பூமியில் பல உயிரினங்கள் வாழ்கின்றன. அவை பல பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அப்பிரிவுகளில் ஊர்வன வகையைச் சேர்ந்த ஈரூடக வாழியே ஆமை ஆகும். ஆமையானது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது.
ஆமை என்பதற்கான பொருள் விளக்கத்தை பல அகராதிகள் பலவாறு கூறுகின்றன. அவற்றில் ஒரு அகராதி ஆமை என்றால் பாதுகாப்புக்காக காலாலும் தலையாலும் தன் மேலோட்டின் உள்ளே இழுத்து கொள்ளும் மற்றும் மெதுவாக நகர்ந்து செல்லும் பிராணி ஆமை என்று கூறப்படுகின்றது.
நீரில் வாழும் ஆமைகள் பொதுவாக 80 தொடக்கம் 150 வருடம் வரை வாழக்கூடியது. நிலத்தில் வாழும் ஆமைகள் பொதுவாக 20 தொடக்கம் 40 வருடம் வரை வாழும் தன்மை உடையது. வாழும் இவ் ஆமைகள் செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றன. மற்றும் ஆமைகளில் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன.
ஆமைகள் உணவுக்காகவும் மருந்துக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆமைகள் நூற்றுக்கு மேலான முட்டைகளை இட்டு இனத்தை பெருக்கக்கூடியது. ஆமைகள் சூழலுக்கு ஏற்ப உடல் வெப்பநிலையை மாற்றக் கூடிய தன்மையைக் கொண்டது.
சைவக் கடவுளான விஸ்ணுவானவர் தான் எடுத்த பத்து அவதாரங்களில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம் ஆகும். இங்கு கூர்மம் என்பதும் ஆமையைக் குறிக்கின்றது.
ஆமை வேறு பெயர்கள்
- கடமம்.
- கூர்மம்.
இவ்வாறான பெயர்கள் ஆமைக்கு வழங்கப்படுகின்றன.
Read more: நோய் வரக் காரணங்கள்