சுற்றுலா என்றால் என்ன

sutrula enral enna in tamil

பயணம் என்பது எல்லைகளை கடந்தது. ஒருவனுக்கு மிகப் பெரிய அனுபவம் கிடைப்பது அவன் மேற்கொள்ளும் பயணத்தின் மூலமாகத்தான் என்றால் அது மிகையல்ல.

இன்று இருக்கக்கூடிய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் சுற்றுலா போன்றன நம்மை மனிதத்தோடும் உயிர்ப்போடும் வைத்திருக்கிறது.

“பயண விரும்பிகள்” (Travellers) மலைகள், காடுகள், கடல் பயணம் என பல வழிகளில் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் சர்வதேச அளவில் பயண நூல்கள் அதிக அளவு விற்பனையை கண்டு வருகின்றன.

புதிய புதிய அனுபவங்களை பெற்றிடுவது தான் மனித பிறப்பின் மகத்துவம். இந்த மகத்துவத்தை சுற்றுலாவினால் பெற முடியும் என்றால் அது மிகையல்ல.

சுற்றுலா என்றால் என்ன

சுற்றுலா என்பது ஒரு புதிய இடம் அல்லது ஒரு புதிய நாட்டிற்குச் சென்று சுற்றிப் பார்ப்பதற்கும் புதிய இடத்தைப் பற்றிய உணர்வைப் பெறுவதற்கும் ஆகும்.

அதாவது சுற்றுலா என்பது தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தல் ஆகும்.

மேலும் சர்வதேச வரையறையின் படி, சுற்றுலா என்பது ஒருவர் தமது “வழமையான சுற்றுச்சூழலை விட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஒரு வருட காலகட்டத்திற்குள் அமைய வேண்டும். மேலும், அப்பயணத்தின் மூலம் பயணி பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெறக் கூடாது”.

சுற்றுலாவின் முக்கியத்துவம்

அனைத்து நாடுகளிலும் சுற்றுலாத்துறைக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகின்றது. சுற்றுலா ஒரு நாட்டை உலகத்தரம் வாய்ந்த நாடு என்று அழைக்கவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் முக்கியமானதாகும்.

ஒரு நாட்டின் கலை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கும் பெறுமதிமிக்க வரலாற்று சின்னங்கள், இடங்கள் போன்றவற்றை பாதுகாப்பதற்கும் சுற்றுலாத்துறை முக்கியமானதாகும்.

ஒரு நாட்டிற்கு பெருமை மற்றும் மரியாதை போன்றவற்றை நிலைநாட்டுவதற்கும் சுற்றுலா முக்கியமானதாகும்.

சுற்றுலாவின் வகைகள்

சுற்றுலாவானது பல வகைகளைக் கொண்டுள்ளது. அந்தவகையில்

  • பொழுதுபோக்கு சுற்றுலா
  • வணிகச் சுற்றுலா
  • கலாச்சாரச் சுற்றுலா
  • இயற்கைச் சுற்றுலா
  • இன்பச் சுற்றுலா
  • விளையாட்டுச் சுற்றுலா
  • மதச் சுற்றுலா
  • மருத்துவச் சுற்றுலா
  • சாகசச் சுற்றுலா

போன்ற பல சுற்றுலாக்கள் உள்ளன.

சுற்றுலாவின் மிகவும் பொதுவான சுற்றுலாவாக பொழுதுபோக்குச் சுற்றுலா காணப்படுகின்றது.

இவ்வகைச் சுற்றுலாவிற்கு கடற்கரை, பூங்காக்கள் போன்ற இடங்களைத் தேரர்ந்தெடுப்பர். குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் கலாச்சாரம், வரலாறு போன்றவற்றைப் பார்வையிடுவதனை நோக்காகக் கொண்ட சுற்றுலா கலாச்சாரச் சுற்றுலாவாகும்.

இயற்கைச் சுற்றுலா என்பது இயற்கையான இடங்களைப் பார்வையிடுவதனை நோக்காகக் கொண்ட சுற்றுலாவாகும். இச்சுற்றுலாவில் வனங்கள், மலைகள், வனவிலங்குகள் போன்றவற்றைப் பார்வையிடுவர். இது மனதிற்குப் புத்துணர்வையும், மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தரும்.

சுற்றுலாவின் நன்மைகள்

பல்வேறு பகுதிகள் அதன் தட்பவெப்ப நிலை, கலாச்சாரம், அப்பகுதியில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள் என சுற்றுலாவில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

நாகரிகமும் பண்பாடும் நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், மொழிக்கு மொழி மாறுபடுகிறது. எனவே பல்வேறு மக்களை காண்பதும் நம் உணர்வை மட்டுமில்லாது உடலுக்கும் புத்துணர்ச்சி தரும்.

மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான வழியை சுற்றுலா உருவாக்குகிறது.

சுற்றுலா புதிய அனுபவத்தையும், மன அமைதியையும் தருவதுடன் நாட்டின் பொருளாதார உயர்வுக்கும் காரணமாக உள்ளது.

சுற்றுலா மூலம் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை நிச்சயமாக மேம்படுத்த முடியும். அதாவது சுற்றுலாத்துறை மூலம் பல வேலைவாய்ப்புக்கள் கிடைக்கப் பெறுகின்றன.

இத்தகைய சுற்றுலாத்துறையில் பல நன்மைகள் காணப்பட்டாலும், அதற்கு எதிர்மறையாக சில சிக்கல்களும் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அதாவது சுற்றுலாப் பயணிகள் மூலம் போக்குவரத்து நெரிசல்கள், சுற்றுச் சூழல் மாசடைவு போன்றன ஏற்படுகின்றது. அதுமட்டுமல்லாது சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் பொருட்களின் விலையும் உயர்கின்றது.

Read more: சுற்றுலா செல்வதால் ஏற்படும் நன்மைகள்

சுற்றுலா வளர்ச்சி பற்றிய கட்டுரை