அறிவியல் வளர்ச்சி கட்டுரை

Ariviyal Valarchi Katturai In Tamil

இந்த பதிவில் “அறிவியல் வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.

நம் அன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்று. மனிதனின் வளர்ச்சி என்பது அறிவியலின் வளர்ச்சியுடன் இணைந்தே பயணிக்கிறது.

இன்றைய உலகில் அறிவியல் வளர்ச்சி என்பது பல ஆக்கபூர்வமான விடயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அழிவை ஏற்படுத்தவும் அறிவியலை பயன்படுத்துவது கவலைக்குரிய விடயமாகும்.

  • அன்றாட வாழ்வில் அறிவியல்
  • Ariviyal Valarchi Katturai In Tamil
இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை

அறிவியல் வளர்ச்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அறிவியலின் தோற்றம்
  3. அறிவியலின் வளர்ச்சி
  4. அன்றாட வாழ்வில் அறிவியல்
  5. முடிவுரை

முன்னுரை

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் தொடக்கம் பெரியவர்கள் வரை கைகளில் தொலைபேசி இன்றி யாரையுமே காணமுடியாது. கையில் தொலைபேசி மற்றும் கணனியை வைத்துக் கொண்டு இந்த உலகையே கைக்குள் அடக்கி விடுகின்றனர்.

உலகின் எந்தப் பாகத்தில் நிகழும் நிகழ்வையும் அறிந்து கொள்வதோடு பணபரிமாற்றம், இணைய வழிகல்வி மற்றும் உணவைக் கூட கட்டளை அனுப்புவதன் மூலம் வீட்டிற்கே வரவழைத்துக் கொள்கின்றனர்.

இதற்கெல்லாம் ஆணிவேராய் அமைவது அறிவியல். இவ்வுலகில் அறிவியல் இல்லையேல் மனிதவாழ்க்கையே இல்லை என கருதுமளவிற்கு அறவியலானது மனித வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது.

மருத்துவம், போக்குவரத்து, வானிலை, வேளாண்மை என அறிவியல் ஊருடுவாத துறைகளே இல்லை எனலாம். இக்கட்டுரையில் அறிவியல் வளர்ச்சி பற்றி காணலாம்.

அறிவியலின் தோற்றம்

மனிதனானவன் என்று அவனது வாழ்க்கையை இலகுபடுத்தும் ஒவ்வொரு விடயத்தையும் கண்டுபிடிக்கத் தொடங்கினானோ அன்றே அறிவியலானது தோற்றம் பெற்று விட்டது.

பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ முறைகள், மற்றும் கட்டட கலை வடிவங்கள் போன்றன இன்றைக்கு பல நூற்றாண்டுகளிற்கு முன்னரே தோற்றம் பெற்றுவிட்டன.

சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இரு கற்களை உரசுவதன் மூலம் தீப்பொறி உருவாகுவதை மனிதன் கண்டுபிடித்ததில் இருந்து சக்கரங்கள், உலோகங்கள் என மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

அறிவியலானது நம்மால் அறிந்து அளவிட மற்றும் முடிவுகளை எட்டக்கூடியவற்றை பற்றி மட்டுமே பேசுகின்றது. மனிதமூளைக்கு எட்டாதவைகளை பற்றியும், ஏனைய கணிக்க முடியாதவற்றையும் பற்றி அறிவியல் பேசாது.

அறிவியலின் வளர்ச்சி

அறிவியலின் தோற்றத்தை நாம் சரியாக கணிக்க முடியாதுள்ள போதும் நவீன அறிவியலானது, பதினேழாம் நூற்றாண்டு அளவிலேயே தோற்றம் பெற்றது.

ஆதிகாலம் தொட்டே கடவுளால் இந்த உலகம் படைக்கப்பட்டதாகவும், பூமியில் நடைபெறுகின்ற அனைத்துமே கடவுளின் செயல்களே என்ற மனித மூடநம்பிக்கையை மறுத்து இயற்கை மற்றும் ஏனைய பொருட்களின் தோற்றத்திலுள்ள அறிவியலை இந்த உலகிற்கு எடுத்துரைத்தவர்கள் அறிவியலாளர்களே.

அவர்களுள் ஆர்க்கிமிடிஸ், சோக்கிரட்டீஸ், அலெக்சாண்டர் தி கிரேட் மற்றும் கலிலியோ கலிலி ஆகியோர் முக்கியமானவர்களாவார். இவர்களாலே இன்று அறிவியலானது மிக உன்னதமான இடத்தை அடைந்துள்ளது.

இவர்களின் கண்டுபிடிப்புக்களே இன்றைய நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிற்கு வழிகோலின.

மின் காந்தவியல், அணுவியக்கவியல் மற்றும் இயற்கையில் தோற்ற விதிகளைப் பயன்படுத்தி இன்று அறிவியலானது கற்பனைக்கு அப்பாற்பட்ட உச்சத்தை எட்டியுள்ளது.

விண்கலங்களை உருவாக்கியதன் மூலம் பூமியில் வாழ்கின்ற மனிதன் இப்பூமியை விட்டு அண்டவெளிக்குள் பிரவேசித்து ஏனைய கோள்களைப் பற்றி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றான்.

அறிவியலின் பிரமாண்ட வளர்ச்சியானது மனிதனை பூமியை கடந்து ஏனைய கோள்களில் குடியேற வழி சமைத்துள்ளது.

காலம் காலமாக படிப்படியாக அறிவியலில் ஏற்றபட்ட மாற்றங்கள் இன்று மனித வாழ்க்கையை இலகுவாக மாற்றயுள்ளன.

அன்றாட வாழ்வில் அறிவியல்

எமது அன்றாட வாழ்வில் நாம் அறிந்தோ அறியாமலோ அறிவியலால் உருவாக்கப்பட்ட பல சாதனங்களை பயன்படுத்தி வருகின்றோம். அவை எமது செயற்பாடுகளை இலகுபடுத்துவதோடு, நேரத்தையும் மிச்சப் படுத்துகின்றன.

மின்சாரம் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நாம் நினைத்து பார்க்க முடியாது. அந்த மின்சாரத்தை இந்த உலகிற்கு அளித்தது அறிவியலே.

மின் விளக்குகள், வானொலி மற்றும் ஏனைய பொழுதுபோக்கு சாதனங்கள், குளிர்சாதனப்பெட்டி உட்பட அனைத்து சமையல் உபகரணங்கள் என அனைத்துமே அறிவியல் கலந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன.

மனிதர்கள் ஒவ்வொருவரினதும் அத்தியாவசிய தேவையாக விளங்குவது போக்குவரத்து. போக்குவரத்து சாதனங்களான பேருந்து, மிதிவண்டி, புகையிரதம் மற்றும் விமானம் போன்றன அறிவியலின் தோன்றல்களே.

பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் நுணுக்குக்காட்டி, பரிசோதனை உபகரணங்கள் போன்ற அனைத்துமே அறிவியலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன.

இவ்வாறு அறிவியல் மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகின்றது.

முடிவுரை

தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்ட இந்த விரைவான உலகமானது அறிவியலையே ஆதாரமாகக் கொண்டுள்ளது.

வணிக மற்றும் வர்த்தக நடவடிக்கைகள், வானியல் ஆய்வுகள், தொலைதொடர்பு என இவையனைத்துமே அறிவியியல் இல்லையேல் ஸ்தம்பித்துவிடும்.

ஆனால் தற்கால அறிவியலானது நன்மைகளை மட்டுமின்றி தீமைகளையும் உருவாக்குகின்றது.

உலகை பாதிக்கின்ற அணுஆயுதங்களை உருவாக்குதல், சூழலை பாதிக்கின்ற இயந்திரங்களை உருவாக்குதல் போன்றனவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

மனித வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த அறிவியலை நல்ல விடயங்களிற்கு மட்டும் பயன்படுத்தி சிறப்பாக வாழ்வோமாக.

You May Also Like :

கல்வி வளர்ச்சி கட்டுரை

சுத்தம் சுகாதாரம் பற்றிய கட்டுரை