இந்த பதிவில் கபசுர குடிநீர் காய்ச்சுவது எப்படி மற்றும் அதன் சில விரிவான தகவல்களை காண்போம்.
மனித உடலில் உள்ள ஈரப்பதத்தின் அளவே கபம் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு வகையான நீர்க்கோர்வை என்றும் கூறலாம்.
உடலில் கபம் சம்பந்தமான நோய்களை போக்க கூடியது தான் இந்த கபசுர குடிநீர்.
அதாவது சளி, இருமல், மூக்கடைப்பு போன்றவற்றை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் கசாயம் தான் கபசுர குடிநீர்.
சித்த மருத்துவம் என்பது பல்வேறு காலங்களில் வாழ்ந்த சித்தர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவ முறைகளின் தொகுப்பாகும்.
கபசுர குடிநீர் வைரஸ்களை எதிர்க்கும் சக்தி கொண்டது தான். ஆனால் தற்போது தாக்கும் வைரஸ்க்கு இது முழுமையான மருந்து கிடையாது.
Table of Contents
கபசுர குடிநீர் நன்மைகள்
இந்த குடிநீர் பல மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
- வைரஸ் கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது
- சாதாரண கிருமிகளால் ஏற்படும் தடிமன், சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் தடுப்பு மருந்தாக பயன்படுகின்றது.
- மூச்சு விடுதலில் உள்ள சிரமத்தை போக்கும்
- உடலினை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்
- மலசிக்கல் தீரும்
கபசுர குடிநீரில் உள்ள மூலிகை பொருட்கள்
- சுக்கு
- மிளகு
- திப்பிலி
- கிராம்பு
- நீர்முள்ளி வேர்
- அக்கரகாரம்
- சிறுகாஞ்சொறி வேர்
- ஆடாதோடை
- கடுக்காய் தோல்
- கோஷ்டம்
- சீந்தில் கொடி
- சிறு தேக்கு
- நிலவேம்பு
- வட்டத்திருப்பி வேர்
- கோரைக்கிழங்கு
- சித்தரத்தை
- கற்பூரவள்ளி இலை
- அதிமதுரம்
- தாளிசபத்திரி
கபசுர குடிநீர் எங்கு கிடைக்கும்
மேலே குறிப்பிட்ட 19 மூலிகைகளும் சரியான அளவு கலக்கப்பட்டு கபசுர குடிநீர் தயாரிக்கப்படுகிறது.
இது கபசுர குடிநீர் சூரணம் என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது.
சில நேரங்களில் சில மூலிகைகளை தவிர்த்து 15 மூலிகைகளுடன் கபசுர குடிநீர் தயாரிக்கப்படுகிறது.
கபசுர குடிநீர் காய்ச்சுவது எப்படி
கபசுர குடிநீர் சூரணத்தை தயாரித்து அல்லது நாடு மருந்து கடைகளில் வாங்கி வந்து 5 கிராம் அளவு எடுத்து 250 மில்லி தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து 50 மில்லியாக வந்த பின் வடிகட்டி எடுத்து வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும்.
எப்போதும் கபசுர குடிநீர் காய்ச்சும் போது சிறு தீயில் தான் காய்ச்ச வேண்டும். அப்போது தான் அதன் பலன் முழுமையாக கிடைக்கும்.
கபசுர குடிநீர் சூரணம் விலை
இதன் விலை 150 ரூபாய்க்குள் இருக்கும்.
கபசுர குடிநீர் எப்போது குடிக்கலாம்
ஒரு நாளைக்கு காலை மாலை என இரண்டு வேளைகளும் இந்த கசாயத்தை எடுத்துக்கொண்டால் போதுமானது.
காலையில் பற்களை சுத்தம் செய்ய பின் அல்லது உணவுக்கு வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது.
தொடர்ந்து மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் வரை குடிக்கலாம். அதற்கு மேல் தொடர்ந்து குடிப்பதை தவிருங்கள்.
கபசுர குடிநீர் யார் யார் குடிக்க கூடாது
இதை கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகள், வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் மற்றும் டைபாய்டு காய்ச்சல் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது.
கபசுர குடிநீர் தீமைகள்
இதனை அதிகமாக குடித்தால் அதிக பலனை தரும் என்று நினைத்துக்கொண்டு சிலர் அதிகளவு குடிக்கிறார்கள். இது மிகவும் தவறானது.
அதிகமாக குடிக்கும் போது உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கும். அதிகளவான உஷ்ணம் ஏற்பட்டால் மலசிக்கல் போன்ற சில பிரச்சனைகளை உண்டாகும்.
You May Also Like: