பூமியில் எல்லா இடங்களிலும் காற்றானது பரவி இருக்கின்றது. அதாவது தரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று வியாபித்துள்ளது.
காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்தம் இருந்தால் நம்மால் உணர முடியும். ஆனால் காற்று நம்மை எல்லாப் புறங்களிலிருந்தும் அழுத்துவதால் காற்று அழுத்துவதை நம்மால் உணர முடிவதில்லை.
ஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும்.
ஓரிடத்தில் காற்றழுத்தம் மிக அதிகமாக இருக்கும். வேறிடத்தில் குறைவாக இருக்கும். இதற்கு சூரியனும் காரணம்.
காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும்.
எனவே இந்தக் காற்றின் அழுத்தங்களைக் கொண்டு வானிலை ஆய்வாளர்கள் ஒரு வரைபடத்தை வரைவார்கள். ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் காற்றழுத்த மானிகளைக் கொண்டு வானிலை ஆய்வாரள்கள் அளப்பர்.
ஒரே மாதிரியான அழுத்தங்கள் உள்ள இடங்களை கோடுகள் மூலம் இணைக்கின்றார்கள். இதற்கு “ISOBAR” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. L என்ற எழுத்து LOW அதாவது குறைந்த காற்றழுத்தம் உள்ள பகுதியாகும். H என்ற எழுத்து HIGH அதாவது அதிக காற்றழுத்தம் உள்ள பகுதியாகும்.
காற்றானது அதிக அழுத்தம் உள்ள இடத்திலிருந்து குறைவான அழுத்தம் உள்ள இடத்தை நோக்கி நகருகின்றது.
வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் காற்று வடகிழக்கிலிருந்து வீசுகின்றது. இவ்வாறு காற்று வீசும் காற்றானது ஆவி வடிவிலான நீரைத் தாங்கி வருகின்றது. இக் காற்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியை நோக்கி வீசும் போது அப்பகுதிகளில் மழை பெய்கின்றது.
எனவே தான் இந்தப் பகுதியை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அல்லது மண்டலம் உருவாகியுள்ளது. இதனைக் கணித்தே வானிலை ஆய்வு மையத்தால் இந்த இடங்களில் மழை பெய்யும் என்று கூற முடிகின்றது.
காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.
காற்றானது மணிக்கு 32 – 51 கி.மீ வேகத்தில் வீசினால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
காற்றானது மணிக்கு 52 – 62 கி.மீ வேகத்தில் வீசினால் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.
காற்றானது மணிக்கு 63 – 87 கி.மீ வேகத்தில் வீசினால் அது புயல்.
காற்றானது மணிக்கு 88 – 117 கி.மீ வேகத்தில் வீசினால் தீவிர புயல்.
காற்றானது மணிக்கு 118 – 165 கி.மீ வேகத்தில் வீசினால் மிகத் தீவிர புயல்.
காற்றானது மணிக்கு 165 – 221 கி.மீ வேகத்தில் வீசினால் கடும் தீவிர புயல்
காற்றானது மணிக்கு 222 கி.மீ-க்கு மேல் வீசினால் அதி தீவிர புயல்.
Table of Contents
காற்றழுத்த தாழ்வு பகுதி என்றால் என்ன
காற்றானது மணிக்கு 31 கி.மீ வேகத்தில் வீசினால் அது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எனப்படும்.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் ஏற்படும் பாதிப்புக்கள்
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருந்தாலும் அல்லது புயலாக இருந்தாலும் அது நகர்ந்து அதனுடைய திசையை மாற்றும் போது அதனுடைய தீவிரம் அதிகமாக இருக்கும். அந்த இடத்திலேயே நிலைத்து நிற்கும்.
மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். சில வேளைகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அல்லது புயலாக வலுப்பெறலாம்.
இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும். அது மட்டுமல்லாது, லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர் மற்றும் மின் விநியோகம் பாதிக்கக்கூடும். சாலைகளில் வெள்ளம் ஏற்படும் என்பதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படக்கூடும். பொதுமக்களின் சொத்துகள், உடைமைகளும் சேதமடையவும் வாய்ப்புள்ளது.
Read more: ரெட் அலர்ட் என்றால் என்ன