தர்பூசணி பழம் பயன்கள்

tharpoosani benefits in tamil

இனிமையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் குறைந்த கலோரி கொண்ட கோடை கால பழமாகும். தர்பூசணியில் 90% தண்ணீரை கொண்டது. இது கோடையில் ஏழை எளிய மக்களுக்கு சிறந்த பழமாக இருக்கிறது.

தர்பூசணிக்கு இயற்க்கை வயகரா என்ற பெயருமுண்டு. இவ்வாறு அழைக்கப்படுவதற்கான காரணம் அரியவகை சிட்ருலின் புரதச்சத்து அதிக அளவில் இருப்பதனால் இதற்கு இயற்கை வயகரா என பெயர் வந்தது.

உலகில் சீனா தான் இப்பழ உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. உலகின் உற்பத்தியில் ஐம்பது விழுக்காட்டிற்கும் அதிகமாக சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

தர்பூசணி பழம் பயன்கள்

#1. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சி அடையும். தர்பூசணி பழத்தில் அதிக தண்ணீர் சத்து உள்ளது.

வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தால் நீர் சத்து பற்றாக்குறை நம் உடலில் ஏற்படும் பொழுது தர்ப்பூசணி பழங்கள் அதைப் பாதுகாத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

தொண்டை வலியைப் போக்கும். தர்பூசணிப் பழசாறுடன் பால் கலந்து குடித்தால் தொண்டை வலி நீங்கும்.

#2. கண் அழுத்த நோய், மாலைக்கண் போன்றவற்றை நீக்கும் இந் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு கண் குறைபாடுகள் குணமாகும். கண்களையும் குளிர்ச்சியாகும்.

#3. மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது. தர்பூசணி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர் சத்து அதிகம் உள்ளதால் இப்பிரச்சினையை எளிதில் சீர்செய்கிறது.

#4. இரத்தக் கொதிப்பினை தடுக்கும். தர்பூசணிப் பழசாறு சாப்பிட்டு வந்தால் அதிக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.

#5. உடல் எடை குறைக்க உதவுகிறது. இதில் குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடை குறைக்க உதவுகிறது.

#6. தர்பூசணியின் விதையானது சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது. தர்பூசணியில் அதிகமான இரும்புச் சத்துக்கள் மற்றும் ஹீமோகுளோபின் எனப்படும் மிகவும் அத்தியாவசியமானவை இதில் இருக்கிறது.

இவை ஆக்சிஜனை தாங்கி செல்ல உதவுகிறது. இரும்புச்சத்து உடலில் உள்ள சோர்வை நீக்க பெரிதளவு உதவி செய்கிறது. இரும்புச்சத்து தான் உடலில் இருக்கும் கலோரிகளை சக்தியாக மாற்றக்கூடியதாகும். இதனால் கலோரிகளில் உள்ள சக்தி சோர்வைப் போக்க எளிதாக இருக்கும்.

#7. தர்பூசணி ஜூஸ் குடித்தால், உடலை வறட்சியின்றி வைப்பதோடு, சருமத்தை பொலிவோடு வைப்பதற்கும் உதவும். முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமை தோற்றம் விரைவில் வருவது போன்றவற்றை தடுக்கும்.

தர்பூசணியில் லைகோபைன், வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் உள்ளது. எனவே இதன் சாற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

#8. முகப்பருக்களை நீங்கும். தர்ப்பூசணிச்சாற்றை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இது செரிமான அமைப்பை இலகுவாக்கி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

You May Also Like:
மணத்தக்காளி கீரை பயன்கள்
அருகம்புல் பயன்கள்