பசுமை பட்டாசு என்றால் என்ன

pasumai pattasu in tamil

பசுமை பட்டாசு என்றால் என்ன

தீபாவளி என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது பட்டாசுகள்தான். சிறியவர்கள் முதல் பெரியவரிகள் வரை எல்லோருக்கும் பட்டாசு வெடிக்க வைப்பது மிகவும் பிடித்த ஒன்றாகும்.

கண்பவுடர் என்று சொல்லப்படும் துப்பாக்கிகளின் எரிபொருளாகப் பயன்படுத்தக் கூடிய வேதிப் பொருட்கள்தான் பட்டாசுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. இவை எரிவது மட்டுமல்லாது வெடிக்கும் தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன.

வெவ்வேறு நிறங்களிலும் வித்தியாசமான பட்டாசுகளையும் தயாரிப்பதற்கு கார்பன், போரியம், சோடியம், கல்சியம், அயன் எனப் பல்வேறு வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவார்கள்.

இந்த வழக்கமான பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கக் கூடியனவாக உள்ளன. இவை கார்பன், நைட்ரஐன், சர்பர் மற்றும் ஆக்சைட்டுக்களை உற்பத்தி செய்கின்றன.

இவை சுற்றுச்சூழலைப் பாதிப்பது மட்டுமல்லாது பசுமை இல்லா விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. இதனால் ஓசோன் படலமும் பாதிப்படைகின்றது. அதுமட்டுமல்லாது மக்களுக்கும் பல்வேறு வகையான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

இந்த வாயுக்களை மக்கள் சுவாசிப்பதனால் இதயக்கோளாறுகள், சுவாச நோய்க்கோளாறுகள், நரம்பு மண்டலக் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்துகின்றது.

ஜலதோசம், இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் தொண்டை மற்றும் மார்பு எரிச்சலை ஏற்படுத்தும். பட்டாசுகளால் ஏற்படும் சத்தத்தால் ஒலி மாசுபாடும் ஏற்படுகின்றது.

இதனால் அமைதியின்மை, தற்கால அல்லது நிரந்தரக் காது கேளாமை, உயர் இரத்த அழுத்தம், குழந்தைகளின் மோசமான நினைவாற்றல் வளர்ச்சி போன்ற மோசமான பல பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

அத்துடன் பட்டாசுகளில் உள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்றாலே அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மரணத்தையும் ஏற்படுத்தலாம்.

இதற்காக முழுமையாக பட்டாசுகளைத் தவிர்த்துவிடவும் இயலாது. மக்கள் தங்கள் சந்தோசத்தை பட்டாசு கொழுத்தி கொண்டாடுவதுடன் பண்டிகைக் காலங்களில்தான் மக்கள் ஒன்றினைகின்றார்கள்.

எனவே பட்டாசுகளைத் தடை செய்வதற்குப் பதிலாக மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். அந்த முயற்சியின் பயனாகவே பசுமைப் பட்டாசுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

தண்ணீரில் உருவாகும் பட்டாசுகள் (இவ்வகைப் பட்டாசுகள் வெடித்த பின்பு காரியமாக மாறாமல் நீர்த்துளிகளாக மாறிவிடும்.)

கந்தக மற்றும் நைட்ரஐன் குறைவாக வெளியிடுபவை, அலுமினியம் குறைவாகப் பயன்படுத்தப்படுபவை, அரோமா பட்டாசு போன்ற வகைகள் பசுமைப் பட்டாசுகளில் காணப்படுகின்றன.

பெயர்க் காரணம்

பசுமைப் பட்டாசுகள் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் குறைந்தளவு தீங்குகளை விளைவிக்கின்றது. இதனாலேயே இவற்றைப் பசுமை பட்டாசுகள் என்கின்றார்கள்.

பசுமை பட்டாசு என்றால் என்ன

பசுமைப் பட்டாசுகள் என்பது சாதாரண பட்டாசு வெடிப்பதை போல் தான் இருக்கும். ஆனால் பசுமைப் பட்டாசிலிருந்து வெளிவரும் மாசு குறைவானதாகும். அதாவது சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும் போது பசுமைப் பட்டாசுகள் 36 – 40 விகிதம் வரை மாசுபாட்டைக் குறைக்கின்றது.

அதாவது பசுமை பட்டாசுகள் சல்பர் நைட்ரேட்டுகள், ஆர்சனிக், மெக்னீசியம், சோடியம், ஈயம் மற்றும் பேரியம் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாதவையாகவும், காற்று மாசை குறைக்கக்கூடிய மாற்று மூலப்பொருட்கள் கொண்டும் தயாரிக்கப்பட்டிருக்கும்.

பசுமைப் பட்டாசு என்பது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் (NEERI) கண்டுபிடிப்பாகும். இது அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் வரும் அரசு நிறுவனமாகும்.

இத்தகைய பசுமைப் பட்டாசுகளைச் சந்தையில் வாங்கும் போது இதனை இணங்காண்பது எவ்வாறெனில் பட்டாசுகளின் பெட்டிகளில் தனித்துவமான லோகோ இருக்கும். அதனுடன் உற்பத்தி மற்றும் விற்பனைத் தகவல்கள் கொண்ட QR கோடுகளும் காணப்படும்.

Read more: இன எழுத்துக்கள் என்றால் என்ன

எழுத்து என்றால் என்ன