வெப்பம் என்றால் என்ன

veppam endral enna

அன்றாட வாழ்வில் வெப்பம் எனும் சொல்லிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. குளிர், வெப்பம், சூடு, காலநிலை, வெயில் என்று பல வழிகளில் அன்றாடம் வெப்பத்தோடு இணைந்தே இருக்கின்றோம்.

வெப்பம் மற்றும் வெப்ப நிலை என்பன இரு வேறுபட்ட கோட்பாடுகளாகும். நாம் சாதாரண வாழ்வில் இரண்டையுமே பொதுவாகவே வைத்து நோக்குகின்றோம். ஆனால் உண்மையில் இரண்டும் வேறுபட்ட கருத்துக்களாகும்.

வெப்ப நிலையைத் தான் நாம் செல்சியஸ், பரனைட் போன்ற அலகுகளில் அளக்கின்றோம்

வெப்பம் என்றால் என்ன

வெப்பநிலை என்பது ஒருபொருள் அல்லது இடம் எந்தளவு குளிராக அல்லது சூடாக இருக்கின்றது என்று அளக்கும் அளவு என்று எடுத்துக் கொள்ளலாம். இது எளிமையான விளக்கமாகும்.

வெப்பம் என்பது ஒரு சக்தியின் வடிவமாகும். வஸ்துக்கள் (matter) அணுக்களாலும், மூலக்கூறுகளாலும் ஆனவையாகும். அணுக்களும் மூலக்கூறுகளும் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும். காரணம் சக்தியாகும். இவை ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டோ அல்லது அதிர்ந்து கொண்டோ இருக்கலாம்.

இப்படியாக அதிர்ந்துகொண்டிருக்கும் மூலக்கூறுகள் அல்லது அணுக்கள் அதைவிட குறைந்த வேகமாக அதிர்ந்து கொண்டிருக்கும் அணுக்களை அல்லது மூலக்மூறுகளை நோக்கிப் பாயும் சக்தியே வெப்பம் எனப்படும்.

மேலும் வெப்பம் என்பது ஒரு பொருளின் வெப்பநிலையை உயரச்செய்து, மூலக்கூறுகளை வேகமாக இயங்க வைக்கக்கூடிய ஒரு வகையான ஆற்றல் என புரிந்து கொள்ளமுடியும்.

அதிகரிக்கும் வெப்பநிலை

தற்போது உலகளவில் பல நாடுகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளமையைக் காணமுடிகின்றது. நாளுக்கு நாள் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்த வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக மனிதர்கள் மட்டுமன்றி பறவைகள், விலங்குகளும் உயிரிழந்து வருகின்றமையை அறிய முடிகின்றது.

ஆட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை உருகுவது அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து வருவதாகவும் இங்கு 2050 ஆம் ஆண்டுக்குள் வெப்பநிலை மூன்று முதல் ஐந்து செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இங்குள்ள பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் அதிகரிக்கக் கூடும் என ஐ.நா சபை எச்சரித்துள்ளது.

முன் எப்போதும் இல்லாத வகையில் பூமியின் வளி மண்டலத்தில் கார்பன் டையாக்சைட் அதாவது கரியமில வாயுவின் அளவு அதிகரித்து வருகின்றது.

கரியமில வாயுக்களை ஒக்சிஜனாக மாற்றும் காடுகளின் பரப்பளவு ஒவ்வொரு வருடமும் குறைந்து வருகின்ற அதேவேளையில் மனிதனின் செயற்பாட்டுகளால் வெளியாகும் கரிநிற வாயுவின் அளவும் அதிகரித்து வருகின்றது.

அதுமட்டுமன்றி சமீபத்திய ஆண்டுகளில் வெப்பமண்டல பசுபிக் பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் இங்கும் மரங்கள் செடிகளின் வளர்ச்சியளவு குறைந்து கரியமில வாயு உறிஞ்சப்படுவதும் குறைந்து வருகின்றது.

1958 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் கவாயிலுள்ள ஆராய்ச்சி மையம் வளிமண்டலவியலில் உள்ள இரசாயனக் கலவை பற்றிய தரவுகளை தொடர்ந்து கண்காணித்து சேகரித்து வருகின்றது.

இத்த ஆய்வகத்தில் கரியமிலவாயுவை கண்காணிக்க ஆரம்பித்ததிலிருந்து இதுவரை வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயுவின் செறிவு 30% ஆல் அதிகரித்துள்ளது. அதிகரித்துவரும் பெற்றோலியப் பொருட்களின் பயன்பாடு மற்றும் காடுகள் அழிப்பே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.

வெப்பநிலை அதிகரிப்பினைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலையை பேண முடியும்.

குறிப்பாக பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துதல், வாய்ப்பிருந்தால் நடந்து செல்லலாம். இது உடல் நலத்திற்கும் சுற்றுச் சூழலிற்கும் நல்லதாகும். மின்சார வாகனங்களைப் பயன்படுத்தலாம்.

இவை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வெப்பநிலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

Read more: பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழலும் கட்டுரை

பருவநிலை மாற்றம் கட்டுரை