தமிழில் தோன்றிய முதல் சிறுகதை எது

tamilil thondriya muthal sirukathai

தவழ்ந்து விளையாடும் மழலை முதல் தள்ளாடித் திரியும் மனிதர்கள் வரை அனைவருக்கும் கதை என்றால் சுவாரஸ்யமான இன்பம் ஆகும். கதைகளில் பஞ்ச தந்திரக் கதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் எனப்பல வகைகள் உண்டு.

இன்றைய இந்த பதிவில் நாம் தமிழில் தோன்றிய முதலாவது சிறுகதை பற்றிய வரலாற்றை விரிவாகவும் விளக்கமாகவும் பார்ப்போம்.

தமிழில் தோன்றிய முதல் சிறுகதை

வ.வே.சு ஐயருக்கு முன்னர் வீரமாமுனிவர், அ.மாதவய்யா,பாரதியார் போன்றோரது பரமார்த்தகுரு கதை, குசிகர் குட்டிக் கதைகள், சிறிய கதைகள் போன்றன அச்சில் பதிப்பித்து வந்திருந்தாலும் கூட இவற்றுள் ஒன்றும் சிறுகதை என்ற வடிவத்திற்குள் அடங்கவில்லை.

சிறுகதை என்ற வடிவத்தில் முதன்முதலில் வெளிவந்தது வ.வே.சு.ஐயரின் “குளத்தங்கரை அரசமரம்” எனும் கதை ஆகும்.

நம் செவிகளினால் சொல் கதைகள், பழங்கதைகள், தொன்மக்கதைகள், பாட்டி சொன்ன கதைகள், விடுகதைகள், நெடுங்கதைகள், குட்டிக் கதைகள், பஞ்ச தந்திரக்கதைகள், தெனாலிராமன் கதைகள், இதிகாச கதைகள், மரியாதைராமன் கதைகள், ஆயிரத்தோர் இரவுக்கதைகள் என பல்வேறு வடிவங்களிலான கதைகளை வாழ்வியலில் கேட்டிருப்போம்.

சிறுகதை பற்றிய அறிஞர்களின் கருத்து

சிறுகதை என்பதற்கு பல்வேறு அறிஞர்களும் பல தரப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

“சிறுகதை என்பது தற்காலத்தில் எழுந்த மேல் நாட்டுச் சரக்கு. சிறுகதை என்றால் சிறிய கதை கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல. ஒரு சிறிய சம்பவம், ஒரே மனோநிலை என ஒரு கருப்பொருள் பற்றி எழுதுவது சிறுகதை என்பது வாழ்க்கையின் சாளரங்கள்” என புதுமைப்பித்தன் சிறுகதை என்பதனை விளக்கமாக வரையறை செய்துள்ளார்.

மேலும் சிறுகதை என்பது ஒரே அமர்வில் வாசித்து முடிப்பதாக இருக்க வேண்டும். முதல் வரியிலேயே கதை ஆரம்பமாகிவிட வேண்டும். ஒரு பொருள் பற்றியதாகவோ ஒரு மனோநிலை பற்றியதாகவோ ஒருமை கொண்டதாக அமைய வேண்டும் என வரையறை செய்துள்ளார் அமெரிக்க சிறுகதைகளின் முன்னோடியான எட்கர் ஆலன்போ.

தமிழில் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்பி வ.வே.சு ஐயரது “மங்கையற்கரசியின் காதல்” எனும் சிறுகதைத் தொகுப்பு ஆகும். மங்கையற்கரசியின் காதல், காங்கேயன், கமல விஜயம், ழேன் ழக்கே, குளத்தங்கரை அரச மரம் போன்ற ஐந்து சிறுகதைகள் ஆகும்.

இவருடைய “மங்கையற்கரசியின் காதல்” என்ற தொகுப்பு கம்ப நிலையம் சார்பாக இவரால் வெளியிடப்பட்டது. இந்த தொகுப்பே தமிழ்மொழியில் முதன்முதலாக வெளிவந்த சிறுகதை தொகுப்பு இதுவாகும்.

இன்றைய சமகாலப் போக்குகளை மையமாக வைத்து குளத்தங்கரை அரசமரம், கமல விஜயம் ஆகிய சிறுகதைகளை இயற்றியுள்ளார்.

சிறுகதையின் தோற்றம்

உலகப்போரின் பின்னரான தொழில் புரட்சிக்கும் பிறகு மக்களின் நடத்தைகளிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்பட்ட மாற்றம் காரணமாக போற போக்கில் வாசித்து விடக் கூடியனவாக தோற்றம் பெற்றனவே சிறுகதைகள் ஆகும்.

குறிப்பாக இந்தியாவில் சுதந்திரத்திற்கான பாரிய போராட்டம் நடைபெற்ற வேளையிலேயே சிறுகதையும் பிறந்தது.

வ.வே.சு ஐயர் 1925 யூன் 4 குளத்தில் விழுந்த மகளைக் காப்பாற்றத்தான் குளத்தில் விழுந்து சுழியில் சிக்கி உயிர் நீத்தார்.

Read More: சிறுகதை என்றால் என்ன

தமிழ் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை