அழகான வெளித்தோற்றத்தை முகத்தில் புன்னகை மூலம் காட்டுவதிலும் பற்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. பற்கள் வெள்ளையாக இருப்பது என்பது அழகின் ஒரு பகுதியாக இருப்பது மட்டுமல்லாமல், சுகாதாரத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
பல் முளைக்கும்போது வெள்ளை நிறத்தில் இருக்கின்ற பற்கள். வயது ஆக ஆக அந்தப் பொலிவு குறைந்து கொஞ்சம் மஞ்சள் நிறத்துக்கு மாறும்.
எனாமல் எனும் வெளிப்பூச்சு தேய்ந்து ‘ஹடென்டின்’ எனும் உள்பகுதி வெளியில் தெரியத் தொடங்குவதே முதுமையில் ஏற்படுகிற பல்லின் நிறமாற்றத்துக்கு அடிப்படைக் காரணம்.
ஆனால், பலருக்கும் இளமையிலேயே பற்களின் நிறம் மாறிவிடுகின்றது. பற்களின் மஞ்சள் கறையை நீக்குவது பற்றி இப்பதிவில் காணலாம்.
பற்களில் மஞ்சள் கறை நீங்க
#1. பழங்களின் தோல்
எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் வாழைப்பழம் போன்ற பழங்களின் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இப்பழங்களின் தோல்களில் டி-லிமோனென் என்னும் சேர்மம் நிறைந்திருக்கிறது.
வைட்டமின் சி, டி-லிமோனென் ஆகிய இரண்டும் பற்களை வெண்மையாக்கும் பண்பு கொண்டவை. எனவே தினமும் இத்தோல்களை கொண்டு பல் துலக்கி வந்தால் பல்லின் மஞ்சள் கறை நீங்கும்.
#2. வாய்ச் சுத்தத்தை பேணுதல்
தினமும் காலையிலும் மற்றும் இரவில் தூங்கச் செல்லும் முன்பும் பல் துலக்க வேண்டும். பற்களில் கறை படியாமல் இருப்பதற்கு அது உதவியாக இருக்கும்.
#3. உப்பு
உப்புடன் எலுமிச்சைச் சாறு சிறிதளவு கலந்து தினமும் பல் துலக்கி பின் குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி பற்கள் பிரகாசமாகத் தெரியும்.
#4. மென்மையான பற்தூரிகையைப் பயன்படுத்துதல்
தடிமனான நரம்புகளை உடைய பற்தூரிகையை பயன்படுத்துவதால், பற்களின் மீது இருக்கும் எனாமலில் சேதம் ஏற்படும். எனவே மென்மையான பிரஷ்ஷை (பற்தூரிகை) பயன்படுத்துவது சிறந்தது.
#5. தினமும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்
பற்கள் மஞ்சளாக மாறுவதற்கு வாய் மட்டுமல்லாது, நாக்குகளின் மீது படிந்திருக்கும் அழுக்குகளும் காரணமாக இருக்கின்றன. எனவே வாயின் அனைத்து பகுதிகளையும், நாக்கையும் முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.
#6. ஆரோக்கியமான உணவுமுறை
நாம் உட்கொள்ளும் உணவுகளானவை பற்களின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு உதவுகின்றன.
எனவே விட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் பற்களின் மஞ்சள் கறை நீங்கி பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். ஆப்பிள், கேரட், வெள்ளரிக்காய் ஆகியவையும் பற்களை வெண்மையாக வைத்திருக்க உதவும்.
#7. பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு
இவை இரண்டும் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறையை போக்குவதற்கு மிகவும் சிறந்த நிவாரணிகள் ஆகும். 1 தேக்கரண்டி பேக்கிங் சோடாவுடன் 2 தேக்கரண்டி ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்து பல் துலக்குவதன் மூலம் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கலாம்.
#8. முன்னோர் வழிமுறை
நம் முன்னோர்கள் முன்பெல்லாம் சாம்பல், கரி, வேப்பங்குச்சி போன்றவற்றை கொண்டு பற்களை துலக்கி வந்தார்கள். எனவே இவற்றை அன்றாடம் பயன்படுத்தும் போது பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும்.
#9. கொய்யா இலை
தினமும் கொய்யா இலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று, பின் அதனை துப்ப வேண்டும். இப்படி செய்து வந்தால், பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.
#10. கற்றாலை ஜெல்
தினமும் இரண்டு முறை கற்றாளை ஜெல்லை நன்கு கழுவியபின் பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வந்தால், பற்கள் வெண்மையாகும்.
You May Also Like: |
---|
மாதுளை இலையின் பயன்கள் |
வில்வம் மருத்துவ பயன்கள் |