பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கட்டுரை

Plastic Katturai In Tamil

இந்த பதிவில் “பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கட்டுரை” பதிவை காணலாம்.

மனிதர்களுக்கு மட்டுமின்றி பிற உயிரினங்களுக்கும் சூழலுக்கும் நெகிழி பல பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. இதனால் நெகிழி கழிவுகளை உரிய முறையில் அகற்ற வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிளாஸ்டிக்கின் பயன்பாடு
  3. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள்
  4. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள்
  5. தவிர்க்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பட்டு வருகின்றது. ஆனால் அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் எப்படிக் கட்டுப்படுத்தப்படுகின்றது என்பதில் தான் சிக்கல் உருவாகியுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டின் முக்கிய பங்கை பிளாஸ்டிக் கழிவுகள் வகிக்கின்றன. ஆனாலும் பிளாஸ்டிக் மற்றும் அது தொடர்பான பொருட்கள் மனித இனம் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத தோழமையாக இருந்து வருகின்றது.

இருப்பினும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை என்பது அவசியமான ஒன்றாகவுள்ளது. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பற்றி இக் கட்டுரையில் காண்போம்.

பிளாஸ்டிக்கின் பயன்பாடு

பிளாஸ்டிக்கானது நாடு முழுவதிலும் பயன்படுத்தப்படும் பொருளாக உள்ளது. மருத்துவத்துறை தொடக்கம் சாதாரண சமையல் வரை பிளாஸ்டிக்கின் பயன்பாடு உள்ளது.

சமையல் பாத்திரங்கள்⸴ குடிநீர்ப் போத்தல்கள்⸴ பால்⸴ காய்கறி⸴ துணிக்கடை⸴ மின்னனு⸴ தேனீர் கடை போன்ற பல விடயங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. அன்றாட வாழ்வின் செயற்பாடுகளிலும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு இரண்டறக் கலந்துள்ளது.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள்

பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும்⸴ சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதனால் இந்திய அரசு பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளை 2016ல் ஏற்படுத்தியது.

இதில் தற்போது வரை பல திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளது. 50 மைக்ரான் தடிமனுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளைத் தேசிய அளவில் தடை செய்துள்ளது.

தழிழக அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி 2016ல் மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள்

பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவது மட்டுமன்றி சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

கால்நடைகள்⸴ விலங்குகள் உணவுடன் உட்கொள்ளுவதால் உணவுக் குழாய் அடைப்பு மட்டுமல்லாது மரணமும் அடைகின்றன.

மண்ணின் தரம் குறைவதுடன் நிலம் மாசுபடுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடைகள் மற்றும் கால்வாய்களில் சிக்கி அடைப்பினை ஏற்படுத்துகின்றன. இதனால் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.

நீர்வளம் பாதிப்படைவதுடன் கடல் வாழ் உயிரினங்களும் அழிவை எதிர் நோக்குகின்றன.

தவிர்க்கும் வழிமுறைகள்

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு பதிலாக வேறு பொருட்களைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக காகித பைகளைப் பயன்படுத்தலாம். இவை விரைவில் உக்கலடையும் பொருட்களாகும். பிளாஸ்டிக் கழிவுகளைக் கண்ட இடங்களில் வீசாமல் உரிய முறையில் அகற்ற வேண்டும்.

பண்டைய காலங்களில் வாழை இலையில் சாப்பிடுவது⸴ துணிப்பைகளில் தாம்பூலப் பைகள் தருவது போன்றவற்றை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனை நாமும் கடைப்பிடித்தல் வேண்டும். பிளாஸ்டிக் தொடர்பான விழிப்பணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

முடிவுரை

சுற்றுச்சூழல் தூய்மை பேணப்படும் போது தான் நாடும்⸴ நாட்டு மக்களும் நலம் பெற முடியும். இதற்கு மக்கள் பொலித்தீன் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வுடன் செயல்படல் அவசியமாகும்.

பிளாஸ்டிக் மாசுவை நீக்க அனைவரும் நம்மாலான ஒத்துழைப்பு மற்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

You May Also Like :

தூய்மை பற்றிய கட்டுரை