நாட்டினம் என்றால் என்ன

நாட்டின் மீது அக்கரை கொண்ட ஒரு கருத்தியலாக நாட்டினம் காணப்படுகின்றது. இது தேசியம் எனவும் அழைக்கப்படுகின்றது. ஒரு நாடானது சிறந்து விளங்குவதற்கு நாட்டுப்பற்று மிக முக்கியமான தொன்றாகும்.

நாட்டினம் என்றால் என்ன

நாட்டினம் என்பது மக்கள் இறைமைக் கொள்கையின் படி மக்கள் என்பதனையே நாட்டினம் ஆகும்.

நாட்டினமானது மக்களை ஒன்றாக இணைக்கும் ஓர் முறைமையாகவே காணப்படுகின்றது. நாட்டினத்தின் மீது அக்கறை கொண்ட ஓர் கருத்தியலே தேசிய வாதமாக காணப்படுகிறது.

தேசிய வாதமும் நாட்டினமும்

தேசிய வாதமானது நாட்டினம் ஒன்றின் மீது அக்கறை கொண்ட ஒரு கருத்தியலாகவே காணப்படுகிறது. இந்த தேசிய வாதமானது பிரெஞ்ச் புரட்சிக் காலப்பகுதிகளில் தோன்றிய மக்கள் இறைமைக்கான போராட்டங்கள் போன்றவற்றோடு நெருங்கிய தொடர்புடையதாக காணப்படுகின்றது.

தேசிய வாதத்தின் விளைவாக நாட்டினத் தன்னாட்சி உரிமை கொள்கையின் அடிப்படையில் நிறுவப்பட்ட நாட்டின அரசுகளே ஏற்றுக் கொள்ளத்தக்கவை என்று தேசிய வாதமானது குறிப்பிடுகின்றது.

தேசிய வாதமானது தேசத்திற்கான பக்தி என்பதாகும். இது நாட்டினத்தை ஒன்றாக இணைக்கும் ஒரு உணர்வாக காணப்படுகின்றது.

அந்த வகையில் தேசிய சின்னங்கள், தேசிய கொடிகள், தேசிய கீதங்கள், தேசிய மொழிகள் மற்றும் அடையாளத்தின் பிற சின்னங்கள் போன்றவை தேசிய வாதத்தில் முக்கியமானவையாக காணப்படுகின்றன. இது தேசிய அடையாளத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக காணப்படுகின்றன.

நாட்டினத்தின் பண்புகள்

பொதுவான வம்சா வழியினை உடையவர்களாக காணப்படுவதானது ஒரு நாட்டினத்தின் மிக முக்கியமானதொரு பண்பாக காணப்படுகின்றது. வரையறுக்கப்பட்ட எல்லையினை உடையதாக காணப்படும். அதாவது ஒரு தேசத்தை உருவாக்கும் நாட்டினமானது வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்ளேயே அமைந்து காணப்படும்.

பெரும்பாலான தேசிய அரசுகளானவை தங்களுடைய சொந்த அரசியல் நிறுவனங்களை கொண்டு காணப்படுகின்றன. அவை சிறந்த அரசாங்கத்தை அமைப்பதற்காக ஒன்றிணைந்து காணப்படுகின்றன. ஒரு நாட்டினத்தவர்களுக்கு என்று பொதுவான மொழி ஒன்று காணப்படும்.

தேசிய வாதத்தின் நன்மைகள்

தேசிய வாதத்தின் ஊடாக ஒரு நாட்டின் மக்களிடையே தேசப்பற்று ஏற்படும். இதனூடாக தேசத்தின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக மக்கள் காணப்படுவர்.

மக்களிடையே சமூக ஒற்றுமையானது ஏற்படும். அதாவது இன, மத பேதமில்லாது அனைவருக்குமிடையில் ஒற்றுமை ஏற்பட தேசிய வாதமானது துணைபுரிகின்றது.

தேசிய வாதத்தினூடாக பொருளாதாரமானது செழிப்புற்று காணப்படும். அதாவது மக்களிடையே ஒற்றுமை ஏற்படும் இடத்து அனைவரும் ஒரு தேசத்தின் நலனிற்காக பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.

தேசிய வாதத்தினூடாக இறையாண்மை அமைதி சமாதானம் ஏற்படும். அதாவது எவ்வித சிக்கல்கள், வன்முறைகள் இன்றி அனைவரும் ஒன்றாக சமாதானத்துடன் காணப்படுவர். அதாவது பல இனங்கள் காணப்படினும் அனைவரும் சமத்துவமாகவும் அமைதியுடனுமே செயற்படுவார்கள்.

சர்வதேச ரீதியில் பிரச்சினைகள் ஏற்படும் போது தேசிய வாதத்தினூடாக அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வழிமுறைகள் கையாளப்படுகின்றன. இதனூடாக பல்வேறுபட்ட சர்வதேச பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன.

தேசிய அரசு என்றால் என்ன

நாட்டினம் என்பது அடிப்படையில் ஒரு மக்கள் சமூகமாகும். அரசு என்பது ஐந்து அடிப்படை கூறுகள் ஒருங்கிணைந்து உருவாகியதொரு கருத்தியலாகும். அதாவது தேசிய அரசானது குறித்த எல்லை, மக்கள் தொகை, இறைமை, அரசாங்கம் என ஐந்து அடிப்படை கூறுகளை கொண்டமைந்ததொரு அரசாகும்.

ஓர் குறித்த எல்லை இல்லாத மக்கள் கூட்டம் தமக்கான அரசாங்கத்தினை உருவாக்கிய போதிலும் பிரதேசமொன்று காணப்படாதவிடத்து ஓர் அரசை தாபிக்க முடியாது.

ஓர் அரசுக்குள் ஒரு தேசமோ பல தேசங்களோ காணப்படலாம். உதாரணமாக ஐக்கிய இராச்சியத்தை எடுத்துக் கொண்டால் ஐக்கிய இராச்சியம் என்பது ஆங்கிலேயே தேசம் என நான்கு தேசங்களை கொண்டமைந்ததொரு அரசாகும். மேற்குறிப்பிட்ட வகையிலேயே தேசிய அரசானது காணப்படுகின்றது.

Read More: திருமண் என்றால் என்ன

போசணை என்றால் என்ன