இயற்கையானது நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களை உள்ளடக்கியதாகும். இயற்கையின் இந்த அதீத சக்திகளையும் பரிமாண முறையில் மாற்றம் அறிவியலின் ஒரு பகுதிதான் வேதியல் ஆகும்.
ஆவியாதல், மேகம், மழை இவை யாவற்றையும் நீரின் பிற இயற்கை தோன்றலாக இருந்தாலும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் என இரு மூலக்கூறுகளாக பிரித்துப் பார்ப்பது தான் வேதியியல் ஆகும்.
பூமியின் மேற்பரப்பில் இருந்து பால்வெளி அண்டம் வரை எல்லா இடங்களிலும் தடையின்றிப் பரந்திருக்கும் இயற்கையின் மற்றொரு சக்தி காற்றாகும்.
ஆனால் இந்த காற்றானது ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் என சில மூலக்கூறுகளாக பிரித்துப் பார்க்கப்படுவது வேதியியலின் பார்வையே.
அதுபோல ஆகாயம் என்பது பூமியின் மேற்பரப்பில் இருந்து பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள நட்சத்திரங்களை உள்ளடக்கி உள்ள ஒரு கோடாக இயற்கை பார்க்கின்றது.
ஆனால் இந்த ஆகாயம் என்பது troposphere, Stratosphere, Mesosphere, Thermosphere எனப் பல அடுக்குகளாக அறிவியல் பிரிக்கின்றது.
பூமியின் பரந்த மேற்பரப்பு நிலம் என்றும் அந்த நிலமானது வண்டல் மண், கரிசல் மண், களிமண் செம்மண் எனப் பல மண் வகைகளைக் கொண்டுள்ளது எனவும் இயற்கை கூறினாலும் வேதியியலானது சிலிக்கான், கார்பன், பொட்டாசியம், பாஸ்பரஸ், தாதுக்களாகவும், தனிமங்களாகவும் பார்க்கின்றது.
இவ்வாறு இயற்கையை தாண்டி மனிதனுக்கு தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட இயலாக வேதியல் உள்ளது.
Table of Contents
வேதியியல் என்றால் என்ன
வேதியியல் (Chemistry ) என்பது அறிவியலின் ஒரு பிரிவாகும். வேதியல் என்பது அணுக்களால் அதாவது தனிமங்கள் மற்றும் மூலக்கூறுகள் இணைந்து உருவாகும் சேர்மானங்களைப் பற்றி ஆராய்கின்ற அறிவியலில் ஒரு துறையை வேதியியல் ஆகும்.
வேதியியலின் பிரிவுகள்
வேதியியலை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர்.
- இயல் வேதியியல்
- கனிம வேதியியல்
- கரிம வேதியியல்
ஆகியவையே அவை மூன்றுமாகும்.
இயல் வேதியியல் என்பது வேதிப் பொருட்களில் காணப்படும் பெரிய துகள்கள், நுண்துகள்கள், அணுக்கள், மூலக்கூறுகள் போன்றவற்றை இயற்பியல் விதிகள் மற்றும் இயற்பியல் கோட்பாடுகளை (இயக்கம், ஆற்றல், விசை, நேரம், புள்ளியியல் போன்றவற்றை இயற்பியல் கோட்பாடுகள் என்கின்றோம்) அடிப்படையில் ஆய்வு செய்கின்ற துறையாகும்.
இயல் வேதியலின் பயன்பாடுகளாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுப்பது, விண்ணில் செலுத்தும் ராக்கெட்டுகள் போன்றவை இயல் வேதியல் அடிப்படையில் ஏற்படுகின்றது.
கனிம வேதியியல் என்பது கரிமம் அல்லாத சேர்மானங்கள் அதாவது கார்பன் அல்லாத சேர்மானங்கள் உலோகங்கள், உலோக சேர்மானங்கள் முதலியவற்றின் தயாரிப்பு, பண்புகள் பற்றி விவரிக்கும் வேதியலின் ஒரு பிரிவாகும்.
கனிம வேதியியல் தங்கம், வெள்ளி, வீடுகளில் பயன்படும் மின்சார கம்பிகளான வயர் போன்ற உலோகங்களை தயாரிக்க மற்றும் அதன் பண்புகளை இனங்காண உதவியாக உள்ளது.
கரிம வேதியியல் என்பது கனிமங்கள் மற்றும் கரிம சேர்மங்கள் ஆகியவற்றினால் ஆன வேதிப்பொருட்களின் அமைப்பு, இயல்புகள் வேதிவினைகள் பற்றி ஆராயும் வேதியலின் ஒரு பிரிவுதான் கரிம வேதியியல் ஆகும்.
மருத்துவத்துறையில் மருந்துகளைத் தயாரிக்க கரிம வேதியியல் துணை புரிகின்றது. மிக முக்கியமாக விவசாய உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்க கரிம வேதியல் பயன்படுகின்றது.
Read more: தனிமம் என்றால் என்ன