இந்த பதிவில் “வாய்மையே வெல்லும் கட்டுரை” பதிவை காணலாம்.
பொய் அவமானத்தையும் தலைகுனிவையும், அவப்பெயரையும் ஏற்படுத்தும். எனவே பொய்யுரைத்தலை இயன்றவரை அடியோடு ஒழித்தலே சிறப்பு.
Table of Contents
வாய்மையே வெல்லும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வாய்மையின் சிறப்பு
- திருவள்ளுவரின் கருத்து
- வாய்மையே நன்மை
- பொய்மையின் தீமைகள்
- முடிவுரை
முன்னுரை
தற்போதைய இணைய உலகில் ஒருவரை ஒருவர் பார்த்தோ அல்லது ஒருவருடன் அமர்ந்தோ பேசுவது மிகவும் அரிதாகக் காணப்படும் ஒன்று. அவ்வாறு பேசினால் கூட அவர்கள் யாரும் உண்மையை பேசிவிடுவதில்லை.
இவ்வுலகில் அருகிவரும் பழக்கங்கங்களில் மிகமுக்கியமானது வாய்மை பேசுதல். அனைவரும் தம்முடைய சந்தர்ப்பங்களிற்கு ஏற்றவாறு சாதகமாக பொய்களைக் கூறி தப்பித்து கொள்கின்றனர்.
அதுவே மிகுந்த நன்மையுடைய வாழ்க்கைப் பண்பாக அவர்களின் மனதில் பதிந்து விட்டமையை அதற்கான காரணமாகும்.
ஆனால் உண்மை எந்தளவிற்கு கசப்பானதாக இருந்தாலும் அதுவே நற்பெயரைத் தேடித்தரும். எனவே உண்மை பேசுதலின் சிறப்புக்களை அறிந்து கொள்வது அவசியமாகும். இதைப்பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
வாய்மையின் சிறப்பு
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே இறுதியில் வெல்லும்” என்று பெரியவர்கள் குறிப்பிடுவர்.
தர்மத்தின்பால் ஒழுகுதல் எந்தளவிற்கு கடினமானதாக இருந்த போதும், அதனால் எந்தளவிற்கு கெடுதல்கள் வந்திட்ட போதும் இறுதியில் வெல்வது தர்மமாகவே இருக்கும். அவ்வாறே உண்மைபேசுவதால் எந்தளவிற்கு இடர்களை சந்திக்க நேர்ந்தாலும் அதனால் கிடைக்கும் பயனானது அளப்பரியதாக இருக்கும்.
அன்றிலிருந்து இன்றுவரை உண்மைக்கு எடுத்துக் காட்டாக குறிப்பிடப்படுபவன் அரிச்சந்திரன். அவன் இன்றுவரை மக்களால் நினைவுகூரப்படுவதற்கான காரணம் அவனது வாய்மை பேசும் பண்பாகும். காலம் காலமாக உண்மை பேசுதல் உயரிய பண்பாக வலியுத்தப்பட்டு வந்துள்ளது.
ஒளவையார் அவரது நூலாகிய உலகநீதியில் “நெஞ்சாரப் பொய்தனை சொல்ல வேண்டாம்” என்று குறிப்பிடுகின்றார். அதாவது எமக்கு உண்மை தெரிந்திருக்கின்றபோது அதனை மறைத்து பொய்யுரைக்கக் கூடாது என்கின்றார்.
முண்டாசுக் கவிஞனாகக் போற்றப்படும் பாரதியார் அவரது பாடல் தொகுதியில் “பொய் சொல்லக் கூடாது பாப்பா” என சிறுவர்களை பொய் பேசக்கூடாது என அறிவுறுத்துகின்றார்.
திருவள்ளுவரின் கருத்து
வாழ்வியல் நூலாகிய திருக்குறளை அருளிய திருவள்ளுவர் அவரது நூலில் வாய்மையுரைத்தலிற்கு தனியானதொரு அதிகாரத்தை உருவாக்கியுள்ளார். இதிலிருந்தே அவர் உண்மை பேசுதலிற்கு தரும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
வாய்மை என்றால் என்ன என்பதனை “வாய்மையே வெல்லும் கட்டுரை வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்” என வரையறுக்கின்றார். அதாவது மற்றவர்களிற்கு தீங்கு தரும் சொற்களைக் கூட உரைக்காமல் இருப்பதே வாய்மை ஆகும்.
வாய்மையின் சிறப்பை குறிப்பிடும் போது “இன்னா செய்தாரை தெய்வம் இருக்கு வாய்மை உடையார் தெய்வம் காக்கும்” என்று குறிப்பிடுகின்றார்.
உண்மை பேசுபவரை தெய்வம் காக்கும் என்றும், பொய்யரைத்து தவறுகள் செய்பவரை தெய்வம் நிந்திக்கும் என்பதே அதன் பொருளாகும். அதனைத்தவிர “யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும் வாய்மையின் நல்ல பிற” என்றும் சிறப்பிக்கப்படுகின்றது.
வாய்மையே வெல்லும்
உண்மை என்பது அனைவருக்கும் நன்மை பயக்கும் நற்பண்பாகும். உண்மை பேசுவது மனவலிமையையும், மனநிறைவையையும் பெற்றுத்தரும். பொய் உரைக்கும் போது அதனை நிரூபிக்க மீண்டும் மீண்டும் பொய்யுரைக்க வேண்டி ஏற்படலாம்.
ஆனால் உண்மை பேசும் போது அவ்வாறான சிக்கல்கள் நிகழாது. இதனைத் தவிர நாம் யாரிடமாவது பொய்யுரைத்து அது நிரூபிக்கப்பட்டால் எம்மீது மற்றவர்களுக்குள்ள நம்பிக்கை மற்றும் சமூகத்திலுள்ள நன்மதிப்பு ஆகியற்றை இழக்க நேரிடும்.
அதன்பின் நாம் உண்மை கூறினால் கூட ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. உண்மையானது பல எதிர்ப்புக்களை தேடித்தந்தாலும் அதுவே நம்மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பும்.
இதனைத் தவிர நல்ல நேர்மையான உறவுகளையும், நாம் சரியான பாதையில் பயணிக்கின்றோம் என்ற தன்னம்பிக்கையையும் பெற்றுத் தரும்.
பொய்மையின் தீமைகள்
“பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என வள்ளுவர் குறிப்படுகின்றார். ஒரு பொய்யால் மற்றவர்களிற்கு நன்மை கிடைக்கும் என்றால் அதனைத் சொல்வதில் தவறில்லை என்கின்றார்.
ஆயிரம் பொய்யாவது சொல்லி ஒரு நற்காரியத்தை நடத்தி முடிக்கலாம் என பெரியவர்கள் குறிப்பிடுவர். ஆனால் நாம் கூறும் பொய்களால் அடுத்தவரிற்கு மனசங்கடமும், எம்மீதான அதிருப்தியும் தோன்றும் என்பதில் ஐயமில்லை.
பொய்யினால் மனஅமைதியும் நேர்மறையான எண்ணங்களும் எம்மை விட்டு அகன்று விடும். பொய் அவமானத்தையும் தலைகுனிவையும், அவப்பெயரையும் ஏற்படுத்தும். எனவே பொய்யுரைத்தலை இயன்றவரை அடியோடு ஒழித்தலே சிறப்பு.
முடிவுரை
உண்மையின் வலிமையானது மற்றவர்களை நம்பால் ஈர்க்கும் சக்தி கொண்டது. வாய்மையுரைப்பவர்கள் சான்றோர்களாக சிறப்புறுவர்.
உண்மையை பேசும்போது நாம் மற்றவர்களைப் பார்த்து பயப்பட வேண்டிய தேவை இல்லை. இத்தகைய சிறப்புக்களைத் தேடித்தரும் உண்மையைப் பேசி உத்தமர்களாய் வாழ்வோமாக.
You May Also Like :