Table of Contents
முதலுதவி அறிமுகம்
மனித வாழ்க்கை நிலையற்றதாகும். வாழ்வில் நல்ல தருணங்கள் நிகழ்வதுமுண்டு அதேவேளை சில சமயங்களில் மேசமான விபத்துக்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.
அவ்வாறான நெருக்கடி நிலைகளில் எம்மையும் காத்து பிறரையும் காத்துக்கொள்ளத் தெரிந்திருப்பது அவசியமானதாகும். இதற்கு முதலுதவியை முறையாகப் பயின்று கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபர்க்கு அளிக்கப்படும்.
முதலுதவி என்பது விளக்கம்
முதலுதவி என்பது சிறிய காயம் உள்ள ஒருவருக்கு வழங்கப்படும் முதல் கவனிப்பைக் குறிக்கின்றது.
அதாவது முதலுதவி என்பது திடீரென காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு உரிய வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச்சூழலில் கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி அதற்கெனப் பரிந்துரைக்கப்பட்ட முறையில் உயிரைக் காப்பதற்கு அல்லது தக்கவைத்துக் கொள்வதற்கு வழங்கப்படும் அவசர உதவியாகும்.
முதலுதவியின் முக்கியத்துவம்
எந்த நேரத்திலும், நீங்கள் அல்லது உங்களைச் சுற்றியுள்ள ஒருவர் காயம் அல்லது நோயை அனுபவிக்கலாம்.
அடிப்படை முதலுதவியைப் பயன்படுத்தி, ஒரு சிறிய விபத்தை மோசமாக்குவதைத் தடுக்கலாம்.
தீவிர மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், முதலுதவி மூலம் உயிரைக் கூட காப்பாற்றலாம். அதனால்தான் அடிப்படை முதலுதவி திறன்களைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம்.
உலக முதலுதவி தினம்
ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி “உலக முதலுதவி தினம்” உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நாளில் முதலுதவியின் முக்கியத்துவமும் பற்றியும் ஒருவர் ஆபத்தில் இருக்கும் போது அவருக்கு எத்தகைய உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகக் கொண்டாடப்படுகின்றது.
மாரடைப்புக்கான முதலுதவி
யாராவது மாரடைப்பால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை அழைக்க வேண்டும். ஒரு போர்வையால் மூடி, தொழில்முறை உதவி வரும் வரை அவர்களை ஆறுதல்படுத்த வேண்டும்.
அவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், மார்பு மற்றும் கழுத்தில் உள்ள ஆடைகளை அவிழ்த்து இலகுபடுத்தல் அவசியமாகும். அவர்கள் சுயநினைவை இழந்தால் CPR (Cardio Pulmonary Resuscitation) எனப்படும் உயிர் காக்கும் முதலுதவியைத் தொடங்கவும்.
காற்றுப்பாதை, சுவாசம் மற்றும் சுழற்சி (ABC = A-Airway, B-Breathing, C-Circulation)
யாராவது சுயநினைவின்றி அல்லது பதிலளிக்காமல் இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதலுதவியின் அடிப்படைக் கொள்கை ஏபிசி(ABC) ஆகும்.
காற்றுப்பாதை – யாராவது சுவாசிக்கவில்லை என்றால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது அவர்களின் சுவாசப்பாதையை சுத்தம் செய்வதாகும்.
சுவாசம் – நீங்கள் ஒரு நபரின் காற்றுப்பாதையை சுத்தம் செய்திருந்தாலும், அவர் இன்னும் சுவாசிக்கவில்லை என்றால், மீட்பு சுவாசத்தை வழங்கவும்.
சுழற்சி – நீங்கள் மீட்பு சுவாசத்தை மேற்கொள்ளும்போது, அந்த நபரின் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க மார்பு அழுத்தங்களைச் செய்யுங்கள். ஒரு நபர் சுவாசிக்கிறார், ஆனால் பதிலளிக்கவில்லை என்றால், அவரது துடிப்பை சரிபார்க்கவும்.
அவர்களின் இதயம் நின்றுவிட்டால், மார்பு அழுத்தங்களை வழங்கவும்.
முதலுதவியின் நோக்கம் உயிரைக் காப்பாற்றுவது, நோயின் தன்மையை அதிகரிக்காமல் தடுப்பது, விரைந்து குணமடைவது போன்றவையாகும்.
எனவே சரியான நேரத்தில் செய்யப்படும் முதலுதவியானது சக மனிதர்களின் உயிரைக்காக்க உதவுகின்றது. எனவே உயிர்காக்கும் முதலுதவியை முறையாகப் பயில அனைவரும் ஆர்வம் கொள்ளவேண்டும்.
You May Also Like : |
---|
முதலுதவி பற்றிய கட்டுரை |
தமிழ் மொழியின் பண்புகள் யாவை |