பெண்களின் சிறப்பு கட்டுரை

Pengalin Sirappu In Tamil Katturai

பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட போற்றுதலுக்குரிய “பெண்களின் சிறப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

இன்றைய சமூகச் சீர்கேடுகளைக் களைய வேண்டும் எனில், பெண்களை மதிக்கின்றவர்களாக ஆண் பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

பெண்களின் சிறப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பெண்களின் பெருமை
  3. சங்ககாலத்தில் பெண்களின் நிலை
  4. பாரதியும் பெண்ணியமும்
  5. சாதனைப் பெண்கள்
  6. முடிவுரை

முன்னுரை

பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள். பெண்கள் இந்நாட்டின் கண்கள். பெண்ணைத் தலையாய்க் கொண்டது நம் பண்பாடும், வழிபாடும்.

நம் பண்பாட்டில் பெண்கள் போற்றுதலுக்கு உரியவர்களாக பார்க்கப்படுகின்றார்கள். பெண்களின் வளர்ச்சியும் பாதுகாப்பும் இல்லாமல் ஒரு நாடு வளர்ச்சி அடையாது.

ஆண்களை விட அதிகமான மனவலிமை உடையவர்கள் பெண்கள். ஒவ்வொருவரும் பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.

பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட பெண்களின் சிறப்பு பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

பெண்களின் பெருமை

சமுதாயம் முன்னேற ஆணவரைக் காட்டிலும் பெண்களின் பங்கு மகத்தானது. சமுதாயத்தில் பெண்களுக்கு என்றுமே சிறப்பிடமுண்டு. உயிரின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், வாழ்விற்கும் பெண்ணே முதன்மையானவள்.

பிரசவ நேரத்தில் பல பெண்கள் உயிரையே இழக்கிறார்கள். பெண் உயிரையே பணயம் வைத்து கடும் வலியை தாங்கி ஒரு உயிரை பிரசவிக்கிறாள்.

சங்ககாலத்தில் பெண்களின் நிலை

முற்காலத்தில் தமிழ் மக்கள் தம் வாழ்வில் மகளிருக்குத் தனியிடம் அளித்துள்ளனர் என்பதை சங்க நூல்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது.

ஒளவையார், காக்கை பாடினியார் போன்ற பெண்பாற் புலவர்கள் பெருமை பெற வாழ்ந்த வரலாறு உண்டு. சங்க கால மகளிர் வாழ்க்கையை நினைத்தால் பொற்காலமோ என வியக்க வைக்கின்றது.

வரலாற்றுச் சான்றுகளின்படி அன்புடை நெஞ்சம், கற்பு, மன உறுதி, பொறுமை, தூய்மை, வாய்மை, மனத்திறன், விருந்தோம்பல், பெரியார் மதிப்பு, உபசரிப்பு போன்ற பண்புடையவர்களாக பெண்கள் சிறப்பிக்கப்படுகின்றனர்.

பாரதியும் பெண்ணியமும்

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் உலகம் அறிவில் ஓங்கித் தழைக்கும்” என்றும் பாரதத்தில் புதுமைப் பெண்கள் தோன்ற வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் பாரதி.

“பெண்கள் அடிமைகளாக வாழ்வதற்கு சமூகம் வகுத்துள்ள நெறிமுறைகளே காரணமாக உள்ளன”. என்று கூறியதோடு “ஆணுக்கு பெண் சமம்” என்றார் பாரதி. நம் தேசத்தில் வாழ்ந்த புராதனப் பெண்களின் வரலாற்றை, பெருமைகளை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்கிறார்.

சாதனைப் பெண்கள்

இன்று பெண்கள் சாதனை படைக்காத துறை என்று எதுவுமில்லை எனும் கூறும் அளவிற்கு எல்லாத் துறைகளிலும் சாதனைகள் படைத்துள்ளனர்.

சானியா மிர்சா இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஆவார். இவர் டென்னிஸ் தர வரிசையில் இடம் பிடித்த இந்தியப் பெண்களில் மிக உயர்ந்த தரவரிசையை அடைந்தவர். இந்திய அரசாங்கம் அவருக்குப் பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. இவர் இன்றைய இளம் பெண்களுக்கு முன்மாதிரி பெண் எனலாம்.

சுனிதா வில்லியம்ஸ் அவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை ஆவார். இவர் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தார். அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சுனிதா, 188 நாட்கள் தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்தார்.

இவ்வாறு பல பெண்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர்.

முடிவுரை

இன்றைய சமூகச் சீர்கேடுகளைக் களைய வேண்டும் எனில், பெண்களை மதிக்கின்றவர்களாக ஆண் பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

புதிய உயிரை உலகிற்குக் கொண்டுவருவதற்கு உயிரையும் பனையம் வைக்கின்றாள் பெண். இத்தகைய பெண்மையை என்றென்றும் போற்ற வேண்டும்.

பெண்களே நம் நாட்டின் கண்கள். பெண்மை போற்றுவோம், பெண்ணுரிமையைப் போணிக்காப்போம்.

You May Also Like :
இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு
பெண்ணின் பெருமை தமிழ் கட்டுரை