களை கொண்டு பெரிய கட்டடங்களை இலகுவாக அமைத்துவிட முடியும் ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த கோயில் தமிழர்களின் பொறியியல் மற்றும் அறிவியல் சாதனையாக உலகத்தாரால் பார்க்கப்படுகிறது.

முடிவுரை

தமிழர்களாகிய நாம் தமிழின் பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் என்று எண்ணி பெருமிதம் கொள்வோம்.

எமது மண்ணில் இதை போலவே பல பெருமைகள் நிறைந்துள்ளன அந்த வகையில் இந்த பெருமைகளை காத்து அதனை அடுத்துவரும் சந்ததிக்கும் கடத்துவதோடு எமது மொழியையும் பண்பாட்டையும் வளர்க்கும் வகையில் செயலாற்றவேண்டும்.

இதுவே எமது முன்னோருக்கு நாம் செய்கின்ற நன்றிக்கடனாகும்.

You May Also Like :

நவராத்திரி பற்றிய கட்டுரை

அறிவியல் வளர்ச்சி கட்டுரை