தக்காளி தொக்கு செய்வது எப்படி

Thakkali Thokku Seivathu Eppadi

பொதுவாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தக்காளி தொக்கு செய்வார்கள். அந்தவகையில் சுவை மிகுந்த ஒரு தக்காளி தொக்கு செய்வது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

லஞ்ச் பாக்ஸிற்கும் எற்ற ரெசிபி. இட்லி⸴ தோசை⸴ சப்பாத்திக்கு ஏற்றது. சோறுடன் பிசைந்து சாப்பிடவும் அட்டகாசமாய் இருக்கும்.

சரி பிரியாணி சுவையில் தக்காளி தொக்கு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க!

தக்காளி தொக்கு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

வெங்காயம்1/4 Kg
தக்காளி1/2 Kg
எண்ணெய்3 டீஸ்பூன்
பட்டைசிறிதளவு
ஏலக்காய்1
கிராம்பு3
சோம்பு1 டீஸ்பூன்
கறிவேப்பிலைதேவையான அளவு
உப்புதேவையான அளவு
பச்சைமிளகாய்3
புதினா தேவையான அளவு
இஞ்சிச்பூண்டு விழுது1 ½ ஸ்பூன்
மஞ்சள் தூள்சிறிதளவு
மிளகாய்த்தூள்2 டீஸ்பூன்

தக்காளி தொக்கு செய்முறை

ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் சிறிதளவு பட்டை⸴ ஏலக்காய்⸴ கிராம்பு சேர்த்து கூடவே சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் சோம்பு நன்கு பொரிந்து வந்ததும் 3பெரிய வெங்காயம்⸴ கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி⸴ தேவையான அளவு உப்பு⸴ பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் தேவையான அளவு புதினா இலை சேர்த்து கொள்ளவும்.

பின்னர் இஞ்சி பூண்டு சேர்த்து இஞ்சி பூண்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

அடுத்து சிறிதளவு மஞ்சள் தூள்⸴ மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி இலை தூவி ஒரு பாத்திரத்தில் மாற்றிப் பரிமாறவும்.

இப்போது சுவையான பிரியாணி சுவையில் தக்காளி தொக்கு ரெடி!!!

You May Also Like:

வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி

வெண் பொங்கல் செய்வது எப்படி