நாவல் என்றால் என்ன

naval endral enna

நாவல் அறிமுகம்

புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஓர் இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரை நடையில் எழுதப்படுகின்றது.

மனித மனமானது கதையிலும், வரலாற்றிலும் ஆர்வம் காட்டக்கூடியதாகவுள்ளது. உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் உள்ளது.

நாவல் என்பது ஒருவருடைய வாழ்வைக் கூறக்கூடியது எனலாம். வாழ்க்கையும் நிகழ்வுகளும் கற்பனையாக உரை நடை வடிவில் எழுதப்படும். நாவல்கள் ஆங்கிலத்தில் இருந்தே தமிழுக்கு அறிமுகமாகின.

நாவல் வேறு பெயர்கள்

  • புதினம்
நாவல் என்றால் என்ன

நாவல் என்பது விளக்கம்

நாவல்கள் புதினம் எனவும் அழைக்கப்படுகின்றன. மேல் நாட்டவரின் தொடர்பின் மூலம் தமிழிற்குக் கிடைத்த புதிய வகை இலக்கியமே நாவலாகும். இச்சொல் Novela என்னும் இத்தாலியச் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டதாகும்.

தமிழர்கள் நவீனம் என்று அழைக்கத் தொடங்கி பின்னர் நவீனம் எனப் பெயரிட்டழைத்து இன்று புதினம் என்று அழைக்கின்றனர்.

நாவல் என்பதற்கு வெப்ஸ்டரின் அகரமுதலியானது (Webster’s New 20th Century Dictionary) மனித உணர்ச்சிகள், எண்ணங்கள், அனர்தம், செயல்கள் ஆகியவற்றினை விளக்கி எடுத்துரைக்கின்ற உரைநடையில் அமைந்துள்ள நீண்ட கதை என விளக்கமளித்துள்ளது.

உலகின் முதல் நாவல்

நாவலைப் பரிசோதனை முயற்சியாகவே முதலில் எழுதினர். இத்தாலி நாட்டைச் சேர்ந்த பொக்காசியோ என்ற எழுத்தாளர் தன்கதையினை எழுதினார். அதன் பெயர் தெகாமரன் ஆகும். இதுவே புதினத்திற்கான முன்னோடியாகக் கருதப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து சாமவேல் ரிச்சட்சன் என்பவர் 1741 ஆம் ஆண்டில் பமிலா என்ற நாவலை எழுதினார். இதுவே உலகின் முதல் நாவல் என்று கருதப்படுகின்றது.

வரலாற்று நாவல்கள்

வரலாற்று நாவல்கள் உலகில் தோன்றுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது பிரஞ்சுப் புரட்சியாகும்.

பிரஞ்சுப் புரட்சியின் பின்னரான காலப்பகுதியில் ஐரோப்பிய சமூகத்திலும், இலக்கியத்திலும் நவீன சிந்தனையைத் தோற்றுவித்தது. தேசியப்பற்று அதிகரித்தது. இதனால் தமது வரலாறு பற்றி அறிந்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டினர்.

இது போன்ற காரணங்களால் வரலாற்று நாவல்கள் ஐரோப்பாவில் முதலில் தோற்றம் பெற்றன. வரலாற்று நாவல்கள் என்கின்ற போது வரலாற்றுத் நிகழ்வுகளை ஒழுங்கான முறையில் தரவுகளுடன் எடுத்துக்காட்டுவதாக இருக்கும்.

தமிழில் தோன்றிய முதல் வரலாற்று நாவல் மோகனாங்கி நாவல் என்பது வரலாற்று ஆய்வாளர்களதும், இலக்கியத் திறனாய்வாளர்களதும் கருத்தாகும்.

சமுதாய நாவல்கள்

சமுதாயத்தின் வாழ்வியல் சூழலையும், சமுகச் சிக்கல்களையும் அடிப்படையாக கொண்டு எழுதப்படும் நாவல்கள் சமுதாய நாவல்களாகும்.

தமிழில் சமூகவியல் நோக்கில் நாவல்களை எழுதுபவர்களில் முன்னோடியாக பொன்னீலன், பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ். இராமகிருஷ்ணன் போன்றோர் காணப்படுகின்றனர்.

தமிழின் தோன்றிய சமுதாய நாவல்களாக நெடுங்குருதி, காடு, ஏழாம் உலகம், புதிய தரிசனங்கள் போன்றவற்றைக் கூறலாம்.

நாவல்களின் பண்புகள்

நாவலானது தனக்கென அமைந்த ஒரு பெரிய கதைக்களத்தைக் கொண்டது. தனி மனிதனின் சிக்கல்கள் மற்றும் சமுதாய வாழ்க்கையின் பல பகுதிகளையும் சித்தரித்துக்காட்டவதற்குரிய நிகழ்விடமாகப் புதினத்தின் கதைக்களம் இருக்கும். நாவல்கள் கற்பனையான உள்ளடக்கத்தினைக் கொண்டிருக்கும்.

அரைக் கற்பனையான நாவல்கள் (உண்மையான நிகழ்வுகள் அல்லது நபர்களால் ஈர்க்கப்பட்ட வரலாற்றுப் படைப்புக்கள் போன்றவை) உள்ளன. ஆனால் தூய புனைகதை அல்லாத படைப்பு ஒரு நாவலாக வகைப்படுத்தப்படாது.

இன்றைய நவீன உலகில் பல பொழுதுபோக்கு சாதனங்கள் கிடைக்கப்பெறுவதாலும், பரபரப்பான வாழ்க்கை முறையாலும் வாசிப்புப் பழக்கம் அருகிவிட்டது. காலம் தோறும் புதிய புதிய நாவல் படைப்புக்கள் தோன்றுகின்றன. அவற்றை வாசித்து ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

You May Also Like :
சங்க இலக்கியத்தின் சிறப்புகள்
எட்டுத்தொகை நூல்கள் யாவை