ஏற்றுமதி இறக்குமதி என்றால் என்ன

ஏற்றுமதி என்றால் என்ன

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சிறந்த வணிகத் தொழிலாகும். ஏற்றுமதி இறக்குமதி என்பது ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது.

பொதுவாக, இறக்குமதி செய்யும் பொருளின் அளவைவிட, ஏற்றுமதி செய்யும் பொருளின் அளவு அதிகமாக இருப்பதையே ஒவ்வொரு நாடும் விரும்பும்.

ஏனெனில். அப்போதுதான் வெளிநாட்டுப்பணம், ஒருநாட்டில் அதிகமாக வந்து குவியும். அதனால் அதன் பொருளாதாரமும் உயரும். எனினும் ஏற்றுமதி வணிகம் போலவே, இறக்குமதி வணிகமும் அதிக இலாபம் தரக்கூடிய வணிகமாகும்.

ஒவ்வொரு நாடும் ஏற்றுமதி இறக்குமதியை சார்ந்து உள்ளது. ஏனெனில், ஒரு நாடானது தனக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் உற்பத்தி செய்து கொள்ள முடியாது.

அனைத்து வளங்களும் நாட்டிற்கு இருக்கும் என்று கூற முடியாது. மேலும் உற்பத்தி செலவு அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில் அதனை ஈடு செய்துகொள்ள முடியாத நிலையில் பிற நாடுகளிடமிருந்து குறித்த பொருட்கள் வாங்கிக் கொள்கின்றன.

ஏற்றுமதி என்றால் என்ன

உள்நாட்டில் இருந்து சரக்குகளையும், சேவைகளையும் வெளிநாட்டுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை ஏற்றுமதி ஆகும்.

அதாவது ஒருநாட்டின் சரக்குகள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் (மூலப்பொருட்கள், இயந்திரங்களாகவும் இருக்கலாம்), சேவைகள் (கல்விச்சேவை, போக்குவரத்துச் சேவை, மருத்துவ சேவை) பிற நாடுகளுக்கு விற்பனை செய்வது ஏற்றுமதி என்கின்றோம்.

இறக்குமதி என்றால் என்ன

இறக்குமதி என்பது ஒருநாடு அல்லது உள்நாட்டு தனக்குத் தேவையான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்வதை அல்லது வாங்கிக் கொள்வதை இறக்குமதி என்கின்றனர்.

ஏற்றுமதியின் நன்மைகள்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி, அரசியல் வளர்ச்சி போன்றவற்றிற்கு முக்கிய குறியாக இருப்பது ஏற்றுமதியாகும்.

நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஒற்றுமையை வளர்ப்பதாகவும் கூட்டுறவை வளர்ப்பதாகவும் ஏற்றுமதிகள் உள்ளன.

வளரும் நாடுகள் வேறு நாடுகளிடமிருந்து மூல பொருட்கள், இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் மற்றும் தேவையான கருவிகளை பெற்றுக்கொள்ள முக்கிய காரணமாக ஏற்றுமதி உள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி பொருட்கள்

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியும் ஏற்றுமதி வர்த்தகமும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு பல மில்லியன் டாலர்கள் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பல பொருட்கள் இறக்குமதியும் செய்யப்படுகின்றன.

குறிப்பாக இந்தியாவானது அமெரிக்கா, சீனா, ரஷ்யா, சிங்கப்பூர், ஐக்கிய அமீரகம், வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளுடன் வர்த்தக தொடர்புகளையும், நட்புகளையும் பேணி வருகின்றது.

எண்ணெய் உள்ளிட்ட கனிம எரிபொருட்கள், வைரம், தங்கம், பெட்ரோல், ஆட்டோ மொபைல், ஜவுளி துணி, இரும்பு, பருத்தி, தானியம், மின் இயந்திர உபகரணங்கள், வாகனங்கள், மருந்துகள் உள்ளிட்ட பல பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது.

இதைப்போல் தானியங்கள், உணவு எண்ணெய்கள், இயந்திரங்கள், உரங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள், உணவு, எண்ணெய்கள், சர்க்கரை, காகிதம் மற்றும் காகிதக் கூழ், ரப்பர், இரும்பு மற்றும் தகரம் போன்றன இறக்குமதியாகின்றன.

இறக்குமதி வணிகத்தை நிர்வகிக்கும் அமைப்புகள் வணிக மற்றும் தொழிற்சாலை அமைச்சகம், அயல் நாட்டு வணிக பொது இயக்குநரகம், மத்திய சுங்கவரி துறை போன்றவையாகும்.

Read more: வியாபாரம் என்றால் என்ன

அதிக மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள்