அரசியலமைப்பு என்றால் என்ன

arasiyal amaippu enral enna

அறிமுகம்

நவீன அரசுகள் எல்லாம் அரசியல் யாப்புக்குட்பட்ட அரசுகளாகவே உள்ளன. அரசினுடைய அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பிற்குட்பட்டே நடைபெறுகின்றன.

நவீன அரசியல் திட்டங்களின் தோற்றுவாயானது மக்கள் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பிய போதே ஏற்பட்டது எனலாம். ஐக்கிய அமெரிக்காவிலேயே முதன் முதலில் அரசியலமைப்பு என்ற கொள்கை தோன்றியது.

அரசியலமைப்பின்றி ஒரு நாட்டினை ஆட்சி செய்வது இயலாத காரியம். அரசியல் யாப்பின்படி ஏற்படாத அரசுகளை அங்கீகரிப்பதில் சர்வதேச சமூகம் தயக்கம் காட்டி வருகின்றது.

சட்டவியல் என்னும் சொல்லானது பல காலங்களில் பல பெயர்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆரம்பத்தில் சட்டம் என்பதற்கான சொல் “சட்டத்தத்துவவியல்” என்றும் “சட்டவியல்” என்றும் சில சமயங்களில் “சட்ட அறிவியல்” என்றும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

தற்போது சட்டவியல் என்பதற்கு மாற்றாக “சட்டத் தேற்றம்” என்றும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அரசியலமைப்பு என்றால் என்ன

ஜேம்ஸ் பிரைஸ் (James Bryce) எனும் அறிஞர் “சட்டத்தினால் சட்டத்தின் ஊடாக நிறுவப்பட்ட அரசியல் சமுதாயம் ஒன்றின் வடிவமே அரசியல் திட்டமாகும். அதாவது நிச்சயமான உரிமைகளுடனும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பாடுகளும் கூடிய நிலையான நிறுவனங்கள் சட்ட ரீதியாக நிறுவிக் கொண்ட அரசியல், சமூக அமைப்பே அரசியல் திட்டம் ஆகும்” என்கின்றார்.

பொதுவாக அரசியலமைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கால வரையறையில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் ஆவணம் எனலாம். ஒரு நாட்டில் நடைபெறுகின்ற நிர்வாகமானது எந்தெந்த அடிப்படைக் கொள்கைகளை அமைத்துள்ளது என்பதை சுட்டிக் காட்டும் அடிப்படை சட்டங்களே அரசியல் அமைப்பாகும்.

அரசியலமைப்பின் அவசியம்

ஒரு நாட்டில் ஜனநாயக ஆட்சியா இருந்தாலும், சர்வாதிகார ஆட்சியாக இருந்தாலும், கொடுங்கோல் ஆட்சியாக இருந்தாலும், அரசியலமைப்பு என்பது அவசியமானதாகும்.

ஏனெனில் ஒரு நாட்டின் அடிப்படைச் சட்டம் அரசாங்கத்தின் கடிவாளமாகும். தனிமனித உரிமையைப் பாதுகாப்பதற்கு அரசியலமைப்புச் சட்டம் இன்றியமையாததாகும்.

மேலும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், குழப்ப நிலையிலிருந்து மீட்கவும், இறைமை அதிகாரத்தை வரையறுக்கவும், நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததிகளின் விருப்பு, வெறுப்புக்களைக் கட்டுப்படுத்தவும் அரசியலமைப்பு இன்றியமையததாகும்.

அதிகார வரம்புமுறையைக் கோடிட்டுக் காட்டுவதற்கு அரசியலமைப்பின் தேவை அவசியமாகும்.

சமுகங்கள் ஒற்றுமையாக இணையும் போது அதில் இணைகின்ற சில தேசிய இனங்கள் சில வகையான அதிகாரங்களைத் தாம் வைத்துக்கொள்ள விரும்புவதற்கு அரசியலமைப்பு துணை புரிகின்றது.

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். இரவு பகல் பாராமல் இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கும் வேலையில் அம்பேத்கர் தன்னை அர்ப்பணித்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவின் நீதி முறையை செயற்படுத்துகின்ற ஓர் அமைப்பாக உள்ளது.

உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு உலகிலேயே மிக நீளமான அரசியல் அமைப்பு என்ற பெருமையைப் பெறுகின்றது. எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பாகும்.

நெகிழா தன்மையும், நெகிழ்ச்சித் தன்மையும் கொண்டது. கூட்டாட்சியும் ஒருமுக தன்மையும் கொண்டது. பொறுப்புள்ள அரசாங்கத்தை வடிவமைப்பது போன்ற பல சிறப்பம்சங்களை இந்திய அரசியலமைப்பு கொண்டுள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை. பல்வேறு விதமான கலாச்சாரம், மொழி, இனம், மதம் மற்றும் பல வேறுபாடுகளைக் கடந்து நிற்கும் பிரம்மாண்டமான அரசியலமைப்பாக இந்திய அரசியலமைப்பு அமைவது மேலும் சிறப்புக்குரியதாகும்.

Read more: இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள்

இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை