கொள்ளை நோய் என்றால் என்ன

kollai noi in tamil

போரால் உயிரிழந்தவர்களை விட நோயால் இறந்தவர்கள் தான் அதிகம் என்பார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இது சாதாரண வார்த்தை என்று கடந்த விடமுடியாது. வரலாற்று நெடுகிலும் நடந்த சம்பவங்களை உற்றுநோக்கினால் அதில் பற்றிப் படர்ந்திருக்கும் நிதர்சனத்தை தெரிந்துகொள்ளலாம்.

வரலாற்று நெடுங்கிலும் மனித குலத்தை பல கொள்ளை நோய்கள் ஆட்டிப்படைத்துள்ளன. மனிதகுலம் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் கொரோனா நோய்த்தொற்று போன்று வரலாற்று நெடுகிலும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொரு வகையான நோய்க்கிருமிகள் தொடர்ந்து வந்து இப்போது போலவே அப்போதும் ஈவிரக்கமின்றி மானுட சமுதாயத்தை கொன்று குவித்தன. பிளேக், காலரா, ப்ளு, கொரோனா போன்ற கொடூர நோய்கள் தான் அவை ஆகும்.

மருத்துவக் கட்டமைப்புக்கள், தடுப்பூசிகள் என தற்காப்புச் சாதனங்கள் நிரம்பப் பெற்ற இந்த நவீன காலத்திலேயே அவற்றை எதிர்கொள்ள முடியாது போராடுகின்றோம் என்றால் இவை எவையுமே இல்லாத பழங்கால சமுதாயத்தினர் என்னென்ன பாடு பட்டிருப்பார்கள் என்பதை வார்த்தையால் கூறிவிட முடியாது.

கொள்ளை நோய் என்றால் என்ன

ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆட்சி செய்யும் கிருமிகளை கொள்ளை நோய் (Epidemic) என்பர்.

அதாவது மனித சனத்தொகையில் குறிப்பிட்ட ஒரு நோயானது புதிதாகப் பரவ ஆரம்பிக்கும் போது வழமையான அளவைவிட எல்லை மீறிப் போவதாகும். நோயானது திடீரெனப் பரவ ஆரம்பித்து, விரைவாக சனத்தொகையில் பரவும்

உலகை உலுக்கிய கொள்ளை நோய்கள்

மனித சமூகம் ஒரு வேட்டைச் சமூகமாக இருந்த காலகட்டங்களில் நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே இருந்தது.

அப்போது மனிதன் காடுகளில் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தான். மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கோ அல்லது குழுக்களுக்கோ தொற்று ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

மனித குலம் பல்கிப் பெருகத் தொடங்கியதும் தனித்தனிக் குழுக்களாக இருந்தவர்கள் சமூகமாக மாறும் சூழல் ஏற்பட்டது. மனிதகுலம் வேளாண் செய்வதற்கான கூட்டு வாழ்க்கையை வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது.

விவசாயம் செய்ய மனித உழைப்பையும் தாண்டி விலங்குகளின் தேவையும் ஏற்பட்டது. இதற்காக காடுகளில் பழகும் தன்மை கொண்ட உயிரினங்களை தனது இருப்பிடத்திற்கு பக்கத்திலேயே வளர்க்கத் தொடங்கினான்.

இதனால் மனித சமூகத்தோடு விலங்குகள் அண்டி வாழத் தொடங்கின. இந்த காலகட்டத்தில்தான் மனிதனை நோய் அணுகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சிர்கா – இந்த நோயானது கி.மு3000 ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட நோயாகும். வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தில் உலகில் அறியப்பட்ட முதல் நோய் இதுவாகும். இந்நோய் முதன் முதலில் சீனாவில் உருவானது.

சீனாவின் வடகிழக்கு பகுதியில் வாழ்ந்த மக்களின் உயிரை பாரபட்சமின்றிப் பறித்து சீனாவின் எல்லையில் இருக்கும் மொங்கோலியா நாட்டையும் இந்நோய் கடுமையாகத் தாக்கியது.

பிளேக் – கிரேக்க நாட்டின் தலைநகரமாக விளங்கும் ஏதேன்ஸ் 3000 ஆம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட பழங்கால நகரம் ஆகும். உலகிலேயே முதன்முதலில் மக்களாட்சி முறையை அறிமுகப்படுத்திய ஏதேன்ஸ் தான் முதன்முதலாக இந்த தொற்று நோயாலும் பாதிக்கப்பட்டது.

பிளேக் நோயானது கிமு 430 காலப்பகுதியில் ஏதேன்ஸ் மக்களை தாக்கியது. இந்நோயால் எதேன்ஸ் நகரில் 20 சதவீத அதாவது 75,000 – 100000 வரையான மக்கள் மாண்டனர்.

Read more: நோய் வரக் காரணங்கள்

உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்