இந்த பதிவு உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் “விடுகதைகள் வினா விடைகள்” தொகுப்பை உள்ளடக்கியுள்ளது.
Table of Contents
விடுகதைகள் வினா விடைகள்
1. காலைக்கடிக்கும் செருப்பல்ல காவல் காக்கும் நாயல்ல அது என்ன?
விடை: முள்
2. காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோசம் அது என்ன?
விடை: வானம்
3. கையுண்டு கழுத்துண்டு தலையுண்டு உயிரில்லை அது என்ன?
விடை: சட்டை
4. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?
விடை: கிளி
5. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் அது என்ன?
விடை: கப்பல்கள்
6. மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?
விடை: ஒட்டகம்
7. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?
விடை: பப்பாளி விதைகள்
8. நடக்கத் தெரியாதவன் நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்?
விடை: கைகாட்டி
9. நடலாம் பிடுங்க முடியாது அது என்ன?
விடை: பச்சை குத்துதல்
10. நான் வெட்டுப்பட்டால் வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்?
விடை: வெங்காயம்
11. நடைக்கு உவமை நளனக்கு தூதுவன் அவன் யார்?
விடை: அன்னம்
12. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை அது என்ன?
விடை: தீக்குச்சி
13. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும் அது என்ன?
விடை: தபால் தலை
14. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?
விடை: கடல் அலை
15. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
விடை: சாமரம்
16. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான் அது என்ன?
விடை: வெங்காயம்
17. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள் அவள் யார்?
விடை: செல்பேசி
18. இடி இடிக்கும் மின்னல் மின்னும் மழை பெய்யாது அது என்ன?
விடை: பட்டாசு
19. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன?
விடை: தராசு
20. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள் அது என்ன?
விடை: வெண்டைக்காய்
21. உடல் சிவப்பு வாய் அகலம் உணவு காகிதம் நான் யார்?
விடை: அஞ்சல் பெட்டி
22. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?
விடை: வாழைப்பூ
23. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?
விடை: பேனா
24. தாடிக்காரன் மீசைக்காரன் கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?
விடை: தேங்காய்
25. சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?
விடை: காய்ந்த மிளகாய்
Vidukathai or Puthir In Tamil With Answer
26. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
விடை: விரல்கள்
27. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன?
விடை: கிளி
28. இதயம் போல் துடித்திருக்கும் இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன?
விடை: கடிகாரம்
29. இரவல் கிடைக்காதது இரவில் கிடைப்பது அது என்ன?
விடை: தூக்கம்
30. உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
விடை: எதிரொலி
31. உள்ளே இருந்தால் ஓடித்திரியும் வெளியே வந்தால் விரைவில் மடியும் அது என்ன?
விடை: மீன்
32. அச்சு இல்லாத சக்கரம் அழகு காட்டும் சக்கரம் அது என்ன?
விடை: வளையல்
33. என் குதிரை கறுப்புக் குதிரை குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை அது என்ன?
விடை: உளுந்து
34. ஏழை படுக்கும் பஞ்சணையை எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை அது என்ன?
விடை: பூமி
35. ஒரு நெல் குத்தி வீடெல்லாம் உமியாயிற்று அது என்ன?
விடை: தீபம்
36. மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து மண்ணோடு மண்ணாவான் அவன் யார்?
விடை: மண்புழு
37. கதிர் அடிக்காத களம் உயிர் பறிக்கும் களம் அது என்ன?
விடை: போர்க்களம்
38. உயரத்திலிருந்து விழுவான் அடியே படாது தரைக்குத்தான் சேதாரமாகும் அது என்ன?
விடை: அருவி நீர்
39. பச்சைக் கீரை சமைக்க உதவாது வழுக்க உதவும் அது என்ன?
விடை: பாசி
40. பேப்பர் கிடையாது வாய்ப்பாடு தெரியாது கணக்கிலோ புலி அது என்ன?
விடை: கால்குலேட்டர்
41. நாக்கு இல்லாவிட்டால் இவனுக்கு வேலையில்லை அவன் யார்?
விடை: மணி
42. அண்டாவில் இருக்கும் தண்ணி அள்ளினாலும் குறையாது அது என்ன?
விடை: கிணற்று நீர்
43. வாலுள்ளவன் ஆனால் பறப்பான் அவன் யார்?
விடை: காற்றாடி
44. கல்லிலும் முள்ளிலும் பாதுகாப்பான் தண்ணீரில் தவறிவிடுவான் அது என்ன?
விடை: செருப்பு
45. வெளிச்சத்திலே பிடிப்பதை இருட்டிலே பார்க்கிறோம் அது என்ன?
விடை: திரைப்படம்
46. பருத்த வயிற்றுக்காரி படுத்தேக் கிடப்பால் அவள் யார்?
விடை: தலையணை
47. வயிறு இருக்கும் சாப்பிடாது காது உண்டு கேட்காது அது என்ன?
விடை: துணிப்பை
48. அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை அது என்ன?
விடை: தலைவகிடு
49. பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ அது என்ன?
விடை: வாழைப்பூ
50. முதுகை தொட்டால் மூச்சு விடுவான் பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான் அவன் யார்?
விடை: ஆர்மோனியம்