இன எழுத்துக்கள் என்றால் என்ன

ina eluthukkal endral enna in tamil

மனித இனத்திற்கு உறவும், நட்பும் இருப்பதைப் போன்றே எழுத்துக்களுக்கும் உறவும், நட்பும் உண்டு. எழுத்துக்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு விளங்குகின்றன. தமிழ் எழுத்துக்களில் பெரும்பாலானவை ஒப்புமை உடையவை.

இவ்வாறு ஒப்புமையுடைய எழுத்துக்கள் இன எழுத்துக்களாகும். சாதாரணமாக பாமரர்கள் சொல்லும் பழமொழிகளிலேயே இன எழுத்தைப் பயன்படுத்தி மோனை நயத்தைக் கூட்டுவர்.

“ஊர்வாயை மூட உலைவாய் உண்டா?”, “ஒரு கை தட்டினால் ஓசை எழுமா?”, “அகல உழுவதைவிட ஆழ உழு” இவ்வாறு நூற்றுக்கணக்கான உதாரணங்களைக் கூற முடியும். இன உழுத்துக்களில் மிகப் பிரபல்யமான பயன்பாடு மோனை எழுத்துக்களேயாகும்.

இன எழுத்துக்கள் என்றால் என்ன

முதல் எழுத்துக்கள் முப்பதையும் சில குறிப்பிட்ட விதங்களாக யோடி சேர்த்துக் குறிப்பிடுவதைதான் இன எழுத்துக்கள் என்கின்றது இலக்கணம்.

ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம், ஒலிக்கும் கால அளவு, உருவம் ஆகியவற்றில் ஒன்று மற்றொன்றோடு ஒற்றுமையுள்ள எழுத்துக்கள் இன எழுத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அதாவது, இனவெழுத்துகள் என்பது ஒத்த தன்மையைக் கொண்ட எழுத்துக்களைக் குறிக்கும். இவை எழுத்துகளின் வடிவம், எழுத்துக்கள் பிறக்கும் இடம், எழுத்துக்களை ஒலிப்பதற்கான முயற்சி மற்றும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.

எழுத்துக்களை இனம் பிரிப்பதற்கான காரணங்கள்

எழுத்துக்களை ஏன் இனம் பிரிக்க வேண்டும் என்பதற்கு நன்னூலில் விளக்கம் கூறப்பட்டுள்ளது. அதாவது, இனமாவதற்கு காரணம் “தானம் முயற்சி அளவு பொருள் வடிவு ஆன ஒன்று ஆதி ஓர் புடை ஒப்பு இனமே” எனப்படுகின்றது.

  1. எழுத்துக்களின் பிறப்பிடம் (நெஞ்சு, தொண்டை, மூக்கு, தலை)
  2. பிறப்பதற்குரிய முயற்சியாகிய தொழில் (உதடு, பல், நாக்கு, அண்ணம் இவற்றின் தொழில்)
  3. எழுத்துக்கள் ஒலிக்க எடுக்கும் கால அளவு (மாத்திரை)
  4. எழுத்துக்கள் இடம்பெறும் சொல்லின் பொருளிசை (அங்கு, ஆங்கு)
  5. எழுத்தின் வடிவம் (வரிவடிவம்)

ஆகிய ஐந்து எழுத்துக்கள் இனமாவதற்குக் காரணமாக அமைகின்றன. இவற்றுள் ஒன்றோ அல்லது பலவோ ஒத்திருப்பின் இவை இன எழுத்துக்கள் எனக் கருதப்படுகின்றன.

மெய் எழுத்துக்கள்

ஆறு வல்லின மெய் எழுத்துக்களுக்கும் (க ச ட த ப ற) ஆறு மெல்லின எழுத்துக்களும் இன எழுத்துக்கள் ஆகும். சொற்களில் மெல்லின மெய் எழுத்தை (ங ஞ ண ந ம ன) அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.

எடுத்துக்காட்டுக்கள் :

ங், க் – திங்கள்
ஞ், ச் – மஞ்சள்
ண், ட் – மண்டபம்
ந், த் – தங்கம்
ப், ம் – கம்பம்
ன், ற் – நன்றி

இடையின எழுத்துக்களுக்கு இன எழுத்துக்கள் இல்லை. இடையின எழுத்துக்கள் (ய ர ல வ ழ ள) ஆறும் ஒரே இனமாகும்.

உயிர் எழுத்துக்கள்

ஒவ்வொரு நெடில் எழுத்துக்களுக்கும் அதற்கு நிகரான குறில் எழுத்து இன எழுத்துக்களாகும்.

எடுத்துக்காட்டு :

(அ – ஆ), (ஈ – இ), (ஊ – உ), (ஏ – எ), (ஐ – இ), (ஓ – ஒ), (ஒள – உ)

  • ஓஒதல்
  • தூஉம் – (தூ [த் + ஊ] உம்)
  • தழீஇ – ( தழீ [ழ் + ஈ] இ )

அளபெடைகளில் மட்டும்தான் ஒரு நெடில் எழுத்துக்கு அதனோடு குறில் எழுத்து இன எழுத்தாக வரும். ஆயுத எழுத்துக்கு இன எழுத்துக்கள் இல்லை.

Read more: உவமை அணி என்றால் என்ன

அளபெடை என்றால் என்ன