சிவபெருமானால் எரிக்கப்பட்டு ரதியின் கணவர்

பண்டைய இலக்கியம் முதல் இன்றுவரை அனைவராலும் பேசப்படும் மற்றும் பின்பற்றி விரும்பப்படும் ஒரு விடயம் காதல், அன்பு, நேசம் ஆகும். இத்தகைய காதல் உணர்வுகளை தூண்டுபவர் காமத்தின் அதிபதியான மன்மதன் ஆவார்.

இன்றைய பதிவில் நாம் ரதிதேவியின் கணவரான மன்மதக் கடவுளுடைய விளக்கமான வரலாற்றைப் பார்ப்போம்.

மன்மதனின் தோற்றம்

மன்மதனின் தோற்ற சில புராணங்களில் வெவ்வேறாகக் கூறப்பட்டாலும் காலிக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

காலிக புராணத்தின்படி, பிரம்மன் உட்பட வேறு சில பிரஜாதிபதிகள் அழகில் சிறந்து விளங்கிய சந்தியா என்ற பெண் மீது காதல் வயப்பட்டிருந்த நேரம் பிரம்மாவின் மனதில் இருந்து மன்மதன் கையில் மலர்க் கணைகளுடன் தோன்றினார்.

பிறந்ததும் அவர்களிடம் உங்களில் யாரை நான் மகிழ்விக்க வேண்டும் என வினாவ மண்ணில் உள்ள அனைத்து உயிர்களையும் நீ மகிழ்விப்பாயாக! அத்தோடு தட்சனின் மகள் ரதிதேவியை திருமணம் புரிவாயாக என்று வரமளித்து மன்மதனை பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார் பிரம்மா. அவ்வாறே பூமியில் தோற்றம் பெற்றார் மன்மதன்.

மன்மதனின் மறுபெயர்கள்

  • காமன்
  • கந்தர்வன்
  • வசந்தன்
  • காமதேவன்
  • மதனன்
  • மாயன்
  • மாரன்
  • மபதியன்
  • ப்ரத்யூமனன்
  • கடாயிதுனு
  • மீனகேதனன்
  • சம்சரகுரு
  • தார்பகன்
  • ரகுவர்த்தனன்
  • அனங்கன்
  • ரதி நாயகன்
  • பஞ்சாக்ஷரன்
  • மகரகேது
  • சாம்பராரி
  • புஷ்பகேதனன்
  • மனசிஜன்
  • வாமன்
  • குசுமேசு
  • ருபஸ்த்ரன்
  • அனன்யஜன்
  • முகிரன்
  • புஷ்பதனவன்
  • சமந்தகன்
  • ரதிபதி
  • மதுதீபன்
  • மகரதுவாஜன்
  • திபாகன்
  • ஆத்மபூஷன்
  • ரமணன்
  • இரஜன்
  • காஞ்சனன்
  • இம்சன்
  • ருதுகாலகோலன்
  • கிங்கரன்
  • அபிரூபன்

காமனின் தகனம்

ஒரு சமயம் சிவன் பெரும் தவத்தை மேற்கொண்டிருந்தார். அதே சமயம் பார்வதிதேவியும் சிவனை அடைய கடும் தவம் புரிந்தாள். இதனால் சிவனின் மனதில் பார்வதிதேவி மீதான நேசத்தை உருவாக்க மன்மதனை இந்திர தேவன் அனுப்பி வைத்தார்.

சிவனிடம் சென்ற மன்மதன் தனது மலர்க்கணைகளை சிவனுக்கு ஏவினார். இதன் விளைவாக சிவபெருமானின் தவம் கலைந்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார்.

இந்த சம்பவத்தால் பெரும் துன்பத்திற்கு உள்ளான ரதி தேவி சிவனை வேண்டி மறுபடியும் தன்னுடைய கணவரை உயிருடன் மீட்டுத் தரும்படி தவமிருந்தாள். மனம் இரங்கிய சிவன் ரதி மாயாவதி என்ற பெயருடனும் மன்மதன் கிருஸ்ணன் மற்றும் ருக்மணியின் மகனாகவும் பூவுலகில் பிறப்பார்கள் என்று வரம் அளித்தார்.

மன்மதனின் தோற்ற அமைப்பு

மன்மதனுக்குரிய நிறங்கள் பச்சை மற்றும் சிவப்பு ஆகும். அவரது மேனியில் அந்த நிறத்தின் மேல் ஆபரணங்களுடனும் மலர் அலங்காரங்களுடனும் தோற்றம் கொண்டுள்ளார்.

மன்மதனின் ஆயுதம் கரும்பு ஆகும். கரும்பினை வில்லாக வளைத்து அதிலே தேனால் ஆன நாணினைக் கொண்டிருப்பார். காமனது வாகனம் கிளி. மன்மதனது கொடிச்சின்னம் மகரம் அல்லது சுறாமீன் ஆகக் கருதப்படுகின்றது.

இவை தவிர அசோகம், முல்லை, மா, குவளை, போக உன்மதனம், தபனம், சோசனம், ஸ்தம்பளம், சம்மோஹன் போன்ற மலர்களினால் ஆன மலர்க்கணைகளையும் கையில் கொண்டுள்ளார். மன்மதனுக்குரிய காலம் வசந்த காலம் ஆகும்.

மன்மதனுக்குரிய கோவில்கள் இருந்து மக்கள் அவற்றை வழிபட்டததாகவும் அதற்கு சான்றாகவே காமன் பண்டிகை இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவை தவிர தமிழகத்தில் காமன் எரிப்பு ஆட்டம், காமன் விழா, காமன் கதை பற்றிய தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

தற்காலப் போக்கில் காமன் விழாவாக மாறியுள்ளது என சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்விழா பற்றிய குறிப்புக்கள் மாபெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Read More: நவமி திதி என்றால் என்ன

ஆனி திருமஞ்சனம் என்றால் என்ன