பிரபஞ்சம் படைக்கப்பட்டு உலகில் மனத வர்க்கம் தோற்றம் பெற்றது முதல் இன்று வரை மனித சமூகம் மற்றும் அரசியல் தலையீடு ஊடாகச் செயற்படும் மிகப் பிரதானமான அம்சமாகப் பொருளாதாரம் விளங்குகின்றது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் அதன் புவியியல், வரலாறு, சட்டங்கள், கலாச்சாரம் மற்றும் பிற காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றது. உற்பத்தி, நுகர்வு ஆகிய இரு சக்கரங்களின் அடிப்படையில்தான் உலகமே சுழன்றது.
பொருளாதார கண்ணோட்டத்தை பொறுத்தவரையில் இந்த உலகத்தில் இலவச உணவு என்று எதுவுமில்லை. எல்லா உணவுமே கடினமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு, விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்கப்பட்டு, வழங்கப்பட்டு அதன் பின்னரே அது மக்களுக்கு பலவிதங்களில் விநியோகிக்கப்படுகின்றது.
பொருளாதாரத்தின் அவசியம் இந்த உலகத்தின் வளங்கள் குறைவாகவும், மனிதனின் தேவைகள் மிக அதிகமாகவும் இருப்பதனாலேயே உணரப்படுகின்றது. இதனடிப்படையில் பொருளாதாரத்தின் அடிப்படை தத்துவமே செல்வத்தை திரட்டுதல் என்பதாகும்.
அதாவது தடைகளை தாண்டி ஒரு நாட்டின் வருவாயை உயர்த்துதல் என்பதாகும். ஒரு மனிதனின் செலவுதான் இன்னொரு மனிதனின் வரவு. இதனை ஆங்கிலத்தில் One man expenditure another man income என்பர்.
ஒரு நாட்டின் செலவுதான் இன்னொரு நாட்டின் வரவு. இப்படியாக பெரும்பாலும் சுயநலம் சார்ந்த விடயங்களைப் பற்றி பொருளாதாரம் பேசுவதினாலேயே இத்துறையை அறிஞர்கள் இருண்ட அறிவியல் என்கின்றனர்.
ஆனால் உண்மையில் பொருளியல் என்பது ஒருபுறம் செல்வத்தைப் பற்றியும் மறுபுறம் மனிதனைப் பற்றியும் ஆராய்கிறது. அந்தவகையில் பொருளியலும் கூட ஒருவித சமூக அறிவியல் தான். அது சமுதாயத்தில் ஒருவர் மற்றொருவர் மீது செலுத்தும் அதிகாரத்தை பற்றி படிக்கிறது.
பொருளாதாரத்தை சரியான விதத்தில் கையாண்டு செல்வம் சேர்த்ததாலேயே சில நாடுகளை வல்லரசு நாடுகள் என்கின்றோம். அதாவது வளரும் நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள், வறுமையில் வாடும் நாடுகள் என நாடுகளை கூட அதன் பொருளாதார கட்டமைப்பை கொண்டே வேறுபடுத்திக் காட்டப்படுகின்றது.
Table of Contents
பொருளாதாரம் என்றால் என்ன
ஆரம்பத்தில் அரசியல் பொருளாதாரம் என்று அழைக்கப்பட்ட இந்த இயலானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொருளியல் என்று ஆல்பிரட் மார்ஷல் அவர்களால் மாற்றம் செய்யப்பட்டது.
பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பயன்பாட்டை பற்றியது பொருளாதாரம் எனப்படும்.
அதாவது ஒரு நாட்டின் அல்லது பல்வேறுபட்ட உலக நாடுகளில் நடைபெறும் உற்பத்தி முறைகள், விநியோகங்கள், கொடுக்கல் வாங்கல்கள், நுகர்வு மற்றும் சேமிப்பு போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் கொண்டு செயற்படும் செயற்பாடே பொருளாதாரம் எனப்படும்.
பொருளியல் என்ற சொல்லானது ஆய்க்கனோமிக்ஸ் எனும் பழமையான கிரேக்க சொல்லில் இருந்து வந்ததாகும். ஆய்க்கோஸ் என்றால் இல்லங்கள் மற்றும் நேமோஸ் என்றால் நிர்வாகம், வழக்கம் அல்லது விதி என்று பொருளாகும். எனவே பொருளியல் என்றால் “இல்லங்களில் நிர்வாகம்” என்று பொருள்படும்.
தன்னிறைவுப் பொருளாதாரம்
பொருளாதாரமானது பிரதானமாக தன்னிறைவுப் பொருளாதாரம், முறையற்ற பொருளாதாரம் என இரண்டு வகையாகப்படுகின்றது. சகலருக்கும் சிறப்பான பொருளாதார முறையே தன்னிறைவுப் பொருளாதாரமாகும்.
தற்காலத்தில் தன்னிறைவுப் பொருளாதார முறையை முழுமையாகக் காணமுடிவதில்லை.
ஒரு நாடு தன்னிறைவுப் பொருளாதாரத்தைக் கொண்டிருப்பின் அதனால் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். கடன் தொல்லைகள் மற்றும் நிதிப் பற்றாக்குறை ஏற்படமாட்டாது. ஏற்றுமதி இறக்குமதிப் பிரச்சினைகள் ஏற்படாது. தமக்குத் தேவையானவற்றைத் தாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
பொருளாதாரத்தின் தந்தை யார்?
பதில்: ஆடம் ஸ்மித்
Read more: வியாபாரம் என்றால் என்ன