இணையத்தின் பயன்கள்

inaiyathin payangal in tamil

உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இன்று உலகமே விரல் நுனிக்கு வந்து விட்டது என்றால் அதற்கு முக்கிய காரணமே இணையம் ஆகும். நவீன உலகில் பாலமாய் இருப்பதும் இணையமே ஆகும்.

இணையத்தை பயன்படுத்துவதில் இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இணையம் மனிதனுக்கு எண்ணிலடங்காப் பயன்களை அளிக்கின்றது. இணையத்தின் பயன்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

இணையத்தின் பயன்கள்

சிகிச்சைகளை இலகுவாக மேற்கொள்வதற்கு இணையம் உதவுகின்றது.

இணையத்தின் உதவியால் பல மருத்துவ சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. பல நாடுகளில் மருத்துவ வல்லுனர்கள் இந்த முறையை கையாளுகின்றனர்.

சமூக மாற்றங்களை, சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு உதவியாக உள்ளது.

சமீப ஆண்டுகளில் ட்விட்டர், பேஸ்புக் போன்ற தளங்களில் நடைபெற்ற விரைவான தகவல் பரிமாற்றங்களின் காரணமாய் எகிப்து, துனீஷியா போன்ற சில நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் கூட ஏற்பட்டுள்ளன.

பிரச்சாரத்திற்கு சமூக வலைத்தளங்கள் பெருமளவு உதகின்றன. சமூகத்திற்கு தேவையான விடயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இணையம் ஊடகமாகப் பயன்படுகின்றது.

பலர் வலைத்தளங்களிலிடும் பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இணையம் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இணைய வழி வணிக பரிவர்த்தனைகளின் தாக்கம் தற்போது சாதாரண மக்களையும் எட்டியுள்ளதால், மின் வணிகம் நல்ல மதிப்பையும், வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

வணிக நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கின்றது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் உயர்கின்றது.

புதிய எழுத்தாளர்கள் பலரும் உருவாகி வருவதற்கு இணையமே துணைபுரிகின்றது.

இணையத்தில் யார் வேண்டுமானாலும் எந்தப் பிரிவின் கீழும் எழுதலாம். அதனை நாமே வெளியிடலாம். எம்முடைய கருத்துகளுக்கும், பதிவுகளுக்கும் மிக விரைவாக பலரையும் சென்றடைகின்றது. இதனால் பல எழுத்தாளர்கள் உருவாக இணையம் துணை நிற்கின்றது.

வாசிப்பு வளம் மேம்பட இணையம் உதவியாக உள்ளது.

இணையத்தில் பல மின் நூல்களாக கட்டுரைகள், கவிதைகள், சஞ்சிகைகள், பத்திரிகை செய்திகள், ஆய்வுகள் என பலவும் கிடைக்கின்றன. இதனால் சமூகத்தின் வாசிப்பு வளம் பெருகத் தொடங்கியிருப்பதை உணர முடிகின்றது.

செய்திகளை அனுப்பவும், படங்கள், ஒலிக்கோப்புக்கள், காணொலிகள் போன்றவற்றை பார்க்கவும் முடிகின்றது.

மின்னஞ்சல் மூலமாக செய்திகளை அல்லது தகவல்களை அனுப்புவதன் மூலம் விரைவாக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. இது மட்டுமல்லாது காணெலிகளைப் பார்த்தும் பிறருக்கு அனுப்பவும் இணையத்தின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

உறவுகளுக்கு பாலமாக அமைகின்றது.

பல மைல் தூரம் இருக்கும் உறவுகளுடன் உரையாடியும், வீடியோ கால் மூலம் முகத்தை பார்த்து மகிழ்வதற்கும் இணையம் உதவுகின்றது. கல்வி நடவடிக்கைகளுக்காக மற்றும் தொழில் நிமிர்த்தம் வெளிநாடு செல்பவர்கள் தங்கள் உறவுகளுடன் மனம்விட்டு பேசுவதற்கும் இணையம் உதவுகின்றது.

மொழி வளர்ச்சிக்கு உதவுகின்றது.

தமிழ் மொழியில் பல இணைய அமைப்புக்களும் பல கோடி இணையப் பக்கங்களும் உள்ளன. தமிழ் தகவல்களை கடல் கடந்து உடனுக்குடன் தொரிந்து கொள்ள உதவியாகவுள்ளது. இது போன்று பல மொழிகளின் வளர்ச்சிக்கும் இணையம் உதவுகின்றது.

நூல்களை சேமித்து வைக்கலாம்.

பழங்கால இலக்கியங்கள் முதல் தற்கால புதுமை படைப்புகள், வார இதழ்கள், சஞ்சிகைகள் என அனைத்தையும் இணையத்தில் சேகரிக்க முடியும். இதன் மூலம் நூல்கள் பாதுகாக்கப்படுவதுடன் தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்தவும் முடிகின்றது.

அலுவலகப் பணிகளுக்கு உதவுகின்றது.

அலுவலகத்திற்கு சென்றோ அல்லது வீட்டிலிருந்த படியோ இணைய வழியாக பணிகளை முடித்துக் கொள்ள இணையம் உதவுகின்றது. வீட்டிலிருந்த படியே இணையம் மூலம் பணியாற்றுபவர்களுக்கு நேரம், பணம் மீதப்படுவதுடன் பயண அலைச்சல்களும் இருப்பதில்லை.

கல்வி வளர்ச்சிக்கு உதவுகின்றது.

இன்றைய காலப்பகுதிகளில் கல்வி துறையில் இணையத்தின் பயன்பாடு அளப்பரியதாகும். மாணவர்கள் தங்கள் அறிவை விருத்தி செய்யவும் இலகுவாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவும் இணையம் துணை புரிகின்றது.

You May Also Like :
தமிழ் மொழியின் பண்புகள் யாவை
சமூக வலைத்தளங்கள் பற்றிய கட்டுரை