மொழி வேறு பெயர்கள்

mozhi veru sol

உயிரினங்கள் அனைத்தும் தம்முடைய தகவல்களை பரிமாற்றிக் கொள்ள பயன்படும் ஊடகங்களில் மொழியும் ஒன்றாகும். மிருகங்கள் சைகை முறையிலான மொழியை பயன்படுத்த மானிடர்கள் சத்தத்துடனும் கூடிய மொழியையும் எழுத்து வடிவிலான மொழியையும் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு சிறப்புடைய மொழி பற்றிய அறிவியல் அடிப்படையான கற்கை மொழியியல் எனப்படும்.

உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை மொழி பயன்பாட்டில் உள்ளது. அவ்வகையில் 6000 தொடக்கம் 7000 வகையான மொழி தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ளது.

இன்று அதிக அளவில் இந்தோ-ஐரோப்பிய, சீன-திபெத்திய குடும்பங்களை சேர்ந்த மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு எண்ணங்களை பரிமாற பயன்படும் மொழிக்கு வேறு பெயர்களும் உண்டு.

மொழி வேறு பெயர்கள்

  1. பதம்
  2. கிளவி
  3. கூறு
  4. இயம்பு

மொழியின் தோற்றம்

மொழி எப்போது உருவானது என்பது பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. இருந்தாலும் உலகில் தோன்றிய முதல் மொழி என்பதற்கு பல ஆதாரங்களை தமிழ் மொழி கொண்டுள்ளது.

மேலும் பலருடைய ஆராய்ச்சி முடிவுகளும் மொழியின் வடிவத்தை இறுதி செய்ய முடியவில்லை. அது குழப்பமாதாகவே உள்ளது. மேலும் மொழி என்பது தங்களுடைய முன்னோர்களிடம் இருந்து ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்படுகின்றது.

இவ்வகையான கோட்பாடுகள் தொடர்ச்சி சார்ந்த கோட்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தவகையான கோட்பாடுகள் மொழி என்பது மனிதர்களுக்கு மட்டுமான ஒன்று என கூறுகிறது. மேலும் உயிருள்ள பிற விலங்குகளுக்கு இத்தகைய ஒன்று இல்லை என்பதாக கூறுகின்றனர்

தகவலுக்கான கருவியாக மொழியின் பயன்பாடு

மக்கள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக மொழி உள்ளது. இது வாய்மொழி அல்லது குறியீட்டு ஒலிப்புகளை பரிமாறிக்கொள்ள மனிதர்களுக்கு உதவுகிறது.

இந்தியாவில் காணப்படும் மொழி இனங்கள்

  • தமிழ் மொழிக் குடும்பம்
  • இந்திய-ஐரோப்பிய மொழிகள்‎
  • திபெத்திய-பர்மிய மொழிகள்
  • இந்திய-ஆரிய மொழிகள்

மொழி இன்றி பேச்சு என்பது இல்லை. இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களை கொண்டதே மொழியாகும்.

Read more: பேச்சு மொழி என்றால் என்ன

மொழி என்றால் என்ன