இந்த பதிவில் பலரும் விரும்பும் சுவை மிகுந்த புதினா துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். உணவில் தொட்டு சாப்பிட இந்த புதினா துவையல் அதிகம் பயன்படுகின்றது.
Table of Contents
புதினா துவையல் செய்வது எப்படி
காலையிலும் சரி⸴ மாலையியும் சரி நாம் உணவில் தொட்டுக் கொள்வதற்குக் புதினா துவையல் சிறந்ததாகும். அதேவேளை ஆரோக்கியமானதாகவும் சுவை மிக்கதாகவும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவை ஜீரணிக்க வைக்கவும் புதினாத் துவையல் உதவுகின்றது.
வெறும் சாதத்தில் துவையலை போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். அல்லது சாப்பாட்டிற்கு சைட் டிஸ் ஆகவும் வைத்துச் சாப்பிடலாம். இப்படிப்பட்ட சட்னியை தெரிஞ்சுக்கோங்க! சுவையான புதினா துவையல் காரசாரமாக ஐந்து நிமிடத்தில் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புதினா | ஒரு கப் |
புளி | தேவையான அளவு |
உழுத்தம் பருப்பு | 1 டீஸ்பூன் |
கடுகு | 1/2 டீஸ்பூன் |
காய்ந்த மிளகாய் | தேவையான அளவு (காரத்திற்கு ஏற்ப) |
உப்பு | தேவையான அளவு |
எண்ணெய் | தேவையான அளவு |
புதினா துவையல் செய்யும் முறை
- புதினாக் கீரையை நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கடாயை வைத்து ஒரு டீஸ்பூன் அளவு அதில் எண்ணெய் ஊற்றி கடுகு⸴ உளுத்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டும் சிறிது வதங்கியதும் அதில் காய்ந்த மிளகாயையும் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் புதினா இலையைப் போட்டு அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வதக்கிய புதினா⸴ ஊற வைத்த புளி⸴ உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அதனுள் வதக்கி வைத்த உளுந்து⸴ வரமிளகாய்⸴ கடுகு ஆகியவற்றுடன் கொஞ்சமாக நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் இவற்றை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர்⸴ அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் புதினா துவையலை சேர்த்து அதை ஒருமுறை கிளறி ஒரு பாத்திரத்தில் எடுத்துப் பரிமாறவும்.
இப்போது சுவையான புதினா துவையல் ரெடி!!!
புதினா மருத்துவ பயன்கள்
சட்னி அல்லது ஜூஸ் எந்த விதத்தில் பயன்படுத்தினாலும் இதன் மருத்துவ குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.
- அசைவ உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை இது எழுத்தில் ஜீரணமாக்க உதவுகின்றது.
- இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டவை.
- வாய் துர்நாற்றம் நீங்கும்.
- பெண்களின் மாதவிலக்கு பிரச்சனை தீர புதினா கீரை உதவுகின்றது.
- உஷ்ண பாதிப்புகள் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.
- ஆஸ்த்மா சுவாச கோளாறுகளை சீராக்க உதவுகின்றது.
- பசி உணர்வை தூண்டும்.
- புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.
- புதினா இலை சாற்றினை முகத்திற்கு பயன்படுத்தினால் முகப்பருக்களை குறைக்கலாம்.
You May Also Like: