நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய கட்டுரை

Subhash Chandra Bose Katturai In Tamil

இந்த பதிவில் “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

மதங்கள், இனங்கள் தாண்டி மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்த தலைவராக மக்களால் பார்க்கப்படுகிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பும்
  3. ஆரம்பகால வாழ்க்கை
  4. சுதந்திர போராட்ம்
  5. இந்தியாவின் இரும்பு மனிதர்
  6. இவரது சாதனைகள்
  7. முடிவுரை

முன்னுரை

இந்தியாவின் சுதந்திரத்துக்கு பல ஆணி வேர்கள் காணப்பட்டன. அவற்றில் மிகவும் முக்கியமானவர் நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். இவர் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்ட தலைவராக விளங்கினார்.

இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும் அதற்கு ஆயுதவழி போர் தான் சிறந்த வழி என்று கருதி ஒரு இராணுவத்தையே உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து தாக்குதல் நடாத்தியவர்.

நாட்டுக்காக ஆயுதம் ஏந்தி போராடிய மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு

இவர் 23 ஆம் திகதி ஜனவரி மாதம் 1897 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் கட்டாக்கில் பிறந்தார். இவரது தந்தை பெயர் “ஜானகிநாத் போஸ்” தாயின் பெயர் “பிரபாவதி” ஆவார். இவர்கள் இருவருக்கும் ஒன்பதாவது மகனாக இவர் பிறந்தார்.

இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும் தாய் ஒரு தெய்வ பக்தி மிக்கவராகவும் இருந்தார்கள். இவர் ஆரம்பம் முதலே சுறுசுறுப்பும் தைரியம் நிறைந்தவராக காணப்பட்டார்.

ஆரம்பகால வாழ்கை

இவர் தனது ஆரம்ப கல்வியை கட்டாக் இல் உள்ள “பாக்டஸ் மிசன் ஆரம்ப கல்லூரியில்” பயின்றார். தனது 1913 இல் கொல்கத்தா றேவன்ஸா கல்லூரியில் தனது உயர் கல்வியை முடித்தார். கல்வியில் முதல் மாணவனாகவும் திகழ்ந்தார்.

சிறுவயது முதலே விவேகானந்தர் போன்றவர்களின் ஆன்மீக கருத்துக்களை உள்வாங்கினார். கோட்ஸ் சேர்ச் கல்லூரியில் இளங்கலை பட்டத்தை பயின்றார்.

1919 இல் தனது பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க ஜ.சி.எஸ் தேர்வுக்காக லண்டன் சென்று கல்வி கற்று திரும்பினார். 1919 இல் நடந்த “ஜாலியன் வாலாபாக் சம்பவம்” இவரை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட செய்தது.

சுதந்திர போராட்டம்

பாரத நாட்டுக்கான விடுதலைக்காக இவர் “வியன்னா, செக்கஸ்லோவாக்கியா, போலந்து, கங்கேரி, இத்தாலி, ஜேர்மனி, அவுஸ்ரேலியா” போன்ற நாடுகளுக்கு இவர் பயணம் செய்தார்.

தங்களை அடிமைப்படுத்தி வைத்துள்ள ஆங்கிலேயர்களிடம் வேலை செய்ய கூடாது என கருதி தனது பதவியை இராஜினாமா செய்த இவர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

“சீ ஆர் தாஸ்” என்பவரை தனது அரசியல் குருவாக கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட துவங்கினார். காந்தி போன்ற தலைவர்களின் அமைதி உடன்படிக்கைகளில் இவருக்கு உடன்பாடு இருக்கவில்லை.

இதனை தொடர்ந்து 1941 உலகப்போர் நடந்த காலகட்டம் அது இந்தியாவின் சுதந்திரத்துக்காக இவர் ஜேர்மனியின் “ஹிட்லர்” போன்ற தலைவர்களையும் சந்தித்து பேசிஆதரவையும் பெற்றார்.

1944 இல் பர்மாவில் இருந்து இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களை இவர் எதிர்த்தார். இவ்வாறு அவர் இந்தியாவின் சுதந்திரத்துக்காக தனது பங்களிப்பை வழங்கி இருந்தார்.

இந்தியாவின் இரும்பு மனிதர்

இந்தியாவை சுதந்திரம் அடைய அகிம்சை மட்டும் போதாது என்பதை இவர் நன்கு உணர்ந்திருந்தார். ஆங்கில அரசின் அராஜகங்களுக்கு எதிராக ஒரு தீவிரவாத கொள்கையோடு இவர் பயணித்தார்.

உலக நாடுகளின் பலம் பொருந்திய தலைவர்களை சந்தித்து பேசி இந்தியாவின் சுதந்திரத்துக்கான சாத்தியங்களை ஆலோசித்தார். சுதந்திரத்தை அடைய பலம் பொருந்திய இராணுவம் ஒன்றை அமைக்க துணை நாடுகளின் உதவியை நாடினார்.

இந்திய மக்களிடம் உங்கள் இரத்தத்தை எனக்கு தாருங்கள் நான் உங்களுக்கு சதந்திரத்தை தருவேன் என்று இவர் முழக்கமிட்டார் இந்தியர்களின் பலத்தை உலகுக்கு காட்டிய “இரும்பு மனிதர்” என இவர் போற்றப்படுகின்றார்.

இவரது சாதனைகள்

உலக அரசியல் அறிவும் அனுபவமும் உடைய நேதாஜி வல்லரசு நாடுகளின் ஆதரவோடு அவர்களின் கொள்கைகளை இந்திய மக்களிடம் கொண்டு சேர்த்து. இந்தியாவை வல்லரசாக மாற்ற அன்றே அடித்தளம் இட்டிருந்தார்.

இந்திய இராணுவத்தை முதலில் உருவாக்கிய பெருமை இவரையே சாரும். மதங்கள், இனங்கள் தாண்டி மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்த தலைவராக இவர் இந்திய மக்களால் பார்க்கப்படுகிறார்.

உலகின் வல்லரசு நாடுகள் இராணுவ புரட்சி மூலமே சுதந்திரம் அடைந்து வளர்ச்சி பெற்றன. அது போலவே இவரும் இந்தியாவில் இராணுவ புரட்சியினை உருவாக்கினார்.

முடிவுரை

இவரது போராட்டங்களும் காந்தி தலைமையிலான அமைதி வழி போராட்டங்களுக்கும் 1947 இல் வெற்றி கிடைத்து இந்தியா சுதந்திர குடியரசாக மாறியது. நேதாஜியின் கனவும் நிஜமானது.

ஆனால் 1945 இல் நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாக வந்த செய்தி இந்தியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

நேதாஜி உயிருடன் இருப்பதாக மக்கள் நீண்ட காலமாக நம்பினர். எவ்வாறாக இருப்பினும் நேதாஜியின் புகழ் என்றும் இந்திய மக்கள் மனதில் அழியாமல்இருக்கும் என்றால் மிகையல்ல.

You May Also Like :

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு கட்டுரை

தேர்தல் விழிப்புணர்வு கட்டுரை