பேரிடர் மேலாண்மை கட்டுரை

Peridar Melanmai Katturai In Tamil

இந்த பதிவில் “பேரிடர் மேலாண்மை கட்டுரை” பதிவை காணலாம்.

உலகில் நாளாக நாளாக பேரிடர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதற்கு மனிதனது இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளே பிரதான காரணமாக இருக்கின்றன.

இந்த அனர்த்தங்களை எதிர்கொள்ள சிறப்பான பேரிடர் மேலாண்மையை செய்வதன் மூலம் இவற்றில் இருந்து இயன்றளவு நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

  • பேரிடர் மேலாண்மை கட்டுரை
  • Peridar Melanmai Katturai In Tamil
இயற்கை பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரை

பேரிடர் மேலாண்மை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இயற்கையும் பேரிடர்களும்
  3. பேரிடர்களும் பேரழிவுகளும்
  4. பேரிடர் முகாமைத்துவ படிமுறைகள்
  5. வளர்ந்த நாடுகளும் பேரிடர் மேலாண்மையும்
  6. முடிவுரை

முன்னுரை

இயற்கையானது தன்னை சார்ந்துள்ள ஜீவராசிகள் மீதும் பேரன்பு கொண்டு அவற்றை நேசிக்கிறது.

இருப்பினும் அதனுடைய கோரமான பக்கம் அதி பயங்கர விளைவுகளை ஏற்படுத்த வல்லது. இவ்வாறு இயற்கையினுடைய சீற்றங்களால் உருவாக்கம் பெறுகின்றவையே பேரிடர்கள் என்று சொல்லப்படுகின்றன.

பேரிடர்கள் மனிதனுடைய இயல்பு வாழ்க்கையினை குழப்பமடைய செய்வதுடன் உயிரழப்புக்களையும் பொருளாதார இழப்புக்களையும் ஏற்படுத்துகின்றன.

இந்த பேரிடர்கள் காலம் காலமாக இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றுடன் முட்டிமோதியே மனித குலமும் போராடி வருகின்றது.

இக்கட்டுரையில் பேரிடர்கள் எவை அவற்றின் பாதிப்புக்கள் என்ன? அவற்றை எவ்வாறு முகாமை செய்ய முடிம் போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

இயற்கையும் பேரிடர்களும்

இந்த பூமியும் அதனை உருவாக்குகின்ற ஐம்பூதங்களும் அபூர்வமானவை.

ஆரம்பகாலங்களில் மனிதன் இயற்கையை இறைவனாக பார்த்தான் இயற்கை சீற்றமடையும் போதெல்லாம் இயற்கை மனிதன் மீது கோபம் கொள்வதாக எண்ணினான்.

பூமியில் இடம்பெறும் வளிமண்டலம் செயல்முறைகள் புவியின் அகவிசை தொழிற்பாடுகள் இவை தான் புவியை இயக்கி கொண்டிருக்கின்றன.

இவற்றில் ஏற்படும் சடுதியான மாற்றங்கள் புவியில் பேரிடர்களாக உணரப்படுகின்றன.

இயற்கையில் இடம்பெறும் பேரிடர்களாக “சுனாமி, நிலநடுக்கம், சூறாவளி, வெள்ளம், எரிமலை, காட்டுத்தீ” போன்ற பேரிடர்கள் அதிகளவில் உணரப்படுகின்றன.

சில அழிந்து சில தோன்ற இவை காரணமாகின்றன. இதுவே இயற்கையின் சமநிலையுமாகும்.

பேரிடர்களும் பேரழிவுகளும்

பேரிடர்கள் பேரழிவுகளை உண்டுபண்ணுகின்றன. இவை எண்ணிலடங்காத இழப்புக்களை பூமியில் தோற்றுவிக்கின்றன. பேரிடர்கள் பல லட்சக்கணக்கில் மக்களை பலி கொள்கின்றன.

இவை மனிதனது வாழ்விடங்களை நிர்மூலமாக்குவதுடன் விவசாய நடவடிக்கைகள், மீன்பிடி ஆகிய உணவு உற்பத்தி தொழில்களையும் பாதிக்கின்றன.

இதனால் மனிதன் பெரும் உணவு பஞ்சத்தை எதிர் கொள்ள நேர்கின்றது. 2004 இல் ஏற்பட்ட சுனாமி பல லட்சம் மக்களை காவுகொண்டது.

மற்றும் அண்மையில் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் பல லட்சம் மக்களை காவுகொண்டுள்ளது.

இவ்வாறான பேரிடர்கள் பாரியளவான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான இடர்களால் சிறப்பான இடர் மேலாண்மை கொண்ட நாடுகள் கூட பேரழிவுகளை சந்திக்கின்றன.

பேரிடர் முகாமைத்துவ படிமுறைகள்

பேரிடர் முகாமைத்துவம் என்பது அனர்த்தங்களினால் உருவாகும் பாதிப்புக்களை குறைக்க உதவுகின்றன.

அனர்தங்களை முன்கூட்டியே எதிர்வுகூறல் தயார்நிலையில் இருத்தல், பாதிப்புக்களில் இருந்து மீண்டுவருதல் போன்றவற்றை உள்ளடக்கியதாக இது காணப்படுகின்றன.

பேரிடர் முகாமைத்துவத்தின் படிமுறை “Preparedness, Prevention, Recovery, Response” போன்ற நடைமுறைகளை பின்பற்றுவதனால் பேரிடர்களில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

வளர்ந்த நாடுகளும் பேரிடர் மேலாண்மையும்

வளர்ந்த நாடுகள் தமது நாட்டினை அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்க சிறப்பான முயற்சிகளை எடுக்கின்றன.

புவியியல் காலநிலை தொழல்நுட்பம் என்பன இந்த நாடுகளில் சிறப்பாக வளர்ச்சி அடைந்திருப்பதனால் இந்நாடுகள் செய்மதி தொழில்நுட்பங்கள் மற்றும் உணர்கருவிகள் வாயிலாக அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துல்லியமாக மேற்கொள்கின்றன.

உதாரணமாக உலகில் அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் ஜப்பான் நிலநடுக்கங்களை தாங்கும் வகையில் சிறந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி கட்டடங்களை அமைக்கின்றது.

மற்றும் நெதர்லாந்து, நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் சிறப்பான அனர்த்த மேலாண்மையினை மேற்கொள்கின்றன.

முடிவுரை

உலகத்தில் நாளாக நாளாக பேரிடர்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த பூமியில் பிழைத்திருத்தல் என்பது சவாலான காரியமாக உள்ளது.

காலநிலைமாற்றம், பூகோள வெப்பமயமாதல் என்பன அனர்த்தங்களை அதிகமாக்கி வருகின்றது.

அனர்த்தங்கள் தவிர்க்க முடியாதுள்ளதால் “வெள்ளம் வர முன்னர் அணைகட்ட வேண்டும்” என்பது போல அனர்த்தங்கள் ஏற்பட முன்னரே அவற்றை தடுக்கவும் மீண்டு வரவும் பேரிடர் மேலாண்மையில் அனைவரும் சிறப்பாக செயல்படுவதன் மூலமாக பாதிப்புக்களை குறைக்க முடியும்.

You May Also Like :

பருவநிலை மாற்றம் கட்டுரை

உலக வெப்பமயமாதல் கட்டுரை