தொல்லியல் என்றால் என்ன

tholliyal enral enna

அறிமுகம்

நம்முடைய முந்தய சமுதாயங்கள் விட்டுச் சென்ற தடையங்கள் மூலம் பண்டைய வரலாற்றை மறு பதிவு செய்வதால் தொல்லியல் ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

தொல்லியல் மற்றும் வரலாறு ஆகிய இரண்டுமே பண்டைய சமுதாயத்தை மனித ஆய்வு செய்கின்றன.

கிடைக்கின்ற பழைய பொருட்களைக் கொண்டு மனிதனின் பண்பாட்டை ஆய்வு செய்து வரலாற்றுக்கு மற்றுமொரு ஆய்வு நெறியினைத் தொல்லியல் தருகின்றது.

தொல்லியல் என்றால் என்ன

தொல்லியல் என்றால் என்ன

ஆர்கியாலஜி (Archeology) என்ற கிரேக்கச் சொல்லானது ஆர்க்காயஸ் என்ற மூலம் பெறப்பட்டதாகும். ஆர்க்காயஸ் என்றால் பழமை என்றும் லோகோஸ் என்றால் அறிவியல் என்றும் பொருள் வழங்கப்படுகின்றது.

தொல்லியல் என்பது மனிதன் விட்டுச் சென்ற தொல் எச்சங்களை ஆய்வு செய்து பண்பாட்டை அறிந்து கொள்வது ஆகும்.

மேலும் வரலாற்றின் பழங்காலத்தைப் பற்றி அறிய உதவும் கருவிகள், கல்வெட்டுக்கள், பொருட்கள் பற்றிய ஆய்வு தொல்லியல் எனலாம். அதாவது பொருள்சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர் செயல்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலமாகும்.

அகழாய்வுகள்

அகழாய்வுகள் மூலமாகத்தான் தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் நடத்தப்படுகின்றன. இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் மண்ணைச் சிறுகச் சிறுகத் தோண்டி தடையங்களைச் சேகரிப்பர்.

அகழாய்வுகளைப் பூமியிலும், குகைகளிலும், நீருக்கடியிலும் செய்யலாம். பண்டைய காலத்தில் இறந்தோர்களை அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன் தாழியிட்டுப் புதைப்பர். அகழாய்வுகளின் மூலம் ஏராளமான பொதுமக்கள் தாழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளும் போது கிடைக்கும் தொன்மையான கலைப் பொருட்கள் அப்பகுதியிலே சேகரிக்கப்படும் கலைப் பொருட்களுடன் அகழ் வைப்பகங்களில் காட்சிக்காக வைக்கப்படுகின்றன.

தொல்லியல் துறை

தமிழ் நாட்டின் தொல்லியல் சிறப்புக்களை வெளிப்படுத்தவும் ஆய்வு செய்யவும் பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு மொழி, பண்பாடு, கலை, வரலாறு அனைத்திலும் சிறப்புடைய தொன்மையான மாநிலமாகத் திகழ்கின்றது.

தமிழகத்தின் சிறப்பு மிக்க பழமையான பண்பாட்டு வரலாற்றுக் கூறுகளை வெளிப்படுத்தவும் செம்மொழியாம் தமிழ்மொழியின் தொன்மையினை நிலைநிறுத்தவும் எழில் மிகு கோவில்கள், கலை நயம் மிக்கச் சிற்பங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், பண்டைய சமுதாயத்தின் பல்முனைக் கோட்பாட்டை வெளிக் கொணரும் வகையிலும் தொல்லியல் துறை செயலாற்றி வருகின்றது.

தொல்லியல் துறையின் கீழ் அரசு கீழ்திசை ஓலைச்சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையமும் இயங்கி வருகின்றது.

தொல்லியல் துறையானது மறக்கப்பட்ட பழமைகளை எடுத்துக் காட்டும் துறையாக விளங்குகின்றது.

ஆழ்கடல் அகழ்வாய்வு தொல்லியல் துறையானது கோவாவிலுள்ள மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ள பூம்புகார் கடற்பகுதியில் 4 கட்டங்களாக ஆழ்கடல் அகழ்வாராச்சி நடத்தி மூழ்கிய கப்பல்தொகுதி ஒன்றையும், கட்டப்பகுதிகளையும் கண்டறிந்துள்ளது.

உடைந்த கப்பல் பகுதியிலிருந்து ஈயத்தட்டிகள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. ஆழ்கடல் ஆராய்ச்சி தொடர்ந்து மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெற்றும் வருகின்றன.

You May Also Like :
வரலாற்றை கற்பதன் பயன்கள்
சுதந்திரம் என்றால் என்ன