இந்த பதிவில் மிகவும் அவசியமான “நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
நுகர்வோரை பாதிக்கும் வகையில் பொருட்கள் இருக்கும் போது அது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகின்றது.
Table of Contents
நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நுகர்வோர் எனப்படுபவர்கள்
- சட்ட ஏற்பாடு
- நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் அவசியம்
- நுகர்வோரின் உரிமைகள்
- முடிவுரை
முன்னுரை
நாம் அன்றாடம் எமது வாழ்வில் பயன்படுத்தி கொண்டிருக்க கூடிய பலவகையான பொருட்களை வெவ்வேறுபட்ட விற்பனை நிலையங்களில் இருந்து நாம் பெற்று கொள்கின்றோம்.
நாம் விலைகொடுத்து வாங்குகின்ற பொருட்கள் எமக்கு பயனுடையவையாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். ஆனால் இன்றைய சூழ்நிலைகளை பொறுத்தவரையில் தரமற்ற பல சேவைகளையும் பொருட்களையும் சந்தைபடுத்துகின்ற நிலையானது அதிகம் காணப்படுகின்றது.
இவற்றில் இருந்து நுகர்வோர் தங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள சட்டம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இக்கட்டுரையில் நோக்கலாம்.
நுகர்வோர் எனப்படுபவர்கள்
நுகர்வோர் எனப்படுபவர்கள் ஒரு பொருளையோ சேவையினையோ பணம் கொடுத்து வாங்குபவர்களை குறிக்கின்றது. தங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் சுயதேவைகளுக்காகவும் இங்கே பல மில்லியன் கணக்கான நுகர்வோர்கள் எமது நாட்டில் காணப்படுகின்றனர்.
வர்த்தகம் என்பது பிரதானமாக நுகர்வோரை மையமாக கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. நுகர்வோரை திருப்தியடைய செய்யாத வகையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இருக்கும் போது அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
சட்ட ஏற்பாடு
தாம் கொள்வனவு செய்கின்ற பொருட்கள் தரமற்றவையாக காணப்படுகின்ற போது மக்கள் சட்ட ரீதியாக புகார் அளிக்கும் வகையில் 1984 ஆம் ஆண்டளவில் முதன்முறையாக நுகர்வோர் பாதுகாப்பு சட்டமானது கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டம் மிகவும் பிரபல்யமாக இந்தியாவில் காணப்பட்டது. தரமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இது வாய்ப்பளித்தது.
அதனை தொடர்ந்து 2019 இல் புதிய நுகர்வோர் சட்டமானது புதிதாக கொண்டுவரப்பட்டு இன்று நடைமுறையில் உள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் அவசியம்
இந்த சட்ட ஏற்பாடானது நுகர்வோருக்கு மேலும் பல தெளிவுபடுத்தல்களை வழங்குகின்றது.
நுகர்வோர் என்பவர்கள் யாவர், நுகர்வோருக்கு உண்டான உரிமைகள், எந்த விடயங்களுக்காக புகார் அளிக்க முடியும், புகார் அழிப்பது எவ்வாறு என பல விடயங்களை தாங்கியதாக இருப்பதனால் மக்கள் மேலும் இவை தொடர்பாக தெளிவடைந்துள்ளனர்.
தரமற்ற மற்றும் கலப்படம் நிறைந்த உணவுகள் விலை தர உள்ளீடுகள் போன்று அடிப்படையான விடயங்களில் ஏற்படும் மோசடிகளுக்கு எதிராக மக்கள் நியாயம் பெற இந்த சட்டம் பெரிதும் பங்களிக்கின்றது.
நுகர்வோரின் உரிமைகள்
விற்பனை செய்கின்ற பொருட்களை கொள்வனவு செய்ய கூடிய ஒவ்வொருவருக்கும் அது தரமற்றதாக காணப்படுகின்ற போது அது தொடர்பாக முறையிடும் உரிமை காணப்படுகின்றது.
அவர்களது பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில் பாதகமான பொருட்களை விற்பவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்கும் சட்டரீதியாக தீர்வுகளை பெறும் அதிகாரம் உள்ளது.
இத்தகைய சட்டங்கள் அனைத்து நுகர்வோரின் நலன் கருதியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தொடர்பாக அறிந்திருக்க வேண்டியது நுகர்வோரின் கடமைகளாகும்.
முடிவுரை
இன்றைய காலப்பகுதிகளில் சந்தைகளில் இலாபத்தை மட்டும் நோக்காக கொண்டு பலவகையான மோசமான மனித ஆரோக்கியத்துக்கு பங்கம் விளைவிக்க கூடிய ஆரோக்கியமற்ற பொருட்கள் இன்று நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது.
இவற்றினால் மனிதர்களுக்கு பல வகையான ஆபத்தான நோய்நிலைமைகள் இன்று ஏற்படுகின்றது.
இவற்றை தடுத்து நிறுத்த உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் இந்த சட்டங்களை பின்பற்றி தரமான பொருட்களை உற்பத்தி செய்தும் நுகர்வதும் மிகவும் பொருத்தமானதாக அமையும்.
You May Also Like : |
---|
முயற்சி திருவினையாக்கும் கட்டுரை |
மரம் இயற்கையின் வரம் கட்டுரை |