வானம் வேறு பெயர்கள்

வானம் வேறு சொல்

ஐம்பூதங்களில் ஒன்றே வானம் ஆகும். வானம் என்பது பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்து காணப்படும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளியை குறிக்கும். இது வளிமண்டலத்திற்கு அப்பால் உள்ள விண்வெளியையும் குறிக்கும்.

வானியலில் வானமானது “வானக்கோளம்” எனவும் அழைக்கப்படுகின்றது. வானம் என்பது கற்பனையானது என்றும் அதில் சூரியன், சந்திரன், விண்மீன் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் வானம் என்பது இன்றியமையாதது இதனாலையே இந்துக்கள் சிதம்பரத்தை வானத்திற்கு உரிய தலமாக கொண்டு வழிபடுகின்றனர். அங்குள்ள இறைவனின் பெயர் ஆகாச லிங்கம் ஆகும்.

இவ்வாறு சிறப்புடைய வானத்திற்கு வேறு பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.

வானம் வேறு பெயர்கள்

  1. அண்டம்
  2. ககனம்
  3. ஆகாயம்
  4. உம்பர்
  5. எமிலி
  6. ககண்டு
  7. கார்
  8. கொண்டல்
  9. சேண்
  10. நிருபம்
  11. மஞ்சு
  12. விசும்பு
  13. விண்
  14. ஆகாயம்
  15. அத்திட்டம்

மொழிபெயர்ப்புகள்

  • sky – வானம்

வானத்தில் காணப்படும் பொருட்கள்

இந்த வெளியிலே சூரியன், நிலா, விண்மீன்கள், முகில், வானவில், வடமுனை ஒளி என்பன வானத்தில் காணக்கூடிய இயற்கையான சில தோற்றப்பாடுகளாகும். பொழிவு (வானிலையியல்), மின்னல் என்பனவும் வானத்துடன் தொடர்புடைய தோற்றங்களே ஆகும்.

வானத்தின் நிறம்

பகலில், முகில்களற்ற வானம் இருக்கையில் சூரியன் தெரியும். அத்துடன் முகில்களற்ற வானம் நீல நிறமாக இருக்கும். இதற்குக் காரணம் வளிமண்டலத்தில் இருக்கும் வளிமம் ஆகும்.

சூரிய ஒளியிலிருந்து வரும் வெவ்வேறு நிறங்களில், நீல நிற ஒளியை அதிகமாக சிதறடிக்கின்றது.

நீல நிறத்தை விடவும் அலைநீளம் குறைவான ஊதா, கருநீலம் ஆகிய நிறங்கள் அதிகமாகச் சிதறடிக்கப்பட்டாலும், நமது கண்களில், குறிப்பிட்ட நிறக் கதிர்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கான உணர்திறன் குறைவாக இருப்பதனால் நீல நிறமே, பார்வையில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

அந்தி நேரத்தில், அல்லது அதிகாலை வேளைகளில் சூரியன் மிகவும் தூரத்திலும், ஒரு சாய்விலும் இருப்பதனால், சிதறடிக்கப்படும் நீல ஒளி வேறு திசைக்குச் சென்றுவிடும். எனவே வானம், மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இரவில் சூரிய ஒளி இன்மையால், வானம் இருண்ட நிறத்தில் தெரியும். இரவில் நமது பார்வையில், பிரகாசமான சூரிய ஒளியின் குறுக்கீடு இல்லாமல், சூரியனின் ஒளி விண்மீன்கள், கோள்கள், நிலா போன்றவற்றில் பட்டுத் தெறிப்பதால், நம்மால் அவற்றைப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

ஆனால், பகலிலோ, இரவிலோ, முகில்கள் வானத்தில் இருப்பின், முகிலினால் ஏற்படும் மறைப்பினால், சூரியனையோ, ஏனைய விண்மீன்கள், கோள்கள், நிலாவையோ நம்மால் பார்க்க முடியாது.

இவ்வாறு சிறப்புடைய வானம் பற்றி பல அறிசஞர்கழ் தம் பாடல்களில் பாடி உள்ளனர். எனவே இயற்கை அன்னையின் கொடையான வானம் மேன்மையானது எனலாம்.

Read more: அக்குள் கருமை நீங்க

பற்களில் மஞ்சள் கறை நீங்க