தமிழர்களது பெருமைகள் பற்றி எடுத்துரைப்பதாக பல நூல்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சங்க கால இலக்கியங்களான பத்துப்பாட்டுக்களும் உள்ளடங்கும்.
பத்துப்பாட்டு எனும் பெயர் வழக்கு இடைக்காலத்தில் தோன்றியது. பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக் கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது.
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
Table of Contents
பத்துப்பாட்டு நூல்கள் யாவை
- திருமுருகாற்றுப் படை
- பொருநராற்றுப் படை
- சிறுபாணாற்றுப் படை
- பெரும்பாணாற்றுப் படை
- முல்லைப்பாட்டு
- மதுரைக் காஞ்சி
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப் பாட்டு
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
பத்துப்பாட்டு நூல்கள் ஆசிரியர் பெயர்கள்
பத்துப்பாட்டு நூல்கள் | ஆசிரியர் பெயர்கள் |
---|---|
திருமுருகாற்றுப்படை | நக்கீரர் |
பொருநராற்றுப்படை | முடத்தாமக் கண்ணியர் |
சிறுபாணாற்றுப்படை | நல்லூர் நந்தனார் |
பெரும்பாணாற்றுப்படை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் |
முல்லைப்பாட்டு | நம்பூதனார் |
மதுரைக்காஞ்சி | மாங்குடி மருதனார் |
நெடுநல்வாடை | நக்கீரர் |
குறிஞ்சிப்பாட்டு | கபிலர் |
பட்டினப்பாலை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் |
மலைபடுகடாம் | பெருங்கௌசிகனார் |
பத்துப்பாட்டு நூல்கள் அடிகள்
நூலின் பெயர் | ஆசிரியர் | அடிகள் | பா வகை |
---|---|---|---|
திருமுருகாற்றுப்படை | நக்கீரர் | 317 | ஆசிரியப்பா |
பொருநராற்றுப்படை | முடத்தாமக் கண்ணியர் | 248 | ஆசிரியப்பா |
சிறுபாணாற்றுப்படை | நல்லூர் நந்தனார் | 269 | ஆசிரியப்பா |
பெரும்பாணாற்றுப்படை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் | 500 | ஆசிரியப்பா |
முல்லைப்பாட்டு | நம்பூதனார் | 103 | ஆசிரியப்பா |
மதுரைக்காஞ்சி | மாங்குடி மருதனார் | 782 | ஆசிரியப்பா, வஞ்சிப்பா |
நெடுநல்வாடை | நக்கீரர் | 188 | ஆசிரியப்பா |
குறிஞ்சிப்பாட்டு | கபிலர் | 261 | ஆசிரியப்பா |
பட்டினப்பாலை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் | 301 | ஆசிரியப்பா, வஞ்சிப்பா |
மலைபடுகடாம் | பெருங்கௌசிகனார் | 583 | ஆசிரியப்பா |
பத்துப்பாட்டு நூல்களின் வேறு பெயர்கள்
பத்துப்பாட்டு நூல்கள் | வேறு பெயர்கள் |
---|---|
திருமுருகாற்றுப்படை | முருகு, புலவாரற்றுப்படை |
பொருநராற்றுப்படை | |
சிறுபாணாற்றுப்படை | சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்) |
பெரும்பாணாற்றுப்படை | பாணாறு, சமுதாயப் பாட்டு |
முல்லைப்பாட்டு | நெஞ்சாற்றுப்படை, முல்லை |
மதுரைக்காஞ்சி | மாநகர்ப்பாட்டு (ச.வே.சுப்பிரமணியன்), கூடற் தமிழ், காஞ்சிப்பாட்டு |
நெடுநல்வாடை | பத்து பாட்டின் இலக்கிய கருவூலம், மொழிவளப் பெட்டகம், சிற்பப் பாட்டு |
குறிஞ்சிப்பாட்டு | பெருங்குறுஞ்சி (நச்சினார்கினியர், பரிமேழலகர்), களவியல் பாட்டு |
பட்டினப்பாலை | வஞ்சி நெடும் பாட்டு (தமிழ் விடு தூது), பாலைபாட்டு |
மலைபடுகடாம் | கூத்தராற்றுப்படை |
பத்துப்பாட்டு நூல்கள் விளக்கம்
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை ஆகும்.
மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல் நூலாக வைத்து எண்ணப்படுகிறது.
நூல் பெயர் | திருமுருகாற்றுப்படை |
நூல் ஆசிரியர் | நக்கீரர் |
பாட்டுடைத்தலைவன் | முருகன் |
பாடல் அடி | 317 |
பா வகை | ஆசிரியப்பா |
பொருநராற்றுப்படை
முடத்தாமக் கண்ணியார் எனும் ஆசிரியரால் இயற்றப்பட்டது. கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூல் 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பாவாலானது.
தமிழரின் பண்பாடான விருந்தினரை ஏழடி நடந்து சென்று வரவேற்றலும், வழியனுப்புதலும் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
நூல் பெயர் | பொருநராற்றுப்படை |
நூல் ஆசிரியர் | முடத்தாமக் கண்ணியார் |
பாட்டுடைத்தலைவன் | சோழன் கரிகாலன் |
பாடல் அடி | 248 |
பா வகை | ஆசிரியப்பா |
சிறுபாணாற்றுப்படை
நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் 269 அடிகளாலமைந்தது.
கடையெழு வள்ளல்களான பாரி, பேகன், காரி, ஓரி போன்றோர் கொடை வழங்குவதில் வள்ளன்மை படைத்தவர்கள் என்பதை சிறப்பாக கூறியுள்ளார்.
நூல் பெயர் | சிறுபாணாற்றுப்படை |
நூல் ஆசிரியர் | நல்லூர் நத்தத்தனார் |
பாட்டுடைத்தலைவன் | நல்லியக்கோடன் |
பாடல் அடி | 269 |
பா வகை | ஆசிரியப்பா |
பெரும்பாணாற்றுப்படை
இது கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர், காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனைப் புகழ்ந்து பாடிய 500 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.
இந்நூலானது, பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனை தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
நூல் பெயர் | பெரும்பாணாற்றுப்படை |
நூல் ஆசிரியர் | கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
பாட்டுடைத்தலைவன் | தொண்டைமான் இளந்திரையன் |
பாடல் அடி | 500 |
பா வகை | ஆசிரியப்பா |
முல்லைப்பாட்டு
இந்நூலை பாடியவர் காவிரிப்பூம்பட்டினம் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். முல்லைத் திணையைப் பாடியதால் முல்லைப் பாட்டு எனப்பட்டது.
பத்துப்பாட்டுள் சிறிய நூல் இதுவே. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது.
நூல் பெயர் | முல்லைப்பாட்டு |
நூல் ஆசிரியர் | நப்பூதனார் |
பாட்டுடைத்தலைவன் | பாண்டியன் நெடுஞ்செழியன் |
பாடல் அடி | 103 |
பா வகை | ஆசிரியப்பா |
மதுரைக் காஞ்சி
பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான இது 782 அடிகளைக் கொண்டது. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார்.
நூல் பெயர் | மதுரைக் காஞ்சி |
நூல் ஆசிரியர் | மாங்குடி மருதனார் |
பாட்டுடைத்தலைவன் | பாண்டியன் நெடுஞ்செழியன் |
பாடல் அடி | 782 |
பா வகை | ஆசிரியப்பா, வஞ்சிப்பா |
நெடுநல்வாடை
இந்நூல் ஆசிரியப்பாவாலான 188 அடிகளைக் கொண்டது. இதனை இயற்றியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
இவரும் திருமுருகாற்றுப்படை ஆசிரியரும் வெவ்வேறு புலவர்கள் என்பர். இருவரும் ஒருவரே என்பவர்களும் உண்டு. இப்பாட்டில் இடம்பெறும் கூதிர்கால வருணனையொன்றே புலவரின் பெருமையை நிலைநாட்ட வல்லது.
நூல் பெயர் | நெடுநல்வாடை |
நூல் ஆசிரியர் | நக்கீரர் |
பாட்டுடைத்தலைவன் | பாண்டியன் நெடுஞ்செழியன் |
பாடல் அடி | 188 |
பா வகை | ஆசிரியப்பா |
குறிஞ்சிப் பாட்டு
ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழ் அகத்திணைச் சிறப்பைக் கூறும் நோக்கத்தில் குறிஞ்சிக் கபிலர் இயற்றியது இச்செய்யுள். இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டான இதற்குப் பெருங்குறிஞ்சி என்றொரு பெயரும் உண்டு.
நூல் பெயர் | குறிஞ்சிப் பாட்டு |
நூல் ஆசிரியர் | கபிலர் |
பாட்டுடைத்தலைவன் | ஆரிய அரசன் பிரகத்தன் |
பாடல் அடி | 261 |
பா வகை | ஆசிரியப்பா |
பட்டினப் பாலை
கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவரால் இயற்றப்பட்டது. பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்புகின்றது.
நூல் பெயர் | பட்டினப் பாலை |
நூல் ஆசிரியர் | கடியலூர் உருத்திரங்கண்ணனார் |
பாட்டுடைத்தலைவன் | சோழன் கரிகாலன் |
பாடல் அடி | 301 |
பா வகை | ஆசிரியப்பா, வஞ்சிப்பா |
மலைபடுகடாம்
பத்துப்பாட்டு நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இதுவாகும். 583 அடிகளாலானது. இப் பாடலை இயற்றியவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவராவார்.
நன்னன் நாட்டு மக்கள் வாழும் வாழ்க்கை முறைகளும், அவர்களின் விருந்தோம்பல் சிறப்பும், நன்னன் ஊரின் பெருமையும், அவன் கலைஞர்கட்குப் பரிசளிக்கும் சிறப்பும் அழகாகக் கூறப்பட்டுள்ளன.
நூல் பெயர் | மலைபடுகடாம் |
நூல் ஆசிரியர் | பெருங்கௌசிகனார் |
பாட்டுடைத்தலைவன் | நன்னன் சேய் நன்னன் |
பாடல் அடி | 583 |
பா வகை | ஆசிரியப்பா |
You May Also Like : |
---|
வாசிப்பின் நன்மைகள் |
கடையேழு வள்ளல்கள் |