இன்றைய காலத்தில் சீரற்ற பராமரிப்பு, ஆரோக்கியமின்மை போன்ற பல பிரச்சனைகளால் முடி உதிர்வு, பிரச்சனை ஏற்படுகிறது. இன்றைய பதிவில் நாம் முடி அடர்த்தியாக வளர செய்ய வேண்டியவை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்
#விற்றமின் A
தலை முடி அடர்த்தியாக வளர விற்றமின் A பெரிதும் உதவுகிறது. விற்றமின் A பப்பாசி, கரட், அத்திப்பழம் போன்ற பழங்களில் காணப்படுகின்றது. இந்த பழங்களை தினமும் உண்பதால் தலைமுடி உதிர்வதை தடுத்து வளர்வதை அதிகரிக்கலாம்.
#விற்றமின் B5
தலைமுடி வளர்ச்சிக்கு விற்றமின் B5 சத்து அவசியம். இது முட்டை, காளான், காலிபிளவர், சர்க்கரை வள்ளி போன்றவற்றில் அதிகளவு நிறைந்துள்ளது. இந்த உணவுகளையும் அடிக்கடி உண்பது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
#விற்றமின் C
விற்றமின் C ஊட்டச் சத்தானது முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் பாரிய பங்கு வகிக்கிறது. விற்றமின் C எலுமிச்சை, கொய்யா, நெல்லிக்காய், ஸ்ரோபரி, தோடம்பழம், முலாம்பழம் போன்ற பழங்களில் அதிகளவு நிறைந்துள்ளது.
எனவே இந்த பழங்களை தினமும் உண்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் முடி உதிர்வு தடுக்கப்பட்டு முடி அடர்த்தியாக வளர வழிவகுக்கும்.
#விற்றமின் E
விற்றமின் E தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த விற்றமின் E ஊட்டச்சத்தானது அவகாடோ, பாதாம், Wheat germ oil, சூரியகாந்தி விதைகள் போன்றவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மேற்கூறியவற்றை இயலுமானவரை தினமும் அல்லது அடிக்கடி உண்டு வர தலைமுடி அடர்த்தியாக வளரும்.
#இரும்புச்சத்து
இரும்புச்சத்து முடி உதிர்வதைத் தடுப்பதில் பாரிய பங்கு வகிக்கிறது. எனவே முடி நீளமாக வளர இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான பச்சைக் காய்கறிகள், முட்டைக்கோஸ், பீன்ஸ், கீரைகள், பச்சைப் பட்டாணி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து உண்ணுதல் சிறப்பானது.
#ஒமேகா 3
தலைமுடி வளர்ச்சியில் ஒமேகா 3 என்னும் ஊட்டச்சத்தும் அதிக பங்கு வகிக்கிறது. இந்த ஒமேகா 3 ஊட்டச்சத்து மீன்கள், பாதாம், ஆளி விதைகள், வால்நட்ஸ் போன்றவற்றில் அதிகளவு காணப்படுகின்றது. எனவே ஒவ்வொரு நாளும் மேலே குறிப்பிட்ட உணவுப் பொருட்களில் ஒன்றையேனும் கட்டாயம் உண்ண வேண்டும்.
#எண்ணெய் பராமரிப்பு
முடி ஆரோக்கியமாக வளர எண்ணெய் வைக்க வேண்டும். சிலர் தமது வாழ்நாளில் எண்ணெயே வைப்பதில்லை. அவ்வாறனவர்கள் எல்லோரும் வாரம் ஒருமுறை இளம்சூடான எண்ணெய் தலையின் வேர்ப்பகுதி வரை படும்படியாக வைத்து நன்றாக மசாஜ் செய்து ஊற விட்டு ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தலை குளிக்க வேண்டும்.
#ஹெயார் ட்ரையர் (Hair Dryer)
சிலர் தினமும் தலை குளித்து பின்னர் உலர வைப்பதற்காக ஹெயார் ட்ரையரை பயன்படுத்துகின்றனர். இதனால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு முடி உதிர்வு அதிகரிக்கும். எனவே ஹெயார் ட்ரையர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
#வெங்காயச் சாறு
முடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு வெங்காயச் சாறு பெரிதும் பங்காற்றுகிறது. வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து வெங்காயம் ஊறிய பின்னர் அந்த நீரினை எடுத்து முடியை அலசி வர முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
மேற்குறிப்பிட்ட இயற்கை வழிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்து முடி உதிர்வதைத் தடுப்போம்.
Read more: மாதவிடாய் வர என்ன சாப்பிட வேண்டும்