அரசாங்கம் என்பது மக்களின் அமைப்பாகும். இந்த மக்களமைப்பான அரசாங்கமானது சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை எனும் முத்துறைகளைக் கொண்டு காணப்படுகின்றது. இவற்றின் மூலமே தனது செயற்பாடுகளை மேற்கொண்டு மக்களை நிர்வாகம் செய்கின்றனர்.
உலகில் ஒவ்வொரு நாடும் தமது ஆட்சி முறைக்கேற்ப பாராளுமன்றத்தில் ஓரவை அல்லது ஈரவையைக் கொண்டு காணப்படுகின்றது. அந்த வகையில் இந்திய நாட்டின் சட்டத்துறையானது நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம் என்று அழைக்கப்படுகின்றது.
இந்த நாடாளுமன்றமானது இரு சட்ட அவைகளைக் கொண்டுள்ளது. அவை மாநிலங்களவை (Rajya Sabha) மற்றும் மக்களவை (Lok Sabha) ஆகும்.
மக்களவையானது ஏப்ரல் 17ஆம் திகதி 1952ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதன் முதல் கூட்டம் மே 13இல் இடம்பெற்றது. 1954 மே மாதம் 14 ஆம் திகதி மக்களவை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு முன்பு ஹவுஸ் ஆப் பீப்பிள்ஸ் என்று இருந்தது.
Table of Contents
மக்களவை என்றால் என்ன
நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். இது லோக்சபா என்றும் அழைக்கப்படுகின்றது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சபை உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர்.
மக்களவை உறுப்பினர்கள்
மக்களவையில் மொத்தமாக தற்போது 545 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 530 பேர் நேரடியாக மாநிலங்களிலிருந்தும், மீதமுள்ள 20 பேர் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர்களாக 555 உறுப்பினர்கள் வரை இருக்கலாம். மக்களவை உறுப்பினர்களுக்கு 5 வருட பதவிக்காலம் உண்டு. ஐந்து வருட நிறைவு காலத்திற்கு முன்பு சூழ்நிலைக்கேற்ப மக்களவை கலைக்கப்படலாம்.
மேலும் மக்களவை உறுப்பினர்கள் ஒன்றுகூடி மக்களவையில் சபாநாயகரை தேர்ந்தெடுப்பார்கள்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுபவருக்கு 25 வயது நிரம்பியிருக்க வேண்டும். அத்துடன் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுப் பணியில் சம்பளம் பெறுபவராக இருக்கக் கூடாது. குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களும், பெற்ற கடனைத் திருப்பித் தர முடியாதவர்களும் போட்டியிட முடியாது.
மக்களவையின் முக்கியமான பணிகள்
சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் முக்கிய செயல்பாடு ஆகும். இந்த துறையில் மக்களவை முக்கிய பங்கு வகிக்கிறது.
அனைத்து வகையான மசோதாக்களும் மக்களவையில் தொடங்கலாம் மற்றும் ஒரு மசோதா ராஜ்யசபாவில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அதன் ஒப்புதலுக்கு மக்களவைக்கு வர வேண்டும்.
நிதி விவகாரங்களில், ராஜ்யசபாவை விட லோக்சபா ஒரு தனித்துவமான மேன்மையைக் கொண்டுள்ளது. ஏனெனில், பண மசோதாவை மக்களவையில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
பாராளுமன்றத்தின் கீழ்சபைக்கு அமைச்சர்கள் குழு கூட்டாக பொறுப்பாகும். எனவே, அரசாங்கம் அதன் புறக்கணிப்பு மற்றும் கமிஷன் செயல்களுக்கு மக்களவை பொறுப்பாகும்.
கேள்விகளை எழுப்புதல், ஒத்திவைப்பு தீர்மானங்கள் மற்றும் அழைப்பு-கவனிப்பு தீர்மானங்கள், பட்ஜெட் விவாதங்கள், கட்-மோஷன்கள் மற்றும் விவாதங்கள் போன்ற ஏதேனும் ஒரு முறைமை ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம், லோக்சபா அரசாங்கத்தின் தவறான செயல்களையும் திறமையின்மையையும் அம்பலப்படுத்தலாம். மற்றும் இதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்யாமல் எச்சரிக்கலாம்.
அரசியலமைப்பை திருத்தும் அதிகாரத்தை ராஜ்யசபாவுடன் மக்களவை பகிர்ந்து கொள்கிறது.
Read more: அரசியல் என்றால் என்ன