பெண்ணின் பெருமை தமிழ் கட்டுரை

Pennin Perumai Katturai In Tamil

இந்த பதிவில் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட “பெண்ணின் பெருமை தமிழ் கட்டுரை” பதிவை காணலாம்.

இந்த உலகத்தில் ஒவ்வொரு படைப்புக்கு பின்னாலும் ஒரு தாய் எனும் இடத்தில் ஒரு பெண் இருப்பாள்.

பெண்ணின் பெருமை தமிழ் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பெண் எனும் உன்னதம்
  3. தாய்மையின் வடிவம்
  4. அன்பின் இலக்கணம்
  5. தன்னம்பிக்கையின் வடிவம்
  6. முடிவுரை

முன்னுரை

“மாதராய் பிறந்திட நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்” என்கிறார் ஒளவையார். அந்தவகையில் ஒரு பெண்ணானவள் அளவு கடந்து நேசிக்கப்பட வேண்டியவள் போற்றுதலுக்குரிய பெருமைக்குரியவள்

இந்த மனித சமுதாயம் இயங்கி கொண்டிருப்பதற்கு மிகவும் முக்கியமான காரணமாக இருப்பவள் என்று எண்ணிலடங்காத பல சிறப்புக்களை கொண்டு காணப்படுகின்றாள். எனவே இக்கட்டுரையின் மூலமாக பெண்களுடைய பெருமைகள் பற்றி நோக்குவோம்.

பெண் எனும் உன்னதம்

இறைவனின் படைப்பில் இங்கே ஆண் மற்றும் பெண் என்ற இரு பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் பெண்ணுக்கென பல உன்னதமான சிறப்பியல்புகள் காணப்படுகின்றது.

இந்த உலகத்தில் ஒவ்வொரு படைப்புக்கு பின்னாலும் ஒரு தாய் எனும் இடத்தில் ஒரு பெண் இருப்பாள். இரக்கமும் அன்பும் ஒருங்கே வாய்க்க பெற்ற ஒரு தெய்வீக வடிவமாக பெண்ணை இங்கே இறைவன் படைத்திருக்கின்றான்.

இதனால் தான் பெண் இல்லா ஊரில் பிறந்தவர்கள் அன்பில்லாதவர்கள் எனும் கருத்தானது நிலவுகின்றது.

தாய்மையின் வடிவம்

இந்த உலகத்தில் வந்து பிறக்கின்ற ஒவ்வொரு மனித உயிர்களும் பெண் என்ற தியாகத்தினால் தான் உருவாகின்றது. இல்லாவிட்டால் இந்த உலகில் உயிர்களே இருக்காது.

மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் பறவைகள் என்று அனைத்து ஜீவராசிகளுக்கும் பெண் என்கின்ற அந்த வடிவம் தாயாக அனைவரையும் இங்கே பிரசவித்து வாழும் வரை காத்து நிற்கின்றது.

இந்த உலகத்தில் தாய் இன்றியமையாத ஒரு இடத்தை ஒவ்வொரு உயிர்களின் வாழ்விலும் கொண்டிருக்கின்றாள் என்றால் அது மறுப்பதற்கில்லை.

அன்பின் இலக்கணம்

பெண்கள் என்றாலே அன்பு நிறைந்தவர்கள் தங்கள் அன்பினால் தம்மோடு வாழ்கின்றவர்களை அரவணைத்து வாழ்வின் இன்னல்களை களைந்து அனைவரையும் நல்வழியில் இட்டு செல்கின்றனர்.

தாயாகவும் சகோதரிகளாகவும் உடனிருந்து வாழ்வின் பிரச்சனைகள் அனைத்தையும் கடக்க உறுதுணையாக இருப்பார்கள் இயல்பாகவே எதையும் பொறுத்து கொள்ளும் குணம் உயைவர்கள் என்பதனால் மிகச்சிறந்த தியாக எண்ணம் உடையவர்களாக அனைவராலும் வியந்து பார்க்கப்படுகின்றனர்.

தன்னம்பிக்கையின் வடிவம்

பெண்களை இறைவன் உடலளவில் மென்மையாக படைத்திருந்தாலும் மனதளவில் பெண்கள் மிகவும் வலிமையானவர்கள். எத்தனை துன்பங்களையும் சகித்து கொண்டு தன்னம்பிக்கையோடு போராட கூடியவர்கள்.

தனது துன்பங்களை பொருட்படுத்தாது நாள் முழுவதும் தன் குடும்பத்துக்காக உழைக்கின்ற பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள் கணவனை இழந்தாலும் பிரிந்தாலும் தன் குழந்தைகளை இறுதி வரை போராடி காப்பாற்றும் வலிமை உடைய பெண்கள் பலரை இந்த சமூகத்தில் காண கூடியதாக உள்ளது.

முடிவுரை

இங்கே இந்த சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் பெண்களை போற்றி வாழ்ந்த ஒரு சமூகத்தின் வழி வந்தவர்கள் ஆகவே பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்த வேண்டியது ஆண்களுடைய கடமையாகும்.

பாரதி கண்ட கனவு போல இந்த சமூகமானது நல்ல நிலையை அடைந்து கொள்ள வேண்டுமானால் பெண்கள் மேன்மை அடைகின்ற ஒரு சமுதாயம் இங்கே உருவாக வேண்டும்.

You May Also Like :
பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை
இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு