காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள்

காற்று மாசுபாட்டின் விளைவுகள்

மனிதன் வாழ அடிப்படையானது காற்று. இத்தகைய காற்றானது இயற்கையாக மற்றும் மனித நடவடிக்கைகளால் பெரும் மாசுபாட்டை சந்திக்கின்றது. காற்று மாசுபாடு என்பது நச்சு விகிதாச்சாரத்தில் காற்றில் உள்ள பொருட்கள் மற்றும் வாயுக்களின் இருப்பு மற்றும் குவிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

உலக அளவில் சீனா மற்றும் இந்தியா தான் அதிக அளவு காற்று மாசுபாடு உடைய நாடாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இந்த கடுமையான பிரச்சினை சமூகங்களில் தடுக்கப்படாவிட்டால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். காற்று மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள்

#1. அமில மழை.

மழைநீருடன் கலந்து வரும் அமிலத்தையே ‘அமிலமழை என்று அழைக்கிறோம். மனித நடவடிக்கைகளால் வெளிப்படும் கந்தகம், நைதரசன் ஆகியவற்றைக் கொண்ட சேர்வைகள் வளிமண்டலத்துடன் தாக்கமுற்று அமிலங்களை உருவாக்குகின்றன.

#2. சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும்.

காற்று மாசுபாட்டுக்கும் இதய நோய் மற்றும் மாரடைப்புக்கும் தொடர்புள்ளது. நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, புரோங்கைட்டிஸ், வீஸிங் உள்ளிட்ட சுவாசத் தொகுதியுடன் தொடர்பான எல்லா நோய்களும் பெரிதும் அதிகரித்திருப்பது காற்று மாசுபாடு காரணமாகவே ஆகும்.

#3. குழந்தைகளுக்கு ஆரோக்கி ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும்.

குழந்தைகளின் வளர்ச்சியானது கர்பபையிலேயே முழுமை பெற்று விடுவதில்லை. அவை பிறந்த பின்னரும் அவற்றின் உள்ளுறுப்புக்கள் வளர்ச்சி அடையவே செய்யும்.

அவற்றில் நுரையீரல், மூளை ஆகிய உள்ளுறுப்புகள் குறிப்பிடத்தக்கவை. அதனால் குழந்தைகள் மாசடைந்த காற்றைத் தொடர்ந்து சுவாசிப்பார்களாயின் அவர்கள் ஆரோக்கிய ரீதியில் பலவித தாக்கங்களுக்கு உள்ளாவர்.

#4. பெண்களின் ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள்.

காற்று மாசடைவு காரணமாக, கருச்சிதைவு, குறை மாதப் பிரசவம், நிறை குறைந்த குழந்தை பிறப்பு, குழந்தை இறந்து பிறத்தல், பிறந்த சொற்ப காலத்தில் குழந்தை இறத்தல் என்பன ஏற்படுகின்றன.

#5. ஓசோன் படலம் பாதிப்படைகின்றது.

குளிர்சாதனப் பெட்டிகளிலிருந்தும் மற்றும் நவீன பொருட்களிலிருந்தும் வெளியேற்றும் குளோரோ-புளோரோ கார்பன்கள், வளியை மாசுபடுத்தி வளிமண்டலத்திலுள்ள ஒசோன் மண்டலத்தை வேகமாகப் பாதித்து வருகிறது.

#6. பசுமை இல்லா விளைவு

கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் பல வாயுக்கள் தொடர்ந்து வளிமண்டலத்தில் சேர்ந்து வருவதால் வளிமண்டலத்தில் பசுமை இல்லா விளைவுகள் அதிகமாகி வருகின்றது.

#7. தாவரங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.

தாவரங்களின் பச்சையம் தயாரிக்கும் திறன், தாவரங்களின் பெருக்கம் மற்றும் மண்ணின் ஈரத்தன்மை போன்றவை வளி மாசுபாட்டால் பெரிதும் குறைகின்றன. இதனால் விளைச்சலிலும் பாதிப்பு ஏற்படுகின்றது.

#8. மரணங்கள் நிகழ்கின்றன.

காற்று மாசுபாட்டால் உலக அளவில் வருடத்திற்கு 70 லட்சம் பேர் உரிய காலத்திற்கு முன்பே உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. மனிதனது உயிர்வாழ்க்கைக்கு ஆதாரமே காற்றுத் தான். அத்தகைய காற்றில் மாசுபாடு நிகழும் போது அது மனித உயிருக்கே ஆபத்தாகி விடுகின்றது.

#9. பருவநிலை மாற்றம்.

பருவநிலை மாறி வருவதற்கு எம்மைச் சூழ்ந்துள்ள காற்று மாசுபடுவதை பிரதான காரணமாகின்றது. பருவ காலம் பிந்திய மழைப் பொழிவு, அதிகரித்த வெப்பம் போன்றனவும் ஏற்படுவதற்கு ஏதுவாக அமைகின்றது.

#10. கண்ணெரிச்சல், தொண்டைக்கட்டு, தலைவலி போன்ற நோய்கள் ஏற்படுவதற்கும் காற்று மாசுபாடு காரணமாகின்றது.

காற்றின் அதிகரித்த மாசுபாடு காரணமாக அடிக்கடி நிகழும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளாக கண்ணெரிச்சல், தொண்டைக்கட்டு, தலைவலி போன்றன காணப்படுகின்றன.

You May Also Like :
மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை
நீர் மேலாண்மை கட்டுரை