விருந்தோம்பல் பற்றிய கட்டுரை

Virunthombal Patri Katturai

தமிழர்களின் உயரிய பண்புகளில் ஒன்றான “விருந்தோம்பல் பற்றிய கட்டுரை” (Virunthombal Patri Katturai) தொகுப்பை இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த விருந்தோம்பல் முறையானது இன்றைய நவநாகரிக காலத்தில் குறைந்து வருகிறது.

இந்த விருந்தோம்பல் என்பது தமிழர்களின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாக கருத முடியும்.

விருந்தோம்பல் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பண்டை தமிழர்களும் விருந்தோம்பலும்
  3. மறக்கப்பட்ட விருந்தோம்பல்
  4. விருந்தோம்பல் எனும் உயர் மாண்பு
  5. முடிவுரை

முன்னுரை

“மருந்தே ஆயினும் விருந்தோடுண்” என்கிறார் ஒளவையார் அதாவது நாம் உண்கின்ற உணவை புதிதாய் வருகின்றவர்களுக்கும் கொடுத்து உபசரிக்கும் பண்பு தமிழர்களுக்குரியதாகும்.

“இட்டு கெட்டவர் யாரும் இல்லை” என்று கூறுவார்கள். அந்தளவிற்கு தானமும் தர்மமும் தலைகாக்கும் என்பது மரபு அதன் வாயிலாகவே ஈகை பண்பு அடுத்தவர்கும் உணவளிக்கும் உயரிய மாண்பு தமிழர் வரலாற்றில் இலக்கியங்களில் பெரிதும் பேசப்படுகிறது.

சங்க இலக்கியங்கள் தொல்காப்பியம் திருமந்திரம் அகத்தியம் திருக்குறள் என பல நூல்கள் விருந்தோம்பலை பற்றி அழகாக கூறுகின்றன.

இக்கட்டுரையில் பண்டை தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு இவற்றின் பெருமைகள் அவற்றின் இன்றைய நிலைபோன்றவற்றை இந்த கட்டுரையில் காணலாம்.

பண்டை தமிழர்களும் விருந்தோம்பலும்

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து” என்கிறார் வள்ளுவர் அதாவது எம் வீடு தேடி வருகின்ற விருந்தாளிகளை நண்பர்களை உறவினர்களை மகிழ்வோடு இருகரம் கூப்பி வரவேற்கவேண்டும் என்கிறார் வள்ளுவர்.

விருந்தினர்களை உபசரிப்பது பெரும்பாக்கியம் என்கிறார் வள்ளுவர். விருந்தோம்பல் இல்லாதோரை மடைமையுடையோர் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

இதனை “உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கள் உண்டு” என்கிறார். அந்தளவிற்கு விருந்தோம்பலை தமது பாக்கியமாக கருதியவர்கள் தமிழர்கள்.

மேலும் சங்க இலக்கியங்களிலும் எட்டுத்தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் விருந்தோம்பலின் சிறப்பு தொடர்பாக அதிகம் பேசப்படுகிறது. தமிழர்களின் விருந்தோம்பல் பழக்க வழக்கத்தோடு பல அறிவியல் விடயங்களும் காணப்படுகின்றன.

நம் வீடுகளுக்கு வரும் விருந்தாளிகளை வாசல் வரை சென்று இன்முகத்துடன் வரவேற்று கைகால்களை கழுவ வைத்து அவர்களை இன்சொல் பேசி அவர்களை நலம் விசாரித்து முதலில் பருக குடிபானங்கள் வழங்குதல் இனிப்புக்களை வழங்குதல்

பின்பு அவர்களுக்கு உணவு சமைத்தல் விருந்து பரிமாறுதல் வாழையிலையில் முறையாக உணவுகளை வைத்து ஒரு குவளையில் நீரும் திசைபார்த்து அமர்ந்து உணவினை உண்டு முடித்ததும்

அவர்கள் உண்டு முடித்த இலையினை உபசரிப்பவர்களே எடுப்பதும் அவர்கள் கை கழுவ நீரையும் ஊற்றி கழுவ வைப்பார்கள் பின்பு அவர்களுடன் அன்பாக உரையாடி வாசல் வரை சென்று வழியனுப்பி வைப்பார்கள்.

அந்த அளவிற்கு விருந்தாளிகளை அன்பாக கவனித்து வழியனுப்புவது தமிழர்கள் பண்பாடாகும். இது தமிழர் விருந்தோம்பல் பண்பாட்டின் ஒரு பகுதியாகும் இன்னும் பல விடயங்கள் விருந்தோம்பலின் மாண்பையும் பெருமையையும் பறைசாற்றுகின்றன.

மறக்கப்பட்ட விருந்தோம்பல் பண்பு

இத்தனை பெருமைகளுடைய தமிழர் பாரம்பரியம் விருந்தோம்பல் இன்று மிகவும் அருகி போய்விட்டது.

அடுத்தவர்களை உபசரிக்கும் பண்பு குறைந்து விட்டது இன்றைய தொழில்நுட்ப உலகம் சமூக வலைத்தளங்கள் உறவுகளுக்கிடையான நெருக்கத்தை குறைத்து ஒற்றுமை இல்லாத போலியான வாழ்க்கையை ஒவ்வொரு மனிதர்களும் வாழ்ந்து கொண்டிருப்பது வெளிப்படையான உண்மையாகும்.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்று உலகுக்கு சொன்ன எம் இனம் இன்று நெறி தவறி போவது கண்டு மனம் வேதனை கொள்கிறது.

விருந்தோம்பல் எனும் உயர் மாண்பு

உலகத்தில் வேறு எந்த இடத்திலும் பார்க்க முடியாத வந்தோரை வரவேற்று உபசரித்து அனுப்பும் வழக்கம் தமிழர்களுக்குரியது. இது அடுத்தவர்களையும் அன்போடு உபசரிக்கும் சிறந்த பழக்கமாகும்.

பசியோடும் களைப்போடும் வருபவர்களுக்கு உணவளிப்பது உயர்ந்த புண்ணியம் என்கிறது மதங்கள். மண்ணில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உணவும் உடையும் வீடும் அழிப்பது தான் உயர்ந்த அறம் என்று போதிக்கிறது “மணிமேகலை”.

வறியவர்கள் முதியவர்கள் பிறவிகுறைபாடு உடையவர்கள் அநாதையாக வீதியில் நிற்பவர்கள் நோயுற்றவர்கள் போன்றோருக்கு உணவழித்தல் ஆக சிறந்த அறம் என்கிறது மணிமேகலை.

அதாவது “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்றால் மிகையல்ல இப்பண்பை நாமும் உணர்ந்து நடப்பது சால சிறந்ததாகும்.

முடிவுரை

“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நுல்விருந்து வானதவர்க்கே” என்கிறது திருக்குறள்.

அதாவது வந்த விருந்தினர்களை அன்பாக கவனித்து அனுப்பி விட்டு வருகின்ற விருந்தினர்களுக்காக வாசலில் காத்திருந்தவர்கள் நம் முன்னோர்கள்.

இத்தனை பெருமைகள் உடைய இனத்தில் பிறந்த நாம் பெருமைக்குரியவர்கள் எம் பண்பாடு, எம் கலாச்சாரம், எம் பழக்கவழக்கங்கள் என்றைக்கும் மங்காதவை இவற்றை நாமும் பின்பற்றி வாழ்வதே சிறப்பானதாகும்.

You May Also Like :

பாரதியார் பற்றிய கட்டுரை தமிழ்

தமிழர் திருநாள் கட்டுரை