Tamil Motivational Quotes – Tamil Quotes

Tamil Quotes

Here are the Latest Collections of “Tamil Motivational Quotes”.

  • Tamil Motivational Quotes
  • Tamil Quotes

வாழ்வில் சறுக்கல்கள் இருக்கும் போது உடைந்து போக கூடாது. தோல்விகளை சந்திக்காமல் உயர்ந்தவர்கள் எவருமில்லை.

இந்த பதிவில் வாழ்வில் உயர்ந்தவர்களால் கூறப்பட்ட உத்வேகம் கொடுக்கும் வரிகளை நோக்கலாம்.

Tamil Motivational Quotes – Tamil Quotes

#1. தனியாக போராடுகின்றேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே.. நீ தனியாக போராடுவதே வெற்றி தான்.!

#2. வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.!

#3. சுமைகளை கண்டு துவண்டு விடாதே.. இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்..!

#4. ஒரு நொடி துணிந்தால் வாழ்க்கையை முடித்து விடலாம்.. ஆனால் ஒவ்வொரு நொடியும் துணிந்தால் அதே வாழ்க்கையை ஜெயித்து விடலாம்.

#5. மெதுவாக சென்றாலும் முன்னேறி செல்பவனுக்கு வெற்றி நிச்சயம்.

#6. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.. தோல்வி கூட ஒருநாள் உங்களிடம் தோற்று விடும்.!

#7. நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை.!

#8. நீ வெற்றி அடைவதை உன்னை தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது.!

#9. செய்து முடிக்கும் வரை எந்த செயலும் சாத்தியம் அற்றது தான்.

#10. தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு.. இல்லையேல் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.

#11. ஓடுவதாக இருந்தாலும் துரத்திக் கொண்டே ஓடுங்கள்.. நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்.!

#12. தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அதுதான் உண்மையான தோல்வி.!

#13. இலக்குகளை குறி வை.. இல்லையெனில் கேள்விக்குறி ஆகிவிடும் வாழ்க்கை..!

#14. “நம் வாழ்க்கை அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே தவிர… திருத்தி பார்க்கும் அளவிற்கு இருத்தல் கூடாது..!

#15. நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அது தான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள்.. அது வாழ்க்கையில் ஒரு வளைவான இடம் அவ்வளவு தான்..!

#16. குறை கூறவே சிலர் காத்துக்கொண்டிருக்கும் உலகம் இது உன்னைப் பற்றி குறை கூற அவர்கள் உத்தமர்களும் இல்லை.. அவர்கள் கூறியதை எண்ணி கவலைப்பட நீ கோழையும் இல்லை..!

#17. உனக்கு மேலே உள்ளவனை பார்த்து ஏங்காதே.. தாழ்வு மனப்பாங்கு வரும்..! உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே.. தலைக்கனம் வரும்..! உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு.. தன்னம்பிக்கை வரும்..!

#18. உலகில் மிக எளிமையானது பிறரிடம் குறை காண்பது.. உலகிலேயே மிகக் கடினமானது தன் குறையை தானே உணர்வது..!

#19. எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில்.. இப்படித்தான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்..!

#20. எதுவரைக்கும் தோற்றுக்கொண்டே இருப்பாய்.. தோல்வியும் ஒருநாள் தீர்ந்து விடும்.. மீதி இருப்பது வெற்றி தான் தொடர்ந்து முயற்சி செய் நம்பிக்கையுடன்.. வெற்றி நிச்சயம்..!

#21. மிகவும் கடுமையான உடல் வேதனைகூட அதை அமைதியுடன் எதிர்கொள்ளும் போது கடுமை குறைந்து தாங்க கூடியதாக ஆகிவிடுகிறது.

#22. வாழ்க்கை என்னும் மரத்திற்கு தன்னம்பிக்கையே வேர். நன்னடத்தையே அதன் கனிகள்.

#23. ஒரு நோயாளியின் நம்பிக்கை ஒன்றுதான் அவனை நோயிலிருந்து குணமாக உதவக்கூடிய சக்தியைத் தரும் அரும் மருந்து.

#24. உண்பதற்காக உயிர் வாழாதீர்கள். உயிர் வாழ மட்டுமே உண்ணுங்கள்.

#25. இயலுமான வரை புன்னகையையும், அமைதியையும் கடைப்பிடியுங்கள்.. மனமும் உடலும் ஆரோக்கியமாகும்.

#26. இலட்சியம் இல்லா வாழ்க்கை உப்பில்லா உணவுக்கு ஒப்பானது.. எனவே எமது வாழ்வை ஓர் இலட்சிய பாதையில் செலுத்த வேண்டும்.

#27. உனக்கு நீயே நீதிபதியாக இரு.. தவறு செய்த தருணத்தில் நீதிக்கு புறம்பாக தப்பிக்க முயற்சி செய்யாதே.

#28. வெற்றியைத் தேடி நீ செல்லாதே.. உன் மீது முழு நம்பிக்கை வை.. வெற்றி உன்னைத் தேடி வரும்.

#29. மரணமே வந்தாலும் கலங்காதீர்கள்.. தோல்வியை கண்டு அஞ்சாதவனை.. வெற்றி துரத்தி கொண்டே வரும்.

#30. போராடி தோற்பதும் வெற்றி தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

You May Also Like:
One Line Quotes In Tamil
வாழ்க்கை தத்துவம் கவிதை