ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை

Pancha Boothangal Essay In Tamil

பஞ்சபூதங்கள் அல்லது ஐம்பூதங்கள் என்று அழைக்கப்படும் ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

இந்த ஐம்பூதங்கள் ஒவ்வொரு உயிர்களோடும் பின்னிப்பிணைந்தே இருக்கின்றது. இவற்றை எவராலும் கட்டுப்படுத்த முடியாது.

  • ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை
  • Pancha Boothangal Essay In Tamil
  • Pancha Boothangal Katturai In Tamil

ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஐம்பூதங்களின் முக்கியத்துவம்
  3. மனிதவாழ்க்கையும் ஐம்பூதங்களும்
  4. நாகரகீ வளர்ச்சியும் ஐம்பூதங்களும்
  5. முடிவுரை

முன்னுரை

“வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்” என்கிறார் வள்ளுவர்.

அதாவது இந்த உலகத்தின் எல்லாபடைப்புக்களும் ஜம்பூதங்களை அடிப்படையாக கொண்டது. இதனை அறியாது மனிதன் வஞ்ச மனம் கொண்டு வாழுகையில் ஜம்பூதங்களும் சிரித்துகொள்ளும் என்பது கருத்து.

நாம் வாழுகின்ற இப்பூமியானது ஜம்பூதங்களான நிலம் நீர், காற்று, ஆகாயம், தீ என்பவற்றால் தான் உருவானது என்று மதங்கள் கூறும். அதனை விஞ்ஞானமும் ஏற்று கொண்டுள்ளது இவற்றில் ஒன்று இல்லாவிட்டாலும் இப்பூமி நிலைபெறாது. மனித வாழ்க்கையும் சாத்தியப்படாது.

எமது முன்னோர்கள் இயற்கையையும் ஜம்பூதங்களையும் இறைவனாக கொண்டு வழிபட்டனர் இன்றைக்கும் இந்து மதம் ஜம்பூதங்களை தெய்வங்களாக வழிபடுகிறது. உலகத்தில் உள்ள அத்தனை இயக்கத்திற்கும் இவையே அடிப்படையாகும்.

இக்கட்டுரையில் ஐம்பூதங்களின் முக்கியத்துவம், மனிதவாழ்க்கையும் ஐம்பூதங்களும், நாகரகீ வளர்ச்சியும் அவற்றின் நிலையும் போன்ற விடயங்கள் இங்கே நோக்கப்படுகின்றன.

ஐம்பூதங்களின் முக்கியத்துவம்

எமது மனித வாழ்க்கையை எடுத்து கொண்டால் தினம் தினம் நம் வாழ்க்கை ஜம்பூதங்களோடு பின்னிபிணைந்ததாக உள்ளது.

காற்று இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாது. நாம் சுவாசிக்க ஆக்சிஜன்வேண்டும்.

சூரிய கதிர்வீச்சை தடுக்கவும் பூமியின் தட்பவெட்பத்தை சமப்படுத்தவும் மழையை பொழிவிக்கவும் ஆகாயம் (வளிமண்டலம்) அவசியமாகும்.

அது போல நாம் குடிக்கவும் பயன்படுத்தவும் விவசாயம் செய்யவும் இவ்வுலகில் பயிர்கள் முளைக்கவும் நீர் வேண்டும்.

இதனை வள்ளுவர் “விசும்பின் துளி விழின் அல்லால் பசும்புற்றலை காண்பதரிது” என்கிறார்.

நீரின்றி அமையாது உலகு. ஆகவே இவ்வுலகம் நீர் இல்லாமல் அமையாது கடல்களும் ஆறுகளும் குளங்களும் இப்பூமியை குளிர்வித்து மனிதனையும் பிற உயிர்களையும் வாழ்விக்கின்றன.

அடுத்தது நிலம் இதனை இந்துக்கள் பூமாதேவி என்றும் தாய் என்றும் சிறப்பிப்பார்கள். எம்மை தாங்கி உண்ண உணவு தந்து நாம் வாழ இடம் தருவது நிலமாகும்.

“அகழ்வாரையும் தாங்கும் நிலம்” இதனால் நிலம் இன்றியமையாதது. இதுவே பயிர்கள் வளரவும் உயிர்கள் தோன்றவும் வாழ்விடமாய் அமைகிறது.

மனிதர்கள் மமதை கொண்டு தம்மை பெரிதாக நினைக்கும் போதெல்லாம் பரந்து விரிந்த ஆகாயத்தை பார்க்க வேண்டும். நாமெல்லாம் ஒன்றுமேயில்லை என்ற எண்ணம் எமக்குள் தோன்றும்.

அழகான சந்திரன் சக்தி முதலான சூரியன், உடுத்தொகுதிகள், உபகோள்கள், பால்வெளிகளை உள்ளடக்கிய ஆகாயம் ஆகச்சிறந்த பிரமிப்பை உண்டு பண்ணுகிறது.

அடுத்து தீ இதனை கண்டு பிடித்த பின்பு தான் மனிதனானான் உணவை சமைத்து உண்டான். வேண்டாதவற்றை எரித்து சாம்பலாக்க நெருப்பு முக்கியமானதாக உள்ளது.

மனித உடலில் இவ் ஜம்பூதங்களுடைய பிரதிபலிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆக எம் வாழ்வோடு இரண்டற கலந்தவை ஜம்பூதங்கள் ஆகும்.

மனித வாழ்க்கையும் ஐம்பூதங்களும்

ஆதி மனிதர்கள் தமது வாழ்க்கைக்கு நன்மை புரியும் இயற்கையையும் பஞ்சபூதங்களையும் அரவணைத்து வாழ்ந்தார்கள்.

இன்றைய மனிதன் பஞ்சபூதங்களோடு முட்டி மோதி தனது விஞ்ஞான வளர்ச்சியினால் இயற்கையை மாற்றியமைக்க முனைகிறான்.

பொதுவாக இயற்கையின் கோலம் சீராக இருந்தால் தான் மனித வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மழை பொழிய வேண்டும் காற்றுக்கள் வீச வேண்டும் அப்போது தான் இங்கே மனித வாழ்க்கை சாத்தியமாகும்.

இவற்றில் சிறு மாறுதல் ஏற்பட்டால் கூட எமது வாழ்க்கை சவாலானதாக மாறிவிடும். பூமியில் நிலநடுக்கம், இடிமின்னல், புயல், வெள்ளம், வரட்சி, காட்டுத்தீ, சுனாமி, எரிமலை போன்ற இயற்கையின் சீற்றம் இடம்பெறும் போது மனிதன் இயற்கையின் முன் பணிந்து தான் ஆக வேண்டும்.

இயற்கையை அழித்து பஞ்சபூதங்களின் உதவியின்றிய மனித அறிவியல் வீணாகும்.

நாகரீக வளர்ச்சியும் ஐம்பூதங்களும்

இன்று மனிதன் தனது தொழில்நுட்ப வளர்ச்சியால் இயற்கையை பல மடங்கு மாசடைய செய்து வருகிறான். செயற்கையாக மழையை பெய்விக்க முயல்கிறான்.

உதாரணம் இஸ்ரேல் கடல்நீரை நன்னீராக்குகின்றது. சவுதி அரேபியா கடலில் பயிர் செய்கின்றார்கள். ஜப்பான் நெகிழும் தொடர்மாடிகளை உருவாக்கின்றார்கள்.

இவ்வாறு அறிவியல் பல்வேறு வளர்ந்தாலும் கூட இயற்கையை கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதனுக்கில்லை. இதனை உணராது மனிதன் பஞ்சபூதங்களையும் மாசுபடுத்துகிறான்.

இயற்கையை பாதுகாத்து பிற உயிர்களையும் வாழுமாறு தான் இயற்கையை எமது மூதாதையர் எமக்கு தந்தனர் ஆனால் மனிதன் காடுகளை அழிக்கிறான். நதிகளை வரள செய்கிறான்.

காற்றில் பச்சைவீட்டு வாயுக்களை கலந்து காற்றை மாசுபடுத்துகிறான். கடலிலும் குப்பைகளை கொட்டி மாசுபடுத்துகிறான். நீர்நிலைகளில் குப்பைகளையும் இரசாயனத்தையும் கலந்து மாசடைய செய்கிறான்.

இவ்வாறு மனிதன் பஞ்சபூதங்களான இயற்கை வளங்களை அழிவடைய செய்துகொண்டிருக்கிறான்.

முடிவுரை

உண்மையில் நாம் வாழ்கின்ற உலகம் எவ்வளவு அழகானது. இங்கு படைக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றும் எவ்வளவு அபூர்வமானது. இவ் வியப்பான இயற்கையை நாம் மாற்ற நினைத்தால் அது எமக்கெதிராகவே திரும்பும்.

ஆகவே இயற்கை மீது பேரன்பு கொள்வோம். இவ்வதிசயங்களை பாதுகாப்போம் அவற்றோடு இணைந்து வாழ்கின்ற வாழ்க்கை அமைதியானதாக இருப்பதோடு அடுத்த தலைமுறைக்கும் பயனுடையதாய் அமையும்.

இயற்கையை அழித்து இலாபம் ஈட்டுகின்ற வழக்கம் நீடிக்குமானால் இவ்வுலகமே நரகமாக மாறிவிடும்.

You May Also Like :

விருந்தோம்பல் பற்றிய கட்டுரை

சுத்தம் சுகாதாரம் பற்றிய கட்டுரை